வெற்றியின் ரகசியம் எது
வெற்றியின் ரகசியத்தை அறிய விரும்பிய இளைஞன், ஒருமுறை சாக்ரடீசை சந்தித்தான். அவன் கண்களை உற்று நோக்கிய சாக்ரடீஸ், 'நாளை காலை என்னை ஆற்றங்கரையில் வந்து பார்' என்று சொல்லி அனுப்பினார். மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வந்த அந்த இளைஞனுடன் பேசிக் கொண்டே ஆற்றில் இறங்கினார் சாக்ரடீஸ். கழுத்தளவு நீர் வந்ததும், திடீரென அவனை தண்ணீரில் அமுக்கிப் பிடித்துக் கொண்டார். தடுமாறிப் போன அந்த இளைஞன் காற்றுக்காகவும், தலையை வெளியே எடுக்கவும் போராடினான். நீரிலிருந்து வெளியே வர பெரும் முயற்சி மேற்கொண்டான். சற்று நேரம் கழித்து அவன் தலையை வெளியே இழுத்த சாக்ரடீஸ், அவன் ஆழ்ந்து மூச்சு விட்டுக் கொள்ளும்வரை காத்திருந்தார். பின் அவனிடம்" இந்த சூழலில் எதைப் பெற நீ பெரிதும் போராடினாய்?' என கேட்டார். "காற்றைப் பெற போராடினேன்' என அவன் பதில் அளித்தான். அதற்கு சாக்ரடீஸ் "இதுதான் வெற்றியின் ரகசியம்' என்றார். வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் போராட்டமே நமக்கு வெற்றியை தரும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
No comments:
Post a Comment