வாழ்க்கை என்பது ஒருவழிப்பயணம். ஆனால் வளர்ச்சி என்பது இருவழிப்பயணம்.
ஆம்! முயன்றால் வளர்ச்சி, தளர்ந்தால் வீழ்ச்சி. ஆகவே வாழ்க்கைப் பயணம்
வளர்ச்சியை நோக்கியே இருக்க முயற்சித்துக் கொண்டே இருங்கள். மேலும்,
வாழ்வில் ஒரு முறை நிகழ்ந்த எதுவும் மறுமுறை நிகழ்வதில்லை. கடந்த
பொழுதில நிகழ்ந்தவை மீண்டும் மலர்வதில்லை. காலச் சக்கரம் சுழன்று
கொண்டே இருக்கிறது. ஆகவே எதுவும் திரும்பி வருவதில்லை. வாழ்க்கை என்ற
வாய்ப்பு மறுமுறை மலராத நிகழ்வுகளின் தொகுப்பு என்பதை புரிந்து கொள்ள
வேண்டும். நாம் ஒவ்வொரு நொடியும் நமது கனவுகளின் விடியலை நோக்கி
பயணப்ப்ட்டுக் கொண்டே இருக்கின்றோம்.
நம்பிக்கை கீதம்
உங்களுடைய மன வானொலியில் தன்னம்பிக்கை கீதங்கள் மட்டுமே இருபதினான்கு
மணி நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால்
தன்னம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரம். நமது கனவுகள் நிச்சயம் நனவுகள்
ஆகும் என்று நம்ப வேண்டும். இதைத்தான் வானொலி இயக்குனரும், கவிஞருமாகிய
திரு. ஜெ. கமலநாதன் அவர்கள் “நாளை நமது கனவுகள் நனவுகள் ஆகும்; நலிந்த
கவலைகள் நம்மை விட்டுப் போகும்” என்கிறார். கோவை வானொலி நேயர்களின்
மனதில் தன்னம்பிக்கையை விதைத்து வெற்றியின் இரகசியத்தைப் புரிய வைத்த
இந்த வரிகளை அவரே சொல்லும்போது, கேட்போரின் உடலெங்கும் மின்சாரம்
பாய்ந்து தன்னம்பிக்கையும் உத்வேகமும் உள்ளத்தில் ஒளிர்வதை
உணரமுடியும். பல்லாயிரக்கணக்கான நேயர்களின் கழுத்தில் வெறிமாலை
விழுவதற்கு இந்த வரிகளே காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்தது
என்றால்அது மிகையல்ல; முற்றிலும் உண்மையாகும்.
தினசரி காலை எழுந்தவுடன் “எனது கனவுகள் நிச்சயம் நனவுகள் ஆகும்” என்று
ஆழ்மனதில் அழுத்தமாகச் சொல்லி வாருங்கள். உங்களுடைய எண்ணங்களில்
தன்னம்பிக்கை கலந்து செயலில் உத்வேகம் கொடுப்பதை உணர முடியும்.
தன்னம்பிக்கையும், உழைப்பும் உங்களை ஒருபோதும் கைவிடாது என்பதை
உணர்வீர்கள்.
கனவுக்குக் கரையில்லை
சிலர் கனவு காணக்கூட அஞ்சுவார்கள். ஒரு இலக்கை நோக்கிப்
பயணப்படும்போது, நிச்சயம் இலக்கை அடைவோம் என்று நம்ப வேண்டும்
அப்பொழுதுதான் நம்மால் முன்னோக்கி நகர முடியும்.
இரு நணபர்கள் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்கள். ஒருவன்
மற்றவரிடம் கேட்டான். நீ என்ன இலட்சியத்துடன் படிக்கின்றாய்? என்று.
“நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப்
பாடுபடவேண்டும்” என்ற கனவோடு படிக்கிறேன் என்றான். மற்றவன், “அப்படி நீ
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியானால் என்னை உனது கார் டிரைவராக வைத்துக்
கொள்வாயா?” என்றான் முதலாமவன். நிச்சயம் முடியாது என்றான் இரண்டாமவன்.
நீ எனது உயிர் நண்பன், இந்த சிறிய உதவியைக்கூட செய்யக்கூடாதா? என்று
கேட்டான் முதலாமவன். நாம் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கிறோம்,
என்றாலும், கனவு காணக்கூட துணிவில்லாத உனக்கு எப்படி உதவ முடியும்
என்றான் இரண்டாமவன்.
ஆகவே, கனவு காணக்கூட துணிவில்லாமல் நீங்கள் இருப்பீர்கள் என்றால் அது
வேதனைக்குரியது. ஆகவே நமது குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்
கலாம் கூறியதுபோல் கனவு காணுங்கள் வெல்வீர்கள்.
செயல்களே வெற்றிப்படிகள்
நமது கனவுகள் நனவுகளாக வேண்டும் என்று சதா எண்ணிக் கொண்டு இருப்பதோடு
அதற்கான செயலில் இறங்குவது இன்றியமையாத்தாகும். நான் கோடி கோடியாக
சம்பாதிப்பேன் என்பது உங்களுடைய கனவாக இருக்கலாம். “எனது தொழிலை
மென்மேலும் உயர்த்தி உலகளாவிய வாடிக்கையாளர்களையும், அங்கீகாரத்தையும்
பெறுவேன்” என்பது உங்களுடைய கனவாக இருக்கலாம். உங்களுடைய கனவு
எதுவாயினும் அதை நோக்கியே உங்களுடைய செயல்பாடுகள் இருக்கட்டும். தோல்வி
நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் எதையும் சாத்தியமில்லை என்று
ஒதுங்கிவிடாதீர்கள். உலகத்தில் சாத்தியமில்லாதது என்று எதுவுமேயில்லை
என எண்ணுகிறவர்கள்தான் பல்வேறு கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும்
நிகழ்த்தியுள்ளார்கள்.
வெற்றி உங்கள் பக்கம்
“எதையும் சாதிக்க முடியும்” என்ற தன்னப்பிக்கையோடு முழுமையாக
முயற்சிக்க வேண்டும். முயற்சிகளின் வலிமையும், நோக்கமும் நேர்மை
மிக்கதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
உங்களுடைய செயல்கள் ஆற்றல் மிக்கதாக இருக்கும். ஆகவே உங்களுடைய சரியான
செயல்கள் எப்பொழுதும் உங்களுடைய வெற்றியாக மலரும் என்பதை முழமையாக
நம்புங்கள். ஒரு விதை முளைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்
கொள்கிறது. அரும்பு மலர்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்
கொள்கிறது. அது போலத்தான் உங்களுடைய செயல்கள் வெற்றியாக மலர்வதறகு ஒரு
குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது. நம்பிக்கைகள் எப்பொழுதும்
வெல்லும் என்ற எண்ணம் நெஞ்சில் ஆழமாக வேரூன்றினால் வெற்றி எப்பொழுதும்
உங்கள் பக்கம்தான்.
மனதை வெல்லுங்கள்
வெற்றி பெறுவது என்பதை நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டு, ஓயாது
அலைந்து கொண்டும் அல்லல் பட்டுக் கொண்டும் இருக்கின்றோம். உண்மையில்
வெற்றி பெறுவது என்பது மனதை வெல்வதாகும். ஆம்! ஒருவர் தன்னுடைய மனதை
வென்றுவிட்டால், அங்கு அமைதியும் சாந்தமும் குடியேறுகின்றது. பிறகு
அவர் மகிழ்ச்சியுடையவராகவும் அனைவரையும் நேசித்து அன்பு
செலுத்துபவராகவும் மாறி விடுகின்றார். இந்த உலகம் அவருக்கு
சொர்க்கமாகவும், இன்பத்தின் தாய் வீடாகவும் தென்படுகிறது.
மனதை வெல்வது எளிதா?
மனதை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல என்பது முற்றிலும் உண்மை. மனதை அடக்கி
வென்றுவிட்டால் போதும் நம்மால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதித்துக்
காண்பிக்க முடியும்.
மனதை வெல்வதற்கு முதலில் அதில் தோன்றும் எண்ணங்களைக் கண்காணிது
வரத்தொடங்க வேண்டும். ஏனென்றால் எண்ணங்களின் தன்மையைப் பொருத்தே மனம்
அமைதியாகவோ ஆரவாரமிக்கதாகவோ இருக்கின்றது. அதாவது மனதில் அன்புமிக்க
எண்ணங்கள் தோன்றும்போது மனம் அமைதியாகவும், அகந்தை மிக்க எண்ணங்கள்
தோன்றும்போது மனம் ஆராவாரமிக்கதாகவும் இருக்கின்றது. மேலும் மனதில்
அன்பு தவழும்போது வாழ்க்கை அமைதியானதாகவும், பாசமிகதாகவும் அமைந்து
மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் நமக்குக் கொடுக்கின்றது.
வழிகள் அமைப்போம்
தடைகளைத் தகர்த்து வழிகளை அமைப்போம். பாதைகளில் முட்கள் இருக்கின்றதென
முடங்கிவிடாமல் முட்களை அகற்ற முயல்வோம். அல்லது காலுக்குச்
செருப்புகளைத் தயார் செய்து அணிவோம். பாதை இல்லை என்பதற்காக பயணத்தை
நிறுத்துவதா? பாதையில் பயணப்படுவது சாதனை அல்ல. பயணப்படுவதற்கு பாதையை
அமைப்பேத சாதனையாகும். வழிநெடுக மலர்களைத்தூவிய வரவேற்பை எப்பொழுதும்
எதிர்பார்த்துக் காத்து இருக்கக்கூடாது. முதற்பயணம் வென்றால்தான்
உங்களுடைய பாதையில் மலர்களைத் தூவி வரவேற்க மக்கள் வருவார்கள். ஆகவே
எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் மனதை வழிப்படுத்துவதாகும்.
“வழிகள் தெளிவானால் விழிகள் தெளிவாகும்
No comments:
Post a Comment