Tuesday, April 26, 2016

வாய்ப்புகளே வசந்தம்


இளமையை வசந்த வானமாக்கி வளமையை சொந்தமாக்குவோம்!

மனக்கதவுகளைத் திறந்து வைத்து வாய்ப்புகளை வரவேற்று ஏற்றம் பெற்றோர் பலர்.  ஒவ்வொரு நல்ல சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் சந்தித்தவர்களே சாதனையாளர் ஆகின்றனர்.

பொறும் + சிந்தனை + விடாமுயற்சி இவற்றின் பலனே ஆற்றலின் பிறப்பிடம்

“யாகாவாராயினும் நாகாக்க” என்ற வள்ளுவனின் கூற்றுக்கேற்ப நல்லதையே பேசவேண்டும்.

நல்லதையே சாப்பிடவேண்டும். வாய்ப்புகளே வளம் சேர்க்கும் வித்தை நமக்கு சொத்தாகிவிட்டால் உலகை உவகையாக சந்திக்கும் சிந்தனை உருவாகிவிடும்.

பள்ளி மாணவராக இருந்தால் பல்கலையில் ஈடுபட்டு, எழுத்துப் பயிற்சியையும் சீராக்கி திறமையான மாணவராக உருடுத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்து தன்னிலையில் சிறந்த மகிழ்ச்சியை கொண்டுவர  முடியும்.

கல்லூரிக்கு சென்றவுடன்  படிப்புடன் சேர்ந்து, கலை மற்றும் சில தொழில் துறைகளைக் கற்று, படிக்கும் போதே சம்பாதிக்கும் தன்மையை உண்டாக்கிக் கொண்டால் குடும்பத்தாருக்கு சுமையாக இருக்காமல் சொந்தக்காலிலே நிற்கும் தன்மை வந்துவிடும்.  இதனால்நாம் விரும்பும்வரை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  ஆம். நான்கூட அப்படித்தான் படித்தேன். சிறுதொழில் செய்து சம்பாதித்த பணத்தில் சித்த வைத்தியம் படித்தேன்.  ஆடைகள் விற்பனை செய்து கிடைத்த பணத்தில் அக்குபஞ்சர் வைத்தியம் படித்தேன். ஏனென்றால் படிப்பதற்காக என் முன்னாடி வந்த வாய்ப்பை நழுவவிட மனம் இல்லை.  அப்படிப் படித்ததின் காரணம் இன்றைய தன்னம்பிக்கை புத்தகத்தில் சாதனையாளராக அறிமுகமாகும் வாய்ப்பே வந்தது.  தொழில் துறையினராக இருந்தால் பல்துறையில் வல்லுநராக திகழும் ஆற்றலை வளர்க்க வேண்டும். வாய்ப்புகளை வரவேற்றால் ஆர்வம், திறமை பளிச்சிடும்.

No comments:

Post a Comment