Tuesday, April 26, 2016

மனிதம் வளர்ப்போம்


மனித மனம் என்பது இன்பத்தை மட்டுமே நாடுகிறது.  அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றது.  ஒரு குழந்தை பிறந்தபின், அவனது மழலைப்பருவத்தில் காண்பதெல்லாம் இன்பம்தான்.  ஏனென்றால், அவனது எதிர்பார்ப்பை அவனது சுற்றம் நிறைவேற்றுகின்றது.  அவனிடமிருந்து சுற்றமும் சமுதாயமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.  ஆனால் அவன் வளர வளர இந்நிலை மாறுபடுகிறது.

அவனது எதிர்பார்ப்புகளும், அவனிடத்து எதிர்பார்ப்புகளும் கூடுகிறது.  இது இருமுனைகளிலும் நிறைவேற்றப்படாதால் மிஞ்சுவது, எஞ்சுவது கசப்புதான்.  தனது குடும்பத்தில் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கும் அன்பைத்தேடி மற்றொரு மனிதரை  நாடுகிறான்.  அது நண்பனாக இருக்கலாம், அல்லது காதலியா…..

இளைஞர்களே!  சற்று சிந்தியுங்கள்.  துடுக்காக பேசுவதிலும், வேடிக்கையாக பிறரை கிண்டலடிப்பதிலும், நண்பர் குழுமத்துடன் நாகரீக உலகில் வெள்ளித்திரை ஹீரோகள் போல் நட்சத்திரம் மாதிரியாக உடையிலும், அசைவிலும் செயல்படுவதாலும் மட்டும் இன்பம் பெறமுடியாது. இளைய மனம் கட்டுப்பாட்டை விரும்பாதுதான்.  ஒரு சதுர  அறையுள் கல்வி கற்பதை வெறுத்து, ஒரு சதுர பெட்டியுள் இன்பம் கிடைப்பதாக நினைக்கிறோம்.

நாம் நமது சுகத்தையும், இன்பத்தையும் நாடுகிற அளவுக்கு, பிறரது இன்பத்தைப் பேண முயல்கிறோமா?  யோசித்துப் பாருங்கள்.  விவசாயி கலப்பையைக் கொண்டு உழுவது சுகமற்றது என்று எண்ணினால் நம் உடல் உணவு என்ற சுகத்தை அறியாமல் உயிரற்றதாகிவிடும்.  பல அறிவியல் அறிஞர்களும், அறிவாளர்களும் தாம் வாழ்க்கையை இன்பமாகக்கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஏன் உனது தாய், தந்தையர் அலுவலகப் பணியை மேற்கொள்வதை, தனக்கு சுமையாக நினைத்தால்

அப்படியென்றால் இவர்களெல்லாம் வாழவில் இன்பத்தையே உணரவில்லையா?  என்றால், இல்லை.  அவர்கள் விரும்பிய இன்பத்தின் தன்மை வேறு.  நாம் இன்பமாக வாழ, பிறரது உழைப்பை, அறிவின் செயல்பாட்டை எதிர்பார்ப்பது நியாயமன்று.

பிறரது இன்பத்தில், தனது இன்பத்தைக் கண்டனர் ஞானியர்.   சாதனையாளர்கள் தமது கடமையை சுமையாக நினைப்பின் எங்ஙனம் பிறர் இன்புற வழிவகுப்பது?  அரட்டை அடிக்கும் போது உறும் இன்பத்தைக் காட்டிலும், கடமையை நிறைவேற்றி, சாதனையை நிகழ்த்தும் போது உறும் இன்பம் அளவிடற்கரியது. எந்த சாதனையாளனின் வாழ்க்கைப் படிகட்டுகளும் பூக்களால் அலங்கரிப்பட்டதில்லை. முட்களால் கற்களால் நிரம்பிக்கிடப்பவை. சரித்திரம் படிக்க அயர்வுறும் நாம், சரித்திரம் படைப்பது எங்ஙனம்?

No comments:

Post a Comment