என் கனவுகள்
நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …
செயலை
விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு
உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
- ஜேம்ஸ்
ஆலன்.
உன் விதியை
வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே
குடிகொண்டு இருக்கின்றன.
- சுவாமி
விவேகானந்தர்.
தோல்வியைக்
கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.
- எமர்சன்.
வாழ்க்கையில்
வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-
நெப்போலியன்.
அனுபவம் ஒரு
கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் தேர்வை வைக்கிறது. பின்னர்
பாடம் கற்பிக்கிறது.
- வெர்ணன்.
வசந்தம் ஒரே
நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.
- ரூசோ.
அடுத்தவரின்
வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைப்பவன்
புத்திசாலி.
-
சாணக்கியன்.
சுயமரியாதை,
சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான
வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.
-டென்னிசன்.
மனிதனின்
கெட்ட குணங்களை வெறுத்துவிடு;மனிதனை வெறுக்காதே.
-
ஷேக்ஸ்பியர்.
எல்லாத்
தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை நன்னெறிப் பாதையில் முடிப்பவனே
உண்மையான மனிதன்.
-
துளசிதாசர்.
நேரம்
என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;அது திரும்பிவராது.
- ஜேஷி.
அறிவு
மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.
- ரிக்டர்.
உறுதியைப்
போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.
- ஷெல்லி.
தன்னைக்
கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.
-
சாணக்கியன்.
அறிவின்
முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும்
செய்வது.
- ரஸ்கின்.
வெற்றியைக்
காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.வேறு குறுக்கு
வழிகள் இல்லை.
- எட்மண்ட்
பர்க்.
பேசப்படும்
சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.
- ஹிட்லர்.
வேலைக்காரனாக
இருக்கக் கற்றுக்கொள்.பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
-
விவேகானந்தர்.
மனம்
சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும் தன்மையுடையது.
- மில்டன்.
தீயுள்ள
இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு. அறிவுள்ள இடத்தில்
நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு.
-
ஜேம்ஸ்ஆலன்.
உணர்ச்சிக்கு
முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை
உன்னதமாக இருக்கும்.
- எடிசன்
No comments:
Post a Comment