Tuesday, April 26, 2016

கனவுகள் மெய்ப்பட வேண்டும்


“மனம் விரும்பும் பணம் ” தொடர் மூலம் உங்களுடன்
உறவாடி வந்ததற்கு,
நீங்கள் தந்த
வரவேற்பினாலும்,
தன்னம்பிக்கை
நிறுவனத்தாரின்
ஆதரவினாலும்,
மீண்டும் 2003ம் புத்தாண்டில்……..
உங்களது கனவுகளை நனவாக்கி, மெய்ப்படச் செய்ய வேண்டும் என
என் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கனவே இந்த
புதிய தொடர்……..
மீண்டும் கரங்களை இணைப்போம்!
இப்போது கனவுகளைச் சுமப்போம்!
அன்புடன்
குமரேசன்

கனவுகளுக்கும் MLMக்கும் என்ன சம்பந்தம்?

கனவுகளுக்கும், வெற்றிக்கும் என்ன தொடர்பு?

சார், கொஞ்சம் பொறுங்க, கனவு என்பது என்ன? நாங்கள் தூங்கும் போதெல்லாம் வரும் கனவுகளை நினைத்தால் சில சமயங்களில் சிரிப்பும், பல சமயங்களில் பயமும் தானே ஏற்பட்டு வருகிறது என நீங்கள் யோசிப்பது புரிகிறது.

நல்லதுங்க. உங்களுக்காகத் தான் இந்த விழிப்புணர்வுத் தொடரே. மேலே படிங்க.

இது ரொம்ப புதுசுங்க, விழித்திருக்கும் போது கற்பனை செய்ய வேண்டிய கனவு. விழிப்புணர்வுடன் உங்கள் எதிர்காலம் பற்றி கற்பனை செய்ய வேண்டிய கனவு. உங்கள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் கற்பனை செய்ய வேண்டிய கனவு.

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய, புரியாத புதிர் எது தெரியுமா? வெற்றித் திருமகள் ஏன் ஒரு சிலர் இல்லத்திற்கு செல்கிறாள்? என்பதுதான்.

பல வெற்றியாளர்களிடம் ஒத்திருக்கும் ஒரு விசயம் என்ன தெரியுமா? அவர்கள் அனை வருமே இந்த வெற்றியைப் பற்றி கனவு கண்டவர்கள் என்பதுதான்.

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = நிச்சயமான வெற்றி!

இதில் கனவு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கவனி யுங்கள், முதலிடத்தில்!

மனிதனது எதிர்கால எதிர்பார்ப்புகள், ஆசைகள், விருப்பங்கள், இதனைக் கனவுகள் எனலாம்.

கனவுகளை இலட்சியமாகக் கருதி நேர்மறை எண்ணங் களுடன் தொடர்ந்து உழைப் பவன் சாதாரண நிலையில் இருந்து சாதனையாளராகிறான். இதனைதான் “நீ எதை நினைக் கிறாயோ அதாகவே ஆவாய்” என விவேகானந்தர் அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்.

இறைவன் அருளால் நாம் மனிதப் பிறவியாய் மலர்ந் துள்ளோம். நமது மனித சக்தி மகத்தானது என்று நம் மனதில் புரியும் தினமே உண்மையிலேயே நமது பிறந்த நாளாகும்.

சாதாரணமாக, விலங்கினங்கள் பிறக்கின்றன; இரை தேடுகின்றன; வளர்கின்றன; இனப்பெருக்கம் செய்கின்றன; இறந்து விடுகின்றன.

சாதாரண மனிதனும்,

மனிதனாகப் பிறக்கின்றான், மூன்று வேளை உண்கின்றான்; வளர்ந்து வாலிபம் அடைகின் றான்; வாரிசுகளை உருவாக்கி, இறுதியில் முதுமை பெற்று விடுகின்றான். என்ன வித்தியாசம்? இரண்டிற்கும்.

ஆனால், சாதனையாளர்கள்,

மனிதனாகப் பிறந்து, கனவு கண்டு, கனவை நனவாக்க இலட்சியம் கொண்டு, தனது திறமை களை வளர்த்துக் கொண்டு, வெற்றி பெற்று சாதனைகளைப் படைத்து, சரித்திரத்தில் இடம் பெறுகின்றார்கள்.

இந்த மூன்றுமே உண்மை தானே. இதில் நீங்கள் முடி வெடுக்க வேண்டியது உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம் பெற வேண்டுமா? உங்களது இல்லத் தில் இருந்து தரித்திர தேவியைத் துரத்த வேண்டுமா? என்பதுதான்.

நம் எல்லோருக்கும் பகைவன் ஒருவன் இருக்கிறான். யார் தெரியுமா?

“வறுமைதான்”

இதனை நான் கூறுகிறேன் என எண்ணாதீர்கள். இந்தியாவின் மூத்த குடிமகன், இந்தியாவை வல்லரசாக்க வந்திருக்கும் இன் னொரு மகாத்மா மாண்புமிகு டாக்டர். அப்துல் கலாம் எழுச்சி தீபங்களில் எடுத்துரைக்கிறார்.

சரிதாங்க! வறுமையை விரட்ட என்ன வேணும்? தெரிந்ததுதான்

“பணம்தான்”

சந்தேகமேயில்லை. ஆனால், இது நேர்மையான வழியில் வர வேண்டும் என்ற கோட்பாட்டு டன் செயல்பட வேண்டும்.

பசியுடன் இருப்பவனுக்கு, அவனது பசியைத் தீர்க்கும் வழியைச் சொல்லாமல் உப தேசம் செய்து எந்தப் பயனு மில்லைதானே?

பணமே வாழ்க்கையில்லை என்றாலும், பணமில்லா வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏது?

மனிதனது வாழ்க்கைச் சக்கரம் சுழலுவதே கனவுகளால் தான். அந்த அநேக கனவுகளை நனவாக்குவது பணத்தின் அளவே.

ஆகவே, கனவை உருவாக்கி, உயிர் கொடுத்து நனவாக்கிட உரிய வழியினைத் தேர்ந்தெடுத்து வெற்றிப் பயணத்தை தொடங்கிட வேண்டும்.

வெற்றி பெற எல்லோரும் தயார். ஆனால் வெற்றிக்குரிய வழியைக்காட்ட, மனித சக்தி மகத்தான சக்தி என்பதை எடுத்துக்கூற, ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனச் சக்தியின் அருமையைத் தெரிவிக்க எந்த கல்லூரிகளும் இதுவரை இல்லை. சரி என்னதான் செய்வது?

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே திறனாய்வு செய்து கொள்ளவும், கனவில்லா மனிதனுக்கு கனவை உருவாக்கிக் கொள்ளவும், உருவான கனவிற்கு உயிர் கொடுக்கவும் உதவிடுவது நிச்சயமாக, சுயமுன்னேற்ற, தன்னம்பிக்கை நூல்கள் (Positive Mental Attitude Books) சுய முன்னேற்றப் பயிலரங்குகள், கருத்தரங்குகள் தான்.

பல்வேறு சாதனையாளர் கள் தங்களது அனுபவத்தையும், ஆலோசனைகளையும், வெற்றி பெறக்கூடிய விதிமுறையினை யும் (Success Principal) உங்களுட னிருந்து, உங்களுக்கு கற்றுக் கொடுத்தால் எப்படியிருக்கும்? நிச்சயமாக நீங்களும் வெற்றி யாளர்தானே?

இது சாத்தியமா? என சந்தேகிக்க வேண்டாம். இதனைத் தான் செய்து முடிக்கின்றன, அவர்களது சுயமுன்னேற்ற நூல்கள். எனவே,

சுயமுன்னேற்ற நூல்கள் வாங்குவது செலவு அல்ல அதுவே உங்களின் வெற்றிக்கு மூலதனம்.

உங்களது கனவுகள் உண்மையானதாக இருக்க வேண்டும். அதனை அடைய தொடர்ந்து முயற்சி சரியான வழியில் இருக்க வேண்டும்.

“சூரியோதயம்” பார்க்க வேண்டும் என்ற கனவு நனவாக, மேற்கு திசையில் மெர்சிடைஸ் பென்ஸ்ஸில் பயணம் செய் தாலும் முடியாது. ஆனால், அடிமேல் அடிவைத்துச் சென்றால் கூட கிழக்கு திசையில் பயணம் செய்தால் சாத்தியமாகும்.

ஒரு மனிதனின் வெற்றி, நிறுவனத்தின் வெற்றி, தொழிலில் வெற்றி அனைத்துமே அளவிடப் படுவது வருமானத்தை வைத்துத் தான்.

வருமானம் என்பது என்ன? ஒவ்வொருவரும் அவர்களது நேரத்தையும் உழைப்பினையும் கொடுத்துப் பெறுவது தானே.

இவற்றில் தான் எத் தனையோ ஏற்றத் தாழ்வுகள். அவரவர் திறமை, அறிவு, முதலீடு, நேரம் போன்றவற்றைப் பொருத்து ஏற்படுகின்றன.

இன்னும் சற்று ஆழமாகப் பார்க்கலாமா?

தனது கல்வியறிவு, திறமை, அனுபவம், நேரம் இவற்றினை ஒரு நிறுவன வளர்ச்சிக்காக 20 முதல் 60 விழுக்காடு வரை செலவு செய்து தகுந்த வருமானம் பெறுவதை “வேலை” என்கிறோம்.

தனது கல்வியறிவு, திறமை, அனுபவம், நேரம், இவற்றினை தனது வளர்ச்சிக்காக, சொந்த மாக தொழில் வியாபாரம் செய்து தகுந்த வருமானம் பெறுவதை “வியாபாரம்” என்கிறோம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று வரை உங்களுக்குத் தெரிந்து வேலைக்குச் சென்று வருமானம் பெற்று எத்தனை பேர் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர்?

சரி, பிறகு எதனால் இத்தனை பேரும் வேலைக்குச் செல்கின்றனர்? முதலீடு, தொழில் அனுபவம் இல்லாமை, பயம், சூழ்நிலை இவைகள்தான்.

தலைமுறை, தலை முறையாக “நல்லா படி, முதல் மார்க் வாங்கு, நல்ல வேலைக்குப் போ” என்று குழந்தைப் பருவம் முதல் எத்தனை ஆயிரம் முறை நமது எண்ணத்தில் விதைக்கப் படுகிறது.

எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை “டாட்டா” போல “அம்பானி” போல “பில்கேட்ஸ்” போல வர வேண்டும் என அறிவூட்டுகிறார்கள். இதுவரை இல்லையெனில், இனி வரும் தலைமுறைக்காவது தொழில் அதிபரா குங்கள் என எடுத்துரையுங்கள்.

வேலையினையும், வியாபாரம் / தொழில் –

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க் கலாமா?

வேலைக்குச் செல்வது ஒரு துடுப்புடன் படகை இயக்குவது போன்றது.

இருக்கும் நிலையிலேயே சுழன்று கொண்டிருக்கலாம். செக்கில் கட்டிய மாடு போல எட்டு மணி நேரம் உழைத்து விட்டு பதினாறு மணி நேரம் வெட்டியாக வீண் கதை பேசி, பொழுதைக் கழிக்கலாம்.

தொழில் / வியாபாரம் இரு துடுப்புடன் படகை இயக்குவது போன்றது.

இதில் எத்தனையோ புயல், காற்று, அலைகள் குறுக்கிட்டாலும் சூழ்நிலையை சாதுர்ய மாக சமாளித்து, பயணித்து இலக்கை அடைகிறார்கள். கனவு நனவாகிறது. ஏனெனில், பதினாறு மணி நேர உழைப்பு உள்ளது. பொழுது போதவில்லை என்ற நிலைமை உள்ளது.

வருமானத்தைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் சற்று பாதுகாப்பினைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வருமானம் செய்து வரும் ஒவ்வொருவரும் (வேலை, வியாபாரம், தொழில்) சிந்தனை செய்து பாருங்களேன்?

நீங்கள் இல்லாத நிலையில் உங்கள் குடும்பம், குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வழி செய்துவிட்டீர்களா? என. நிச்சயம் விடை தெரியாத கேள்வியாகத் தான் அநேகம் பேருக்கு இருக்கும்.

சரிங்க, எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம் எங்கு உள்ளது, வாய்ப்புகள் இல்லாததால் தானே வேலைக்குப் போகிறோம் என்பவர்களுக்காகவும்,

ஏங்க, இப்ப பார்க்கற ஒரு வேலையையே, தொழிலையே, பார்க்க நேரமில்லை நான் ரொம்ப பிஸி. என்பவர்களுக் காகவும் மேற்கொண்டு பார்ப்போமா?

வாழ்க்கையில், வேலை தொழில் வியாபாரம் என எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது நேர நிர்வாகமும், உபரி வருமானமும்தான்.

வேலை Job – Just Obey The Boss – For Boss Life.
.

தங்களது நிறுவன வளர்ச் சிக்கு என எட்டு மணி நேரமும், குடும்பம், குழந்தை சொந்த வேலைக்கு என எட்டு மணி நேரமும் செலவிட்டாலும், உங்களது குடும்பம் பொருளா தார சுதந்திரம் பெறுவதற்காக மீதமுள்ள எட்டு மணி நேரத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்து பலன் பெறலாமே?

வியாபாரம் – Business – Use Your Sense / Knowledge For Your Life & Family.
.

இப்போது பார்க்கும் தொழில் வியாபாரத்திற்கே நேரம் சரியாக உள்ளது என்ற போதி லும், எத்தனை வருடங்களாக இதே நிலை உள்ளது? வாழ்விற்கு வருமானம் வருகிறது. வளமான, பாதுகாப்பான, நிலை உள்ளதா? பாருங்கள். பலலட்சம் மதிப் புள்ள புதிய காரில் கூட அதிகப் படியாக ஒரு டயர் பொருத்தப் பட்டு (Stepney) இருக்கிறதே ஏன்?

நான்கு சக்கரங்களிலும் புதிய டயர் இருந்த போதிலும், போகின்ற சாலை உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் பயன் படத்தான் அந்த டயர்.

இதே போல தற்சமய வியாபாரம் / தொழில் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் போட்டிகள், பாதிப்பு ஏற் பட்டால் என்ன செய்வது. இத னால் புத்திசாலிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் /வியா பாரம் மேற்கொள்கிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?

இன்றைய வாழ்விற்காக (சாப்பாட்டிற்காக) வேலை செய்பவராக இருப்பினும் வியாபாரம் / தொழில் செய்ப வராக இருப்பினும், எதிர்கால வளமான வாழ்விற்காக அடுத்து ஏதாவது செய்தாக வேண்டும்.

வெற்றிக்குரிய எளிய வழி என்னவென்று தெரிந்து கொள்வோமா?

எந்த மனிதருக்கும், எந்தக் காரியத்தையும் செய்யத் துவங்கும் முன் இரு மனநிலைகள் ஏற்படும். ஒன்று கஷ்டம், மற்றொன்று சுலபம்.

ஒரு சம்பவத்தை உதாரணமாகப் பார்ப்போம்.

ரவி நன்கு படித்தவர், பண வசதி மிக்கவர், புதிய கார் ஒன்றினை வாங்குகிறார். அதனை எடுத்துச் செல்ல கார் விற்கும் நிறுவனத்திடம் உதவி கேட்கிறார். நிறுவன நிர்வாகமோ அவரையே எடுத்துச் செல்லுமாறு கூறுகிறது. அதற்கு ரவி “என்னால் இயலாது. கஷ்டம். ஏனெனில், எனக்கு கார் ஓட்ட தெரியாது” என்கிறார்.

பிறகு, நிறுவனம் தன் நிறுவனத்தில் பணியாற்றும் பெரியசாமி என்பவரைக் கூப்பிட்டு அந்தக் காரினை எடுத்துச் சென்று ரவி கூறும் இடத்தில் விட்டு விட்டு வருமாறு கூறுகிறது. உடனே பெரியசாமி அதனைச் செய்கிறார். ஆனால், பெரியசாமி படிக்காதவர். சாதாரண மெக்கானிக், எப்படி இது சாத்தியம்? மிகவும் சுலபம்.

பெரியசாமி கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரால் இதனைச் சுலபமாக செய்ய முடிந்தது.

இதிலிருந்து நாம் அறிவ தென்ன, எதனையும் முறையாக கற்றுக்கொண்டால் இந்த உலகில் எல்லாமே எளிதானதுதான்.

ஆகவே, வெற்றிக்குரிய வழியில் முதலானது கற்றுக் கொள்ளுதல்

இனி, இரண்டாவதாக இணைந்து செயல்படுதல் மூலமாக எப்படி எளிதாக வெற்றி பெறலாம் என்பதைக் கற்றுக் கொள்வோம்.

இதற்கும் ஒரு உதாரணம் பார்ப்போம்.

மூர்த்தி, சந்திரன் என இரு எழுத்தாளர்கள் இருந்தனர். எழுத்துத்திறமையில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

மூர்த்தி என்ன செய்கிறார், அவரது திறமையைப் பயன்படுத்தி ஆறுமாத காலத்திற்கு ஒரு புத்தகமாக எழுதி அதனை பதிப்பிக்கவும், விற்பனை செய்யவும் ஒப்பந்தம் ஏற்படுத்திச் செயல்படுத்துகிறார். அவர் ஒப்பந்தப்படுத்திக் கொண்டவர் விற்பனையில் சாமர்த்தியசாலி. இருவரது திறமையும் இணைந்து வெளிப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில்,

20 புத்தகங்களில் ஷ் மாத விற்பனை 1000 = 20,000 ஷ் எழுத்துரிமை 5 சதவீதம் என்ற வகையில் மாதாமாதம் லட்ச ரூபாய் வருமானம் பெறுகிறார்.

சந்திரனைப் பார்ப்போம். இவரும் எழுதுகிறார். அவரே பதிப்பிக்கிறார். அவரே கடை கடையாய் ஓடி ஓடி விற்கிறார். பல இடங்களில் பணம் இழக்கிறார். இதனால் மனம் சோர்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளிவந்த புத்தகத்திற்கு வரவேற்பு இருந்தும் அடுத்த பதிப்பு வரவில்லை. புதிய அடுத்த புத்தகம், அதற்கெங்கே வழி.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வதென்ன. அவரவர்க்கு இருக்கும் திறமையை 100% பயன்படுத்த வேண்டும். தெரியாத வேலையை அதற்குத் திறமையானவர்களிடம் தந்துவிட வேண்டும். பணிப்பகிர்வு, நல்ல எண்ணம், இலாபத்தில் பகிர்ந்து கொள்ளும் பண்பு, நல்ல உள்ளம் கொண்டு செயல்படவேண்டும்.

இணைந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதே சரித்திரத்தில் நிருபிக்கப்பட்ட உண்மை.

நாளைய மாதத்தில் நாம் சந்திப்பதற்கு முன் உங்களது கனவு என்ன? உங்கள் நோக்கம் என்ன? உங்கள் லட்சியம் என்ன? என்று முடிவு செய்யுங்கள்.

மற்றவர்களை வெற்றிபெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் – எனது கனவு.

வாருங்கள் ! முன்னேறலாம் ! – கனவு மெய்ப்படும்.

No comments:

Post a Comment