Tuesday, April 26, 2016

தடைகளைத் தகர்ப்போம்


எந்த ஒரு மனிதனும் வெற்றியடைவதற்கு தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.  முழு ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி பெறாதவர்கள் தோல்விக்கு தேடும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தாங்கள் வெற்றிபெற முடியாததற்கு ஏதேடும் ஒரு வலுவான காரணம் இருப்பதாக கூறுவார்கள்.  அவர்கள் கூறும் காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த தடையை உடைத்து முன்னேறுவது எப்படி?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காரணம் அல்லது குறைபாடு வெற்றிக்கு தடையாக இருப்பது இயற்கை.  ஆனால் எந்தவித தடையையும் தன்னம்பிக்கையால் கண்டிப்பாக சமாளித்துவிடமுடியும்.  சில தடைகள் சற்று பெரிதாக இருக்கக்கூடும். அவற்றை வெல்வதற்குச்சற்று கூடுதல் முயற்சியும் மனதிடமும் தேவைப்படும்..  அவ்வளவே!

குறைபாட்டை வெற்றிக்கு ஒரு ஏணியாக எப்படி பயன்படுத்தி சாதனைகளை சாத்தியமாக்குவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.  எந்தக் காரியத்தை செய்ய முயலும் போதும் எத்தனையோ இடையூறுகள் வருகின்றன.  அப்போது நாம் தேக்கமடைகிறோம்.  சோர்வடைகிறோம். ஆனால் இந்த இடையூறுகளை கூர்ந்து கவனிப்போமேயானால் இவையாவும் மனிதன்  தாமாக ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்குமேயொழிய இயற்கையாக உண்டானதாக இருக்காது.  பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் போதிய வாய்ப்புகளும், வசதிகளும், இயற்கை ஒழுங்கமைப்பில் நிறைந்தே இருக்கின்றன.  தடைகளும், பற்றாக்குறைகளும் மனிதன் தன் இயலாமையால் ஏற்படுத்தி கொண்டதேயாகும்.

மனிதன் தன் ஐம்புலன்களின் கட்டுப்பாடற்ற தன்னம்பிக்கை அதன் சுழலிலேயே சிக்கி தவிக்கிறான்.  ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலேயே வைத்திருந்து தனது ஆறாவது அறிவனை பயன்படுத்தி சிந்தனை ஆற்றலை வளர்த்து தன்னம்பிக்கை பெறும் பட்சத்தில் தடைகளை எளிதில் தகர்த்தெறிந்து வெற்றி பெற முடியும்.

தடைகளைத் தாண்டி வெற்றிபெற சில வழிமுறைகள்

1. வாய்ப்புகளை தேடுதல் (Serarch of Opportunities)

தனக்கு ஏற்ற வாய்ப்பு வரும் என்று காத்திராமல் வாய்ப்புகளைத் தேடி நாம் செல்ல வேண்டும்.  அதிர்ஷ்டத்தால் வாய்ப்பு கிட்டும் என எண்ணுவதை விட்டுவிட்டு முயற்சியால் வாய்ப்பினை தேடவேண்டும்.

2. சரியான வாய்ப்பினை தேர்ந்தெடுத்தல் (Select the Optinistic)

அவர்களிடம் இருக்கின்ற அனுபவம் என்கிற அற்புதமான கல்வியிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் பாடங்களைக் கற்கவேண்டும்..  அவைகளை, தங்களுக்கான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த வேண்டும்.

வயதுக்கு மரியாதை தரவேண்டும் என்ற பண்பு காரணமாகாவாவது, முக்கியமான விஷயங்களில் மட்டுமாவது, அவர்களின் ஆலோசனைகளை கோரவேண்டும்.

ஒத்துவராது எனக்கருதும் அறிவுரையை, அவர்களின் மனம் நோகாதவாறு, பண்போடு ஒதுக்கவேண்டும்.

அவர்களை முகத்தளவிலாவது மதித்து மகிழ்விக்க வேண்டும்.  அவர்களின் அறியாமையைக் கண்டு ஏளனம் செய்யாமல், பொறுமைகாட்டி புரிய வைக்க வேண்டும்.  அவர்கள் சங்கடப்படும் அளவுக்கு, அதிகப் பிரசங்கித்தனம் காட்டக்கூடாது.

எல்லா நேரங்களிலும் இடங்களிலும் முக்கியமாக நாலுபேர் கவனிக்கும்போது மட்டுமாவது, மரியாதையும் மதிப்பும் தரவேண்டும்.

சுருக்கமாக,

ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்கும் உயர்ந்த குணம்  – Be helpful.  மற்றவர் உணர்வுகளை மதித்து நடக்கும் மாண்பு – Respect.

மற்றவர்களின் குறைகளையும் பலவீனங்களையும் ஒதுக்கித் தள்ளும் உத்தம குணம் – ignor short comings.   மற்றவர்களின் சுதந்திரத்தில் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்காத நாகரிகம் – Decency.

தங்களுடைய சின்னச் சின்ன சௌகரியங்களையும் விருப்பங்களையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை – Generosity.

மற்றவர்களுடைய இடத்தில் தன்னை இருத்தி அவர்களுடைய உணர்வுகளையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் தன்மை.

இந்த BRIDGE  இருந்தால் எந்த இடைவெளியையும் எளிதாக கடக்கலாமே.

நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அதில் சரியானவற்றை தன்னால் வெற்றி முடியும் என்ற வாய்ப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

3. சரியாக திட்டமிடுதல் (Planning)

வாய்ப்புகளை தேர்ந்தெடுத்த பிறகு மேற்கொண்ட வாய்ப்பினை பயன்படுத்திட சரியாக திட்டமிடல் வேண்டும்.

4. செயல்படுத்துதல் (Implementation)

திட்டமிட்டு களத்தில் இறங்கி பிறகு திட்டத்தினை துரிதமாக தாமதமின்றி செயல்படுத்துதல்

5. தடைகளை தாண்டுதல் (Overcome the barriers)

செயல்படும்போது ஏற்படும் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்கனவே கூறியதுபோல தன்னம்பிக்கையுடன் போராட்ட குணம் கொண்டு தகர்த்தெறிதல் வேண்டும்.

6. தொடர்ந்து ஈடுபாடு (Continious Persistence)

எந்த நிலையிலும் தேக்கமின்றி தாமதமின்றி முழு முயற்சியாக ஈடுபட்டு செயல்படவேண்டும்.

7. இலக்கை எட்டுதல் (Achiveve the Goal)

தனது இலக்கான சாதனையை நிச்சயமாக அடைந்தே தீருவது.

மேற்கண்ட வழிகளை பின்பற்றி முயற்சி செய்யுங்கள்  சாதனைகள் யாவருக்கும் சாத்தியமாகும்.

No comments:

Post a Comment