Tuesday, April 26, 2016

மன அழுத்தத்தை மாற்றுவோம்


தாழ்வு மனப்பான்மை என்ற உணர்வைத் தகர்த்தெறிந்தமைக்கு பாராட்டுக்கள்.

இன்றைய நவீன இயந்திர உலகில், மன அழுத்தம் என்று சொல்லும் STRESS தவிர்க்க முடியாதது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது நமக்கு வருகிறது. உடல் மற்றும் மனநிலைகளைப் பாதித்து இரத்த அழுத்தம், ஒரு பக்கத் தலைவலி, ஆஸ்துமா மற்றும் முதுகு வலி போன்ற உடல் வியாதிகளும், கவலை, படபடப்பு போன்ற மன வியாதிகளும் இது காரணமாக உண்டாகிறது. எனவே, எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை விரிவாய் சிந்திப்போம்.

STRESS மன அழுத்தம்

எந்த ஒரு பிரச்னையும், அது பிரச்சனை என்று தெரிந்து கொள்ளும்போது தான் பிரச்னையாகிறது. தீவிரமான எதிர்மறை உணர்ச்சிகள் (NEGATIVE EMOTIONS) காலப்போக்கில் ஒருவரது மனநலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

காரணம் : எதிர்மறை அறிவு (NEGATIVE PERCEPTION) எதிர்மறையான எண்ணங்கள், எதிர்மறையான நம்பிக்கைகள்.

பலர் தம் நேரத்தை, சக்தியை கடந்த கால நிகழ்வுகளை அசைப்போட்டும், எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்பட்டும் வீணாக்குவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் மகிழ்வாக அல்லது வருத்தமாக வாழ்வது அவர் கையில்தான் உள்ளது.

விளக்கம் : நாமோ அல்லது நமது உடல் உறுப்புக்களோ ஒரு தீர்வுக்குரிய பிரச்னையை எதிர்கொள்ள நேரும்போது நமது உடலும் மனமும் மாற்றம் பெற்று வரும் விளைவுதான் மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. அப்பிரச்சனைகளைச் சரியன முறையில் கையாண்டு சமாளிக்க முடியாவிட்டால் மன அழுத்தம் உண்டாகிறது. (STRESS is a by product of Poor or Inadequate coping).

மன அழுத்தமும் சமாளித்தலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், ஒன்றையொன்று சார்ந்தும் உள்ளன. நேரான மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் தீர்வுக்குரிய பிரச்சனைகளால் மன அழுத்தம் உண்டாகிறது.

வகைகள் : (types) மன அழுத்தம் இரண்டு வகைப்படும். 1. EUSTRESS மகிழ்வுதரும் மன அழுத்தம். உதாரணம்: திருமணச் சூழல்

2. DISTRESS : துன்பம் தரும் மன அழுத்தம. உதாரணம் : நெருங்கியவர் மரணம்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள்

1. ஏமாற்றம் (FRUSTRATION)

குறிப்பிட்ட இலக்கை நோக்கிய செயல்பாட்டுக்கு உண்டாகும் தடைகள், அதன் தொடர்ச்சியாக வரும் தோல்விகள், ஏமாற்றங்கள் மன அழுத்தம் உண்டாக காரணங்களாகின்றன.

விளைவுகள் : பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் குழப்பத்துக்குள்ளாகி, தன்னால் முடியாது என எண்ணி தோற்றுப் போதல்.

உதாரணம் : அகம் : தனிமை உணர்வு, குற்ற உணர்வு, உடல் உறுப்புகள் ஊனம் அடைதல். புறம் : வேலை இழத்தல், நேசிப்பவர், நெருங்கியவர் நட்பை இழத்தல்.

2. முரண்பாடு (CONFLICTS)

ஒருவரது எதிர்ப்பு, கருத்து வேறுபாடு, உடன்படாமை அல்லது இரு கருத்து, உறுப்பு இவற்றிடையேயான சண்டை இவை தொடர் பானது முரண்பாடு.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேவைகள் அல்லது எண்ணங்கள் தொடரும்
போது இது உண்டாகும்.

இதன் தீர்வுக்குரிய வழிகளை மூன்று வகையாய் பிரிக்கலாம்.

முதல்வழி : (APPROACH, AVOIDANCE) நம் தேவையை நோக்கிய செயல்பாடு. நம் இலக்கு எதுவோ அதை நோக்கி செயல்படுவதுடன் அதை அடைய சிலவற்றை தவிர்க்கவும் வேண்டும். ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் சில சாதகமான அம்சங்களும், சில பாதகமான அம்சங்களும் (SOME “IVE & -IVE) உண்டு.

உதாரணம் : நடுத்தர வர்க்கத்திலுள்ள ஒருவர் பெரிய செல்வந்தராக எண்ணுதல். இவர் தனது தற்போதைய நிலையில் வாழ்ந்து கொண்டே, மனதில், இந்த நிலையை தவிர்த்து (AVOID) செயல்படுதல், அதாவது இப்போதைய நிலையை மறவாமல் செல்லவேண்டிய நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துதல்.

MIDDLE CLASS HIGH CLASS

2-ம் வழி : (DOUBLE APPROACH) இரண்டையும் பரிசீலித்து தேர்வு செய்துல்.

நலம் விரும்பும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளில், இரண்டையும் பரிசீலித்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது, அல்லது முதலில் எது அடுத்து எது எனத் தேர்வு செய்வது, ஓர் இரவில் இரு திரைப்படங்கள் பார்ப்பது, இது பிரச்னையெனில் ஒருவர் தமது நேரம், சக்தி இவற்றின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படுவது, ஏதாவது ஒன்றை பார்ப்பது, அல்லது ஒன்றை முதல் காட்சியிலும் மற்றதை 2-ம் காட்சியிலும் பார்ப்பது.

No comments:

Post a Comment