சிந்தனை துளிகள் சில...
தேவையில்லாததை வாங்கினால் - விரைவில் தேவையானதை நீ விற்று விடுவாய்.
சான்றோருடைய வரலாறுகள் அவர்களைப்போல் நாமும் ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கையே.
எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லைமுன்னேற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வையுங்கள்.
தவறுகளை நியாயப்படுத்தும் நண்பனைவிட, தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்தும் நண்பனே சிறந்தவன்.
ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.
பொறுமையில்லாதவனிடம் தத்துவ ஞானமும் இருப்பதில்லை.
மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன் செவியை அடைத்துக்கொள்.
தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.
புகழ்ச்சியில் பேராசையுடையவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பர்.
அறிவைப் பெற்றும் அதைப் பயன்படுத்தாதவன், உழுதபின்னும் விதைக்காத உழவனே.
முயற்சி உடையார்; இகழ்ச்சி அடையார்.
செயல் சொல்லைவிட உரத்துப் பேசும்.
No comments:
Post a Comment