தோல்வியிலிருந்து கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்
வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்க்கு! தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்க்கு!!
உலகத்தில் உள்ள வெற்றிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியில் இருந்து தான் தோன்றியிருக்கும். நம்மில் பலரும் ஒப்புக்கொள்ளும் விடயம் இது. தோற்றுப் போனவர்கள் அனைவருமே தங்கள் தோல்வியை இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கின்றனர். அப்போது தான் வெற்றிகளை அவர்களால் அடைய முடியும்.
தோல்வியை முடிவாக பார்த்தால் அதிலிருந்து எதுவுமே கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய தொடக்கத்திற்கு, புத்திசாலித்தனமான தொடக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக தோல்வியை பார்த்தால், நாம் அடையப் போகும் வெற்றிகளுக்கு வரம்பே இல்லை.
தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம். தோல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் பேசினாலும், அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்றால், வெற்றி என்றுமே எட்டாத கனியாகவே மாறிவிடும்.
ஏன் நாம் தோற்று போனோம் என்ற கேள்விக்கான பதில் நம் துயரத்துடன் சேர்ந்து நம்மை பாடாய் படுத்தும். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களைப் பார்க்கலாமா?.
இதோ அந்த 10 பாடங்கள்…
விலகுவது எங்கேயும் அழைத்துச் செல்லாது
நம் முயற்சியில் இருந்து பின் வாங்குவது நம்மை எங்கேயும் அழைத்துச் செல்லாது. தோல்விகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களில் இதுவும் ஒன்றாகும். அதனால் தோற்றுப் போனால் போட்டியில் இருந்து விலகாதீர்கள். அப்படி செய்யும் போது, ஒரே நொடியில் உங்கள் தன்னம்பிக்கையும், உழைப்பும் வீணாகி போகும்.
புது ஐடியாக்கள்
உங்களுக்கு புது ஐடியாக்கள் தோன்றவில்லையா? அப்படியானால் ஏன் சில முறை நீங்கள் தோற்று பார்க்கக்கூடாது? கண்டிப்பாக புது ஐடியாக்களை அளிக்கும் உங்கள் திறனால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மனப்பான்மை
தோற்றுப்போகும் போது, தோல்வியின் மீதான மனப்பான்மையே அனைத்தையும் விட மிக முக்கியமானது. விளைவு பொருத்தமற்றதாகவே இருக்கும். சொல்லப்போனால், முயற்சி செய்யும் வெற்றியின் மீதான உங்கள் மனப்பான்மை தான், தோல்வியின் மீதான மனப்பான்மையை விட மிக முக்கியமானது. தோல்வியில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய பாடம் இது.
பணிவு
தோல்வியில் இருந்து நமக்கு கிடைக்கும் விலைமதிப்பற்ற பரிசு தான் பணிவு. பணிவு என்பது எல்லோரிடத்தில் இருந்தும் வந்து விடாது. அனைவரிடமும் அதனை நாம் எதிர்ப்பார்க்கவும் முடியாது. மனிதருக்கு இருக்க வேண்டிய மிக அற்புதமான குணம் பணிவு.
பொறுமை
பொறுமையாக இருப்பது கசக்கும், ஆனால் அதன் விளைவு இனிக்கும். தோல்வியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் தான் பொறுமை.
திட்டமிடுதலின் முக்கியத்துவம்
நீங்கள் சரியாக திட்டமிடவில்லை என்றால், வெற்றியை அடைவது கஷ்டமே. ஒவ்வொரு தருணத்திலும் திட்டமிடுவது என்பது வெற்றியின் கதவை திறக்க உதவும் சாவியாகும்.
நம்பிக்கை
நம்பிக்கையை விட உச்ச சக்தி வேறு எதுவுமே கிடையாது. உங்கள் மீதும் உங்கள் திறமையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த உதவுவதும் இந்த தோல்விகளே. எனினும், மேற்கூறியவைகளுக்கும் இதற்கும் நிறைய தொடர்பு உள்ளது.
தடைகளை வெற்றி கொள்வது
தோல்விகளில் இருந்து தெளிவாகத் தெரியக் கூடியவைகளில் இதுவும் ஒன்றாகும். அதனால் தடைகளை எப்படி ஜெயிப்பது என்பதையும் கற்றுக் கொள்ளலாம். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும், தடைகளை வெற்றி கொள்வதற்கும், தோல்விகளை விட வேறு எதுவும் இப்படி ஒரு அற்புத வாய்ப்பை அளிக்காது.
பலமும் தைரியமும்
தோல்வியால் கிடைக்கும் மற்றொரு தெளிவான பயன் தான் தைரியம். உங்களால் அதனை உணரக் கூட முடியாது. ஆனால் அது தான் உங்களை சிறப்பாக தயார் செய்யும்.
உங்களால் என்ன சாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு
உங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்கு ஒன்று உதவுகிறது என்றால், அது வேறு எதுவும் இல்லை, அது தான் தோல்வி. உங்களின் உண்மையான ஆற்றல் வளம் என்ன என்பதை உங்களுக்கு புரிய வைக்க உதவுவது தோல்வி மட்டுமே.
No comments:
Post a Comment