திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்
plan to success ,திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்
நிர்வாகத்தில் வரவிற்கு ஏற்ற செலவுகளை செய்ய முற்பட வேண்டும். அது ஓடு நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது வீடாக இருந்தாலும் சரி. நண்பர்கள் , உறவினர்கள், வாடிக்கையாளர்கள் மெச்சவேண்டி கடன்பட்டு ஒரு காரியத்தை செய்ய முயற்சிக்க வேண்டாம் .
சூழ்நிலைகளையும் அதன் வீரியத்தையும் உடன் இருப்போரிடத்தில் தெளிவுற பகிர்ந்துக் கொண்டு உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துரைத்து எதிர்கொண்டுள்ள பிரச்சினையை சமாளிக்க தேவையான காரியங்களில் அவர்களையும் ஈடுப்படுத்துங்கள். அதேசமயம் அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டு திட்டமிட்டு அதன்படி செயல்படுவோமானால் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தில் நிச்சயம் நமக்கு வெற்றி கிட்டும் என்பதில் ஐயமில்லை.
தனிமனித சிந்தனையும் செயல்பாடும் திட்டமிடலாகாது. அதே சமயம் பரஸ்பரம் அனைவரின் கருத்துக்களும், உணர்வுகளும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு செயல்வடிவம் கொடுக்கும்பட்சத்தில் அதுவே சிறந்த இடமாகும்.
இது ஒரு நிறுவனத்திற்கும், நாட்டிற்கும் மற்றும் வீட்டிற்கும் பொருந்தக்கூடிய அடிப்படைக் கோட்பாடாகும்.
No comments:
Post a Comment