Tuesday, April 7, 2015

சிந்திக்க வேண்டிய விசயங்கள்

சிந்திக்க வேண்டிய விசயங்கள்

சில சிந்தனைகள்…

நடத்தை
உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம். உங்கள் நடத்தைதான் அந்த இடத்தை நீங்கள் தக்கவைத்துக்கொள்ளத் துணைநிற்கும்!

சிரிப்பு
உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை நீயும் சிரிக்க வை!உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை!

பிறப்பும் இறப்பும்
நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்!

நீ சாதனைபுரிய வேண்டுமா?
இன்றோடு நீ இறந்துபோவாய் என எண்ணிக்கொள்

காரணங்கள்
நம் வாழ்வில் நாம் அழுவதற்காக 100 காரணங்கள் உள்ளன!
நாம் சிரிக்க 1000 காரணங்கள் உள்ளன!

வாழ்க்கை
வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது!
நாம் இறந்தபின் நம்மைய யாரும் மறக்க்க்கூடாது!

கடிகாரம்
இலக்கில்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது!ஓடாத கடிகாரம் கூட ஒருநாளில் இரண்டுமுறை சரியாக நேரம் காட்டும்!

மாற்ற முடியாத, திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக்கவலைப்படுவது, தனது நம்பிக்கை, கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்திசுமத்துவது, அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது, மனம் வளர்ச்சியடையசிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள்.

மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள். சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.

பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும். வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும் தன் உடலில் யாருக்குத்தான் விருப்பமில்லை.

மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும்வரை கோபம்தான் நிறைந்திருக்கும்.

துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக்குறைந்துவிடும். இன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம்பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.

நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம். அதனால் நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.

புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது. மனிதர்களைப் படித்து அறிந்துகொள்ளும் ஞானம்தான் இந்தக்காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத்தான் இருக்கிறான். அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.

சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறிவிடுகின்றன.
நல்லவரைப் பார்க்கும்போது பின்பற்ற நினையுங்கள்.தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையானகாரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால் தான். அதேமனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாககடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம்தான்.

வெற்றி ஒரு வானவில். எட்டத்தில் இருப்பதால் தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.

No comments:

Post a Comment