Tuesday, October 6, 2015

மின்னுவதெல்லாம் பொன் எனத் தகுமா....

மின்னுவதெல்லாம் பொன் எனத் தகுமா....
அற நெறிகளைத் தன் அறிவின் ஆற்றல் கொண்டு  ஒருவர் கற்றுக் கொண்டதனாலோ அல்லது அதையே பிறருக்கும் போதிக்கும்  வல்லமை பெற்றுக் கொண்டதனாலோ மட்டும் அவர்களை நாம் புனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது .காரணம் ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல்  வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய புனிதர்கள் .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும் பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும் .செல்லும் இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும் இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .
 
போலிகளைக் கண்டு எமாருதலும் அந்த ஏமாற்ற உணர்வுகளோடு பின் நிஜங்களைக் கண்டு மிரழுவதும் மனித பண்பிற்கு ஒப்பற்ற செயலாகும்  எதையும் பகுத்தறிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இருத்தல்  வேண்டும் .இந்தப் பகுத்தறியும் தன்மை அற்றுப் போகும் இடத்தில்தான் வீண் விவாதங்கள் வலுப்பெற்றுச் செல்லும் .நான் என்ற ஆணவமும்  இந்த இடத்தில்தான் தலை தூக்கும் .இதனால் மனிதன் தன் சுய சிந்தனையை இழக்க நேரிடும் .அவ்வாறு சுய சிந்தனை அற்றுப் பேச்சுத் தொடர்ந்தால்  விளைவுகள் எப்போதுமே விபரீதமாகவேதான் முடியும் ஆதலால் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும்  நாம் பேசுவதற்கு முன்னாலும் அதன் உண்மைத் தன்மையை பூரணமாக அறிந்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் .

நாம் ஏதேனும் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தரக் குறைவாக பேசி விட்டுச் செல்வது சர்வ சாதாரணமாக முடிந்த விசயம் ஆனால் இதனால் வரும் இழப்புகளை மட்டும் அத்தனை சுலபமாக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது .எனவே பேசும் பேச்சில் தெளிவு வேண்டும் .எமக்கு சம்மந்தம் அற்ற விடயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைப்பதைத் தவிர்த்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் .பிறரை இழிவு படுத்தும் வகையில் உள்ள எம் பேச்சுத் திறனை பிறர் கண்டு அருவருக்கும் நிலை வந்து விட்டால் பின் வாழ்நாள் முழுவதும் உங்களை அறிந்தவர்களுக்கும் உங்களுடன் கூடிப் பழகினால் வீண் குழப்பம் வரும் என்ற ஒரு பயம் தன்னை அறியாமலே வந்து விடும் .இதானால் நீங்கள் ஒரு சமூக ஒற்றுமைப்பாடு  அற்றவர் என்ற கணிப்பீட்டுக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள் .உங்களால் உங்கள் குழந்தைகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை எல்லாமே பாதிக்கப் படும் .எனவே இனிமையாகப் பேசி இன்பமான வாழ் நாளை உறவுகளோடு சேர்ந்து கலந்து வாழ வழி அறிந்து வாழ்வோம் அன்பு நெஞ்சங்களே !....
                                                                          
                                                 வாய்மை எனப்படுவது யாதெனில்
                                                யாதொன்றும் தீமை இலாத சொலல் !!!..

No comments:

Post a Comment