தேவை நல்ல நண்பர்கள். . .
அறிவுரை என்றிங்கு எதுவுமில்லை, எனது சிந்தனையின் வெளிப்பாடு... அவ்வளவே !!!

பழிப்பிற்குரிய, தகாத பழக்க வழக்கங்கள் ஏதும் காணப்படாத, கடவுள் வழிபாடும், பெரியோரை மதிக்கும் பண்பும், அறத்திற்கு கட்டுப்படும் தன்மையும் மற்ற நன்மைகளும் ஒருவரிடம் இருக்குமேயானால், அவரை நமது நண்பராக அடைய ஆர்வம் கொள்ளவேண்டும்.
பொதுவாக நண்பர்களுக்குள் உள்ள பெரிய குறை, " நம் கருத்தை அணைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என நினைப்பதே. மாறுபட்ட கருத்தைக் கூறுபவரை நம் நட்புக்கு ஒவ்வாதவராக, இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் மட்டம் தட்டிப் பேசத் தொடங்கிவிடுகிறோம். இம்மதிரியான செயல் ஏற்புடையதல்ல.
எல்லா நேரத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் சிறந்தவற்றையே அணுகவேண்டும். சிறந்தவைகளையே செய்யவும் வேண்டும். சிறந்ததைச் செய்யும் போதுதான் நாம் சிறந்தவர்களாகிறோம். இதற்கு நம் நண்பர்களும் உதவி செய்யலாம். வெருமனே நண்பர் எனும் போர்வையில் இருப்பதைவிட்டு, ஆக்கரமான, அனைவருக்கும் பொருந்துகின்ற கருத்துக்களை முன் வைக்கவேண்டும். அப்படி அவர்களிடம் இருந்து பெறப்படுகின்ற கருத்துக்கள் நாம் நினைத்ததற்கு ஏற்ப இல்லாமல் வேறுபட்டிருந்தால், அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து, நல்லதே என நினைக்கும் பொருட்டில் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது, புள்ளி விவரங்களின் படி அவர் சொல்லுவதை ஏற்க முடியாததை அமைதியாக, அன்புடன் விளக்கவேண்டும். இதனால், நமக்கு எவ்வித பாதகமும் ஏற்படாது. மாறாக, நட்பு வட்டத்தில் நம் பெயரும் புகழும் இன்னும் கூடும்.
குறை சொல்லும் நண்பர்களை பலருக்கும் பிடிப்பதில்லை. கற்றோரிடமும், அனுபவப்பட்டோரிடமும் இதைப் பற்றிக் கேட்டால், பாராட்டுபவர்களை விட நம்மிடம் உள்ள குறைகளை சொல்பவர்களே உண்மை நண்பர்கள் என்பார்கள்.
இது ஏன், எதனால் இப்படி ஒரு கருத்து நிலவுகிறது....?
உண்மையில், நம்மை புகழ்பவர்களும் போற்றுகிறவர்களும் நம் மனதுக்கு ஒரு சின்ன மகிழ்வைத் தருகிறார்களே தவிர அவர்களால் நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடப் போவதில்லை. ஆனால், நம்முடைய குறைகளை சுட்டிக்காட்டும் நமது நண்பர்கள், அந்தக் குறைகளையும் பலவீனங்களையும் கலைந்து நாம் மேன்மேலும் சிறக்க ஒரு சந்தர்ப்பத்தை உறுவாக்கித் தருகிறார்கள். பட்டைத் தீட்டப்பட்ட தங்கமே ஜொலிக்கும் என்பார்கள். குறைகளை நீக்கிய நாம் உயர் நிலைக்குச் செல்கிறோம்.

மாற்றுக் கருத்து சொல்லும் நண்பர்களையும், நம்முடைய குறைகளை சொல்லி நம்மை புனிதமானபவர்களாக்கும் நண்பர்களையும் வரவேற்று ஏற்றுக்கொள்வோம். இந்த மன நிலை பலருக்கும் இருப்பதில்லை. அப்படி நாம் இருக்க முடிந்துவிட்டால், நாம் மற்றவர்களை விட ஒரு படி மேலாகிறோம்.
வயதாகும் காலத்தில் நல்ல நண்பர்களின்றி வாழ்வோருக்கு 10 சதவிகித பாதிப்புகள் அதிகமாகின்றன என்றொரு ஆய்வு குறிப்பிடுகின்றது. அன்றாட பணிகளில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் சோர்வினால் துண்பப் படுகிறார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. கலகலப்பின்றி சோர்வானவர்களின் வாழ்நாள் குறைவது மட்டுமன்றி நிம்மதியையும், மனமகிழ்ச்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர்.
ஆகவே, நல்ல நண்பர்கள் நமக்குத் தேவை என்பதை உணர்வோம். அதற்கேற்றாற்போல் நாமும் மற்றவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருப்போம்.

No comments:
Post a Comment