Monday, October 5, 2015

நல்லதை மட்டுமே சிந்தித்து செயல்படுவோம். . .

நல்லதை மட்டுமே சிந்தித்து செயல்படுவோம். . . 
எதையும் குறையாகவே பார்ப்பது பலருக்கு வாடிக்கையாகிவிட்ட ஒன்று.

மற்றவர்களிடம் உள்ள நல்லவற்றை அவர்கள் கண்கள் காண்பதில்லை. ஆனால், ஏதாவதொரு சிறிய புள்ளி போன்ற வழக்கத்திற்கு மாறான ஒன்றை பார்த்திடும் போது ஊதி ஊதி பெரிது பண்ணி அதை மலைபோல உயர்த்திக்காட்டி மட்டம் தட்ட முயல்கின்றனர்.

ஒரு சிறு பிரச்சினை பூதாகரமாக வெடித்து குடும்பங்கள் சின்னா பின்னமாக சிதறுவதற்கு இந்த "குறைககளைத் தவிர  வேறு எந்த நல்லதையும் காண முடியாத" அரை வேக்காடு குணமே காரணம் என்பதை எப்போதுதான் அவர்கள் உணர்வார்களோ....?

தன் மகனையோ மருமகளையோ அல்லது பேரன்களையோ மற்ற யாரும் அப்படிக் குறைகூறி அது அவர்கள் காதில் விழும்போது தான் திருந்துவார்களோ??? ஊகும்....அப்படி இன்னமுமா காதில் விழாமல்  இருந்திருக்கும்..?

ஒருவேளை, தொலைக்காட்ச்சி தொடர்கள் அவர்களுக்கு இதுபோன்ற கேவல நிலையை பயிற்றுவிக்கின்றனவோ... அடுத்தவர் எப்படி புண்பட்டு மனம் நோவார் என்பது தெரியாமலா வாயில் வரும் வார்த்தைகளை எவ்வித தீர்க்க சிந்தனையும் தெய்வீக தன்மையும் இல்லாமல் எடுத்து விடுவது???

எண்ணிப்பார்க்கும்போது மனம் நொந்துதான் போகிறது. பெரியோர் சொன்னால் பெருமாள் சொன்னமாதிரி என்று இளையோர் சொல்லி வந்த காலமும் இருந்தது.

இளையோர் "கோஸிப்" பண்ணுவது இயற்கை. அவர்களுக்கு இன்னும் எவ்வளவோ நாட்கள் உண்டு,அனுபவம் மூலமாக தன் தவற்றை உணர்ந்து, வருந்தி, திருத்திக்கொள்ள.

வயதில் பெரியோர் மற்றவர்களிடம் சரியில்லையெனப் படுவதை சொல்லுவதில் ஒரு ஞாயமும், தர்மமும், நேர்மையும் இருக்கவேண்டும்.

இல்லையேல்,
முன்னவர் முடிவு நமக்குப் பாடம் என்பதாகிவிடும்,
தலை சாயும் நேரம் தண்டனையும் வந்துசேரும். . .

No comments:

Post a Comment