Thursday, October 15, 2015

இலக்குகளும்... கனவுகளும்...

இலக்குகளும்... கனவுகளும்...

முந்தைய பதிவில் இலக்குகளை அடைய மனதை ஒருமுகப்படுத்துவது குறித்தும், இலக்குகள் ஏன் முக்கியமானவை? என்பது குறித்தும், கால்பந்தாட்ட கோல் இலக்கை மையப்படுத்தி ஒரு சில கருத்துகளையும் பகிர்ந்து அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக  இப்பகுதியில் நம்முடைய இலக்குகளை அடைய கனவுகள் எவ்வாறு உறுதுணையாக உள்ளது எனவும் அவற்றை எவ்வாறு நனவாக்குவது எனவும் பார்ப்போம்.
 
மக்கள் இலக்குகளைக் கனவுகளோடும், விருப்பங்களோடும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். கனவுகளும், விருப்பங்களும் நமது ஆசைகளே தவிர வேறெதுவுமில்லை. ஆசைகள் பலவீனமானவை, கீழ்வருவன துணை செய்தால், ஆசைகள் வலுவாகி விடும்.
  •     வழிகாட்டுதல் (Direction)
  •     அர்ப்பணிப்பு (Dedication)
  •     மன உறுதி (Determination)
  •     கட்டுப்பாடு (Discipline)
  •     கெடு (Deadlines)
இதுவே ஒரு ஆசையை இலக்கிலிருந்து வேறுபடுத்துகிறது. இலக்குகள் என்தெல்லாம் இறுதி கெடுவோடும், ஒரு செயல்திட்டத்தோடும் கூடிய கனவுகளாகும். கனவுகளை நனவாக்குவது வெறும் விருப்பம் அல்ல, பேரார்வமே.
 
கனவினை நனவாக்குதற்கான வழிகள்.
    நிச்சயமான, தெளிவாக எழுதப்பட்ட இலக்கை வைத்திருங்கள்.
    அதை நிறைவேற்ற ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.

முதல் இரண்டு கருத்துகளையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை படித்து மனதில் நிறுத்துங்கள். அடுத்தப் பதிவில் ஏன் பலர் (என்னையும் சேர்த்துத்தான்) இலக்குகளை அமைத்துக் கொள்வதில்லை என்பதை குறித்து காண்போம். அதுவரை தங்களது கருத்துகளையும் அறிவுரைகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் வாசக நண்பன்

No comments:

Post a Comment