Thursday, October 15, 2015

இலக்குகள் ஏன் முக்கியமானவை ?

இலக்குகள் ஏன் முக்கியமானவை ?

முந்தைய  பதிவில் ஷிவ்கேராவின் யு கேன் வின் (You Can Win) என்ற புத்தக தொகுப்பிலிருந்து படித்ததில் பிடித்ததாக நம் இலக்கை நாம் அறிந்தால் வெற்றி நம்மை அறியும் என்ற பதிவில் இலக்குகளை அமைத்தலும் அடைவதும் குறித்து சாட்விக் சாதனையுடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் நம்முடைய இலக்குகள் ஏன் முக்கியமானவை ? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

நல்ல சுட்டெரிக்கும் வெய்யிலி்ல், நல்ல சக்தி வாய்ந்த ஒரு லென்ஸை ஒரு தாளின் மேல் அசைத்துக் கொண்டிருந்தால், அந்தத் தாளில் தீ பற்றவே பற்றாது. ஆனால் அதை ஒரே இடத்தில் மையப்படுத்திப் பிடித்து கொண்டிருந்தால், அந்தத் தாள் தீப்பற்றிக் கொள்ளும். இதுவே ஒருமுகப்படுத்துவதின் சக்தியாகும்
.
ஒரு கால்பந்தாட்ட அணி களத்தில் முழு உற்சாகத்தில் இருக்கும் போது கோல் கம்பங்களை யாரோ பெயர்த்துச் சென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஆட்டம் என்னவாகும்? அங்கேதான் ஒன்றுமே இல்லையே, நாம் எப்படி கோல் போடுவது? நாம் இலக்கை நெருங்கி விட்டோம் என்று எப்படி தெரிந்து கொள்வது? திசையே இல்லாத உற்சாகம் காட்டுத்தீ போன்றது, அது விரக்தியி்ல் கொண்டு போய் விட்டு விடும். இலக்குகளே நாம் ஒரு திசையில் போய் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைத் தரும். அடுத்த பதிவில் கனவுகளால் எப்படி இலக்கை அடைய முடியுமென பகிர்கிறேன்.

No comments:

Post a Comment