Tuesday, October 6, 2015

வாழ்க்கைத் தத்துவங்கள் - பொன்மொழிகள்

வாழ்க்கைத் தத்துவங்கள் - பொன்மொழிகள்
1.   சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.
 
2.   ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.
 
3. போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.
 
4.   வாழ்க்கை தரும் பாடம்
  • எதுவும் சில காலம்தான்.
  • எதிர்ப்பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக இருக்காது.
  • நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே. உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.
  • சிந்தனை செய், கோபப்படாதே.
  • வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.
5.   வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.
 
6.   அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
 
7.   உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.
 
8.      உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை. கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே. அது பார்க்கப்படுபவன் பிழையல்ல, பார்ப்பவன்  பிழை.
 
9.      யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்.
 
10. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும், உண்மையான் அன்பின் பெருமை.
 
11.  மௌனத்தில் வார்த்தைகளையும், கோபத்தில் அன்பையும் உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.
 
12.  உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும், கோபத்தில் உள்ள காதலையும், மௌனத்தில் உள்ள காரணத்தையும் யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களே உங்கள் அன்புக்கு உரிமை உடையவர்.
 
13. உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.
 
14. இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குப் புரிவதில்லை.
 
15.  ஒருவரின் அருமையை அவர்களை பிரியும் தருணத்தில் மட்டுமே உணர முடியும், நினைவுகளின் துணையோடு.
 
16.  ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரைவிட, அவர்களை இழக்கக்கூடாது என்று நினைக்கும்போது வரும் கண்ணீருக்கு இன்னும் வலி அதிகம்.
 
17. எதுவுமே உயர்ந்தது இரண்டு முறை, கிடைப்பதற்கு முன்பு தவறவிட்ட பின்பு.
 
18. தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே அதை எடுத்துக்கொண்டால் அது இனிக்கும், மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும்.
 
19.  எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக, சிலர் புன்னகையாக.
 
20.  ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை முட்டாள்கள் கண்களிலும், அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.
 
21. உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.
 
22. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது, அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது, அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

23. உங்கள் எண்ணம் பண்பட்டு இருந்தால் உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால் உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண்பட்டுவிடும். இதனால் உங்கள் எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது.
 
24. நமது சொல் அல்லது செயலுக்கு மூலகாரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ அல்லது எதையும் செய்யும் முன்போ அதற்கான உந்துதல் முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.
 
25.  உருவத்தில் எப்படி இருந்தாலும் உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்த உலகமே உன்னை நேசிக்கும்.
 
26. எல்லாக் காயங்களுக்கும் ஒரு மருந்து, குழந்தைகளின் புன்னகை என்னும் அருமருந்து.
 
27.  எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.
 
28.  நீ சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
 
29.  நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க அருகிலிருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.
 
30. தவறு செய்வது மனித இயல்பு.
நாம் ஒரு தவறை செய்யும்போது,
  • அதை நியாயப்படுத்தக்கூடாது.
  • அதை மறுக்கக்கூடாது.
  • பிறரைக் குற்றம் சாட்டக்கூடாது.
  • அதை மீண்டும் செய்யக்கூடாது.
  • பிறகு என்னதான் செய்யவேண்டும்,
  • ஒப்புக்கொள்ளுங்கள்.
  • மன்னிப்புக் கோருங்கள்.
  • கற்றுக் கொள்ளுங்கள்.
31.  தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை.
 
32. வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்.
 
33.  மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும், பிறர் செய்த தவறுகளுக்குச் சிறந்த நீதிபதியாகவும் இருக்க விரும்புகிறான்.
 
34. அறிவாளிகளுக்கு அறிவு அதிகம், ஆனால் முட்டாள்களுக்கு அனுபவம் அதிகம்.
 
35.  தலைகுனிந்து என்னைப் பார், தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன். - புத்தகம்.
 
36. அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி; கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
 
37.  நல்லவனாய் இரு. ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள்தனமான விஷயம் எதுவுமில்லை.
 
38.  வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே. உன் நிழல்கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்.
 
39.  அனைவரையும் நேசி, சிலரை மட்டும் நம்பு, ஒருவரை பின்பற்று, ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்து கற்றுக்கொள்.
 
40.  இருளைத் தூற்றுவதற்குப் பதில் அகலை ஏற்றுங்கள்.
 
41. வீரனைப் போரிலும், யோக்கியனை கடனிலும், மனைவியை வறுமையிலும், நண்பனை கஷ்டகாலத்திலும் அறிந்துகொள்ளலாம்.
 
42.  பழைமைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
 
43.  வாழப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
 
44.  பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும்போதுதான் தெரியும்.
 
45. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரமாக செல்வந்தனாவான்.
 
46.  கீழே விழாமல் இருப்பது பெருமையில்லை, விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை.
 
47.  என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர், அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள் -  எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
 
48. இதயத்தால் காதல் கொள், கண்களால் அல்ல.
 
49.  எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும், மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
 
50.  உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.
 
51. துன்பத்தை நினைத்து மகிழ்ச்சியை இழக்காதே, காதலே நினைத்து வாழ்க்கையை இழக்காதே, சோதனையை நினைத்து சாதனையை இழக்காதே, தோல்வியை நினைத்து வெற்றியை இழக்காதே.
 
52. நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்,
  • ஏழ்மையிலும் நேர்மை.
  • கோபத்திலும் பொறுமை.
  • தோல்வியிலும் விடாமுயற்சி.
  • வறுமையிலும் உதவி செய்யும் மனம்.
  • துன்பத்திலும் துணிவு.
  • செல்வத்திலும் எளிமை.
  • பதவியிலும் பணிவு.
53. வாழ்க்கையில் பெறவேண்டிய பதினாறு பேறுகள்,
  • புகழ்.
  • கல்வி.
  • வலிமை.
  • வெற்றி.
  • நன்மக்கள்.
  • பொன்.
  • நெல்.
  • நல்விதி.
  • நுகர்ச்சி.
  • அறிவு.
  • அழகு.
  • பெருமை.
  • இனிமை.
  • துணிவு.
  • நோயின்மை.
  • நீண்ட ஆயுள்.
54.  மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும், தரணியேலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும், வானமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும். – பாரதியார்.
 
55.  எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள். – காந்திஜி.
 
56.  துன்பங்ளுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன. - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
 
57.  அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான். - அன்னை தெரசா.
 
58.  விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும், மன்னிப்பு கொடுங்கள் தவறுகள் குறையும், மனம் விட்டு பேசுங்கள் அன்பு அதிகமாகும். - அன்னை தெரசா.
 
59. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். - ஆபிரகாம் லிங்கன்.
 
60.  உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும், உன் செயல்ளுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். – சாக்ரடீஸ்.
 
61.  மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை. – சாக்ரடீஸ்.
 
62.  கண்ணாடி தான் என் சிறந்த நண்பர். ஏனெனில், நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை. - சார்லி சாப்ளின்.
 
63.  உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை. - சார்லி சாப்ளின்.
 
64.  நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது, நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது, நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது. – கன்ஃபூஷியஸ்.
 
65.  நமக்கு நெருக்கமானோர் நம்முடன் பேசாதபோது ஏற்படும் வலியைவிட, அவர்கள் மற்றவருடன் நெருக்கமாக பேசும்போது ஏற்புடும் வலி அதிகம்.
 
66.  கஷ்டப்படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது, சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது, ஆனால் கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வி இருக்காது.
 
67. சந்தோசத்த தான் நம்ம சுத்தி இருக்குற எல்லாருகிட்டயும் பகிர்ந்துக்கணும். கஷ்டம்னு வந்தா தனியா நின்னு ஜெயிக்கிறவன் தான் மனுஷன்.
 
68.  வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்கக் கூடாது. விரும்பி எது வந்தாலும் “TAKE CARE”, விலகி எது போனாலும் “DON’T CARE”.
 
69.  இன்பத்தை “INBOX” இல் வை, கவலையை “OUTBOX” இல் வை, புன்னகையை “SENT” பண்ணு, கோபத்தை “DELETE” பண்ணு, மனதை “VIBRATE” செய்து பார், வாழ்க்கை தானா “RINGTONE” ஆக மாறும்.

No comments:

Post a Comment