தன்னம்பிக்கை: வெற்றி நிச்சயம்
நாம பெருமை பட்டுக்கொள்ளும் பிறவி... மனிதப்பிறவி... எங்கே சொல்ல??
மனிதர்கள் மனிதர்களை ஆளும் காலம் இது... என்னவென்று சொல்ல? நம் சொந்த விருப்புக்கு வேலை செய்ய முடிவது இல்லை...
கூலி கொடுக்கும் முதலாளி நம் கடவுள்... அவர் கூறுவதால் கடவுளையும் நாம சந்தையில் விற்க முனைகிறோம் என்ன கொடுமை? நமக்கு மிஞ்சியது ஏமாற்றம்... மீண்டும் தேடத் துவங்குகிறோம்... விளைவு இன்னொரு முதலாளிக் கடவுளிடம் தஞ்சம்... நம் தேடல் என்று முடியும்?
என்றாவது நம் கனவுகளை, லட்சியங்களை, ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்தோமா? செய்திருந்தால் மற்றவரின் உதவி எதற்கு? சுயமாக எதாவது செய்யலாமே???? நமக்கு பிடிக்காத இடத்தில, பிடிக்காத மனிதர்களுடன் நமக்கு என்ன வேலை?
நமக்கு இரண்டு வழிகளே உள்ளன....!!! ஒன்று மற்றவரின் ஆணைக்கு அடங்கி வேலை செய்வது... மற்றொன்று நம் சுய மரியாதையை இழக்காமல் இருப்பது... இரண்டும் நம்மால் ஆகாது... பின் முதலாளி கடவுளின் வரங்களை,
வசவுகளை வாங்கி ஒடுங்கி வாழ்வதை தவிர வேறு வழி இல்லை... நாம் ஆழவும் முடிவதில்லை அழவும் முடுவதில்லை...நம் வறட்டு கெளரவம் தடுக்கிறது...
இந்த பொருளாதார சந்தையில் விலை போன பல ஆடுகள் அனைத்தையும் விட்டு விட்டு வெறும் பொருளை மட்டுமே ஈட்டுகின்றன... மார் தட்டுக்கொள்கின்றன...

அவை ஆடுகள் அல்ல நரிகள், பின் விளைவுகளை எதிர் நோக்காமல் தன்னைப்ப்ற்றி மட்டுமே சிந்திக்கும் வஞ்சனை நிறைந்த பிறவிகள்... பாவம் என்ன செய்யும்...
எல்லோரும் முதலாளிகலாய் இருந்து விட்டால் யார் தான் தொழிலாளி ஆவது? சரியான கேள்வி... இதோ பதில்...
நான் அனைவரையும் முதலாளி ஆக சொல்லவில்லை... நமக்கென்று சில இடங்கள், சில மனிதர்கள் நம்மை போல தேடலில் இருப்பார்கள்... அவர்களை இனம் கண்டு கூட்டு சேருவோம்... நம் விருப்பம், நம் தொலை நோக்கு, நம் கனவுகளை நிறைவு செய்வோம்... அதனால் மற்றவர்க்கும் லாபமே...
விருப்பமில்லாத இடத்தில அடிமை போல் இருப்பதை காட்டிலும் விரும்பும் இடத்தில், விரும்பும் மனிதர்களிடம் விருப்பம் போல் வேலை செய்வது மன அமைதி தரும்... அமைதி இல்லா மனது ஆக்கவழியில் செயல்படாது...
நம் தவறுகள் - மாற்றங்களை ஏற்காதது... நம் அறிவின் சொல்லைக் கேட்காதது... மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயம்... மற்றும் பேராசை...
இதை விடுத்து நம் வழியில் செல்லலாமே... யாருக்கும் நாம் அடிமை இல்லை... நமக்கும் யாரும் அடிமை இல்லை... நமக்கு மரியாதை இல்லா இடத்தில என்ன வேலை?
என்று நம் சுயமரியாதையின் இழுக்குக்கு இறுதி நாளோ.. அன்று இந்த பாரத்தை இரக்கி வைத்து முன் செல்வோம்...
வெற்றி நிச்சயம்...!!! ஒரு நாள் மன அமைதியுடன் வேலை செய்து பாருங்கள்... அன்றே நம் வாழ்வின் முன்னேற்ற பாதையின் முதல் நாள்... வெற்றி நிச்சயம்...!!! ----
No comments:
Post a Comment