வெற்றிப்பாதையில் செல்வோமா...??!!!
வெற்றிப்பாதையில் செல்வதற்கு நமது மனதிற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். இடைவிடாத முயற்சியாலும், பயிற்சியாலும், அனுபவத்தினாலும் நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு வெற்றியடைவதற்கான வழிவகைகளை நாம் கற்றுகொள்ள முடியும்.
1.நல்ல நகைச்சுவையைப் படித்தால் தயங்காமல் வாய்விட்டுச் சிரியுங்கள். (அதனை பெரும்பாலும் காலை தூங்கி எழுந்தவுடன் முயற்சி செய்யாதீர்கள் பல்லை துளக்கிவிட்டு முயற்சிக்கவும். சமயத்தில் உங்களுக்கே மயக்கம் வரலாம். ஹி.....ஹி....ஹி...)
2.துக்கம் அதிகமானால் தனியறையில் கண்ணீர்விட்டு அழுதிடுங்கள். அந்த கண்ணீர் துளிகளிலேயே உங்கள் சோகமும் துக்கமும் கரைந்து போகட்டும். (அதற்காக தினமும் துக்கமா இருக்குனு... எப்போதும் தனியறையிலேயே இருக்காதீர்கள்..! அப்புறம் இரத்தக்கண்ணீர் இராதாரவினு நெனச்சாலும் நெனச்சுடுவாங்க.... ஹி...ஹி..ஹி...)
3.மகிழ்ச்சி வந்தால் உற்சாகம் பொங்க சத்தமாகப் பாடுங்கள். (அதற்காக பொது இடங்களிலோ அலுவலக (அ) நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் முயற்சிக்கும் துணிச்சல் வேண்டாம். உங்க பாட்டை கேட்டு நீங்க கொலை செய்ய முயற்சித்ததாக பிரச்சினைகள் வரலாம். ஹி...ஹி..ஹி.. )
நாம் எதை எப்படிப் பார்க்கிறோமோ, நினைக்கிறோமோ அப்படியே நாம் உருவாகிறோம் என்பது விதி. நம்மை நாம் எப்படி இருப்பதாகப் பாவித்துக் கொள்கிறோமோ நாளடைவில் அப்படியே ஆகிவிடுகிறோம். ”நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று நினைத்துப்பாருங்கள். நினைப்பை நம்புங்கள். உற்சாகமாகவே அமையும்.
நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளுமே உற்சாகத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றது. நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டால் வாழ்கையில் சலிப்பு இருக்காது. எதிலும் நிறைவு காணும் எண்ணம் தானாக வந்துவிடும். நிறைவு ஏற்பட்டால் நிச்சயம் மகிழ்ச்சி வரும். மகிழ்வுடன் பாதை அமைத்தால் அது நிச்சயம் வெற்றிப்பாதையாகத்தான் இருக்கும்.
என்ன நண்பர்களே..!!! நாம் நமது வெற்றிப்பாதையில் மகிழ்ச்சியுடன் பயணிப்போமா....!!!???

No comments:
Post a Comment