Wednesday, April 17, 2013

பிராணாயாமம்

பிராணாயாமம் செய்ய தகுதியான ஆசனம் :

பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்

பிராணாயாமம் செய்ய தகுதியான நேரம்

1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்து செய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம் கழித்து சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது.

பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள் :

1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும்.

பிராணாயாமத்தின் பயன்கள் :

1. தினமும் செய்தால் வியாதிகள் வராது.
2. ஆரோக்கியமாக இருக்கலாம்.
3. கொழுப்பைக் குறைக்கும்.
4. ஆயுளை அதிகரிக்கும்.
5. நினைவாற்றலை அதிகரிக்கும்.
6. தலைவலி வராது.
7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு, மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும்.
8. இரத்தநாளங்கள் சுத்தமாகும்.
9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை அதிகரிக்கும்.
10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும்.
11. குரல் இனிமையாகும்.
12. மலம், ஜலம் குறையும்.
13. இரத்த அழுத்தம் குறையும்.
14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது.
15. பசி குறையும். தாகம் குறையும்.
16. சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
17. தேவையற்ற தூக்கம் குறையும்.
18. எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் எளிதில் சோர்வடையாமல் செய்யலாம்.
19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும் சக்தி ஏற்படும்.
20. மூச்சுக்காற்றை சீராக்கும்.
21. நுரையீரலில் காற்றினால் ஏற்படும் மாசுக்களைக் கட்டுபடுத்தும்.
22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற பிராணவாயு இதனால் அதிகரிக்கும்.
23. ஆகவே பிராணாயாமம் பயிற்சி செய்பவர்கள் 7 மணிநேரம் தூங்கினால் போதும். 8 மணி நேரம் தூங்க வேண்டியதில்லை. சிறிது நேரம் தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த சுறுசுறுப்பு ஏற்படும்.

பிராணாயாமம் செய்வதற்கு முன்பு

§  • நீங்கள் முதன் முறையாக பிராணயாமம் செய்வதாக இருந்தால் உங்கள் உணவில் கட்டுப்பாடு வேண்டும். எளிமையான, சுலபமாக ஜீரணிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களில் காபி, டீ இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிது அனுபவம் ஆன பின் நீங்கள் எதைவேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை உணவு சாத்திவீகமாக இருக்க வேண்டும். பசும்பால், பசுந்நெய், கோதுமை, சாறு செறிந்த பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்புகள் இவற்றை அதிகமாக உண்ணலாம். சூடான மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

§  • பிராணாயாமத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு வரவேண்டும். விட்டு விட்டு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் நேரத்தை குறைத்து போகப் போக நேரத்தை அதிகரிக்கவும்.

§  • பிராணாயாமம் செய்யும் முன் வயிறு காலியாக இருக்க வேண்டும்.

§  • செய்யும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

§  • காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யும் முன் டாக்டரிடம் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.

§  • காலை நேரம் பிராணாயாமம் செய்ய ஏற்றது. இது முடியாவிட்டால் சாயங்காலம் செய்யலாம்.

§  • பிராணாயாமத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பே பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.

§  • குருவிடம் கற்றுக் கொள்ளாமல் பிராணாயாமத்தை செய்யக் கூடாது.

பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்

§  பிராணாயாமத்தின் நோக்கங்களும், நன்மைகளும்

§  • பிராணாயாமத்தின் முக்கிய நோக்கம் உடலின் ஜீவ சக்தியை கட்டுப்படுத்துவது.

§  • தொடர்ந்து செய்து வந்தால் சுவாசம் நிலைபெறும். சீராக இயங்கும். இந்த சக்தி உடல் மற்றும் மனதிற்கு ஒய்வைத் தரும்.

§  • சுவாச இயக்கம் மேம்படும். மற்றும் சுவாச இயக்கத்தின் கோளாறுகள் நீங்கும்.

§  • ஜீரண சக்தி மேம்படும். ஜீரண மண்டலத்திலுள்ள வால்வுகள் டையாஃபர்ம், அடிவயிறு தசைகள் இவையெல்லாம் சரிவர இயங்கும்.

§  • உடலின் ரத்த சுழற்சி சீராகும் இதனால் நரம்புகள் வலுப்படும். மூளை, முதுகுத்தண்டு, நரம்புகளின் இயக்கம் இவையெல்லாம் சீராகும்.

§  • உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் மூளை மட்டும் உடலுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்.

§  • மனதை ஒருநிலைப்படுத்துவது சுலபமாகும். ஆயுள் பெருகும்.

§  • ஒட்டுமொத்தமாக உடலின் எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கும். இதனால் யோகா செய்பவரின் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பிராணாயம் செய்யும் வழிமுறை

பெருவிரலால் வலது நாசியை அடைத்துக்கொண்டு, ‘ஓம்’ என்ற மந்திரத்தை மனதார நான்குமுறை உச்சரித்த படியே இடது நாசி வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுங்கள்.

அதன் பின்பு ஆட்காட்டி விரலை இடது நாசி மீது வைத்து, இரு நாசிகளையும் அடைத்து,’ஓம்’ என 16முறை மனதால் உச்சரித்தபடி மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தி வையுங்கள்.

பின்னர்,பெருவிரலை வலது நாசியிலிருந்து எடுத்து,’ஓம்’ என எட்டுமுறை உச்சரித்தபடி மெதுவாக மூச்சை வெளிப்படுத்துங்கள். உள்ளே இழுத்த மூச்சு அனைத்தையும் வெளியிடவேண்டும் என்பதால் மூச்சை வெளியே விடும்போது அடிவயிற்றை உள்ளிழுத்தபடி எல்லா மூச்சையும் வெளியேற்ற வேண்டும்.

மூச்சை உள்ளே இழுத்தல் ,உள்ளே அடக்குதல், வெளியே விடுதல் ஆகிய மூன்று செயல்களையும் செய்து முடித்தல் பிராணாயாமப் பயிற்சியினை ஒருமுறை நாம் செய்து முடித்துள்ளோம் என பொருள் .

பெருவிரலால் வலது நாசியை அடைத்து ஒருமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்த பின்பு ஆட்காட்டி விரலால் இடது நாசியை அடைத்து மறுமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்யவேண்டும்.இதுபோன்ற பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்

No comments:

Post a Comment