நினைப்பு இருக்க யானை மேய்க்க… ஆனா…” இந்த வாக்கியங்கள் இன்றும்கூட சில வீடுகளில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள், இந்த வாசகங்களை பெரீய… இரப்பர் வைத்து அழித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
தன் குட்டிகளை பிறந்தவுடன் புலி வாயில் கவ்விக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறோம்.
சற்றே பயம் வந்து செல்லும் நமக்கு, அது வாயில் குட்டிகளை வைத்திருப்பதைப் பார்ப்பதற்கு. ஆனால் தாயின் வாயில் இருக்கின்ற புலிக்குட்டி நினைக்கும், ”அம்மா என்னைத் தூக்கிச் செல்வதைப் போன்று என் இரையை நான் தூக்க வேண்டும்” என்று. சற்றே வளர்ந்தவுடன் கிட்டத் தட்ட 10 மாதங்களில் தன்னுடைய இரையை இலகுவாக வாயில் கவ்விவிடும். அதன் நினைவும் கவனமும் முழுவதும் இரையை எப்படிக் கவ்வுவது என்றேதான் இருக்கும். மனிதன்கூட அப்படித் தான்! புலியின் வாயில் அதன் இரை. மனிதனின் மனதில் அவனின் லட்சியம்.
அண்டார்டிகா உறைபனியின் இடையே இரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. கிடக்கின்ற இரகசியங்களை கிளர்ந்து எடுக்க ஆராய்ச்சி நிலையங்கள் முயன்று கொண்டுதானிருக்கிறது. பல நிஜப்படுத்த வேண்டிய நினைவுகள் உறைந்து கிடக்கின்றன. உறைந்த நினைவுகள் உருகினால் போதும் நிஜங்களாகிவிடும். உருக வைக்க முயற்சி எனும் வெப்பமும், பயிற்சி எனும் பாத்திரமும் வேண்டும்.
நம்முடைய நினைவுகளே நமக்கான கடிவாளம். நினைவின் தீவிரத்தன்மை அதிகரிக்க அதிகரிக்க கடிவாளம் இலகுவாகின்றது.
”காட் விட்” என்று ஒரு பறவை உண்டு. அதனுடைய எண்ணம் எப்பொழுதும் தான் பறக்க வேண்டும் என்பதிலேயே இருக்கும். பறப்பது என்றால் சும்மா பறப்பது இல்லை. தொடர்ந்து எட்டு நாள்! பதினோராயிரம் கிலோ மீட்டர்!! உண்ணாமல் உறங்காமல் !!!
செயலின் வெற்றி என்பது மனதின் நினைவின் வெற்றியே. பழைய நிஜங்களை (நினைவு) மறந்து போன ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையின்போது மருத்துவர் சொல்லுவார், நீங்கள் இப்பொழுது என்னையே பாருங்கள்! நீங்கள் என் ஆளுமையில் இருக்கிறீர்கள், நீங்கள் இப்பொழுது எட்டு வயதில் இருக்கிறீர்கள், இப்பொழுது பத்து வயதில்… அடுத்து 13 வயதில்… உங்கள் நினைவுகளை விண் நோக்கி செலுத்துங்கள்” என்று சொல்லிக்கொண்டே போவார். இது நடைமுறை. தன் நினைவு இல்லாத ஒருவரை, வேறு ஒருவர் (டாக்டர்) அவரின் நினைவுக்கு அவரை இழுக்கிறார். இழுக்க முடியும் என்றால், சுய நினைவில் உள்ள நம்மால் ஏன் நம் நினைவுகளை நிஜங்களாக்க முடியாது? நிச்சயம் முடியும்.
புதுமையாக செய்யத் தெரியாதவன் என்று ஏளனம் செய்யப் பட்ட ஒருவர்தான் பின்னாளில் ”டிஸ்னி லேண்ட்” என்கின்ற அற்புதத்தைத் தந்த ”வால்ட் டிஸ்னி”!
நான்கு வயது வரை ஒரு சிறுவன் பேசவே இல்லை! ஏழுவயது வரை படிக்கவேயில்லை! மிக மந்தமானவன் என்று விமர்சிக்கப்படுகிறான், சுற்றி இருந்தவர்களால். ஆனாலும் அவனுக்குள் இருக்கும் ஆற்றல் அவனுக்கு மட்டுமே தெரியும், தெரிந்தது! உறைந்து போயிருந்த தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தான், ஆற்றல் சமன்பாடாக (உ ‘ ம்ஸ்ரீ2 )!!
பள்ளியில் படிக்கின்ற காலத்தில், படிக்கின்ற அத்தனையையும் சற்றே மறந்துவிட, உ’ம்ஸ்ரீ2 என்ற ஆற்றல் தத்துவமும், அதைத் தந்த ஐன்ஸ்டீன் மட்டும் மனதில் உறைந்து, உறைபனியாய் நின்றது அச்சிறுவனுக்கு! பள்ளி நாடகத்தில் நடிக்க என்ன வேஷம் என்று கேட்டால், எனக்கு வேஷம் வேண்டுமானால் போடுவேன். ஆனால் அது ஐன்ஸ்டீனாகத்தான் இருக்க வேண்டும் என்பான் அந்தச் சிறுவன்.
பேசுவதில் கெட்டிக்காரனான அச்சிறுவன், பத்தாம் வகுப்பு படிக்கின்றபோது ஐன்ஸ்டீனின் உருவங்களை வரைந்து தள்ளினான். ’2வில் கோவையில் தாவரவியலிலும் (ஆர்ற்ஹய்ஹ்), விலங்கியலிலும் (ழர்ர்ப்ர்ஞ்ஹ்) டாப் ஸ்கோரர்! ஆ.நஸ்ரீ. உயிர் நுண்ணியல் தொழில்நுட்பத்தில் (ஆண்ர் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) பட்டப்படிப்பில் மிகச்சிறந்த மாணவன் மட்டுமல்ல, கல்லூரியின் மாணவர் தலைவர்! அடுத்து முதுகலை படிக்க தேர்ந்தெடுத்த இடம் லண்டனில் உள்ள லெஸ்டர் பல்கலைக் கழகம். ங.நஸ்ரீ. ஜெனடிக்ஸ் பட்டம் மெரிட்டால்!!
அடுத்த ஆறு மாதங்கள் மான் செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேலை. அடுத்து, கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை வர, நினைவில் நிற்கின்ற லட்சியம் தடுத்தாட் கொண்டது.தான் விரும்பிய துறையில் டாக்டரேட் பட்டம் பெற வேண்டும்.
வந்தது வசந்தம்! ஜெர்மனியிலிருந்து நேர்காணலுக்கான அழைப்பு அது. நேர்காணலில் தன்னுடைய ஆய்வுப் பணிக்கான விருப்பத்தையும் நோக்கத்தையும் சொல்லச்சொல்ல ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு இந்திய இளைஞனின் நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த சொல்நடையும் பிடித்துப்போனது. வந்திருந்த ஜெர்மன், அமெரிக்க இளைஞர்களுக்கிடையேயும் மின்னினான் இந்திய இளைஞன். உடனடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான்.
எல்லாம் சரி, ஐன்ஸ்டீனுக்கும் இளைஞனுக்கும் என்ன பொருந்தியது என்று கேள்வி வரும்? இந்திய இளைஞனுக்கு டாக்டரேட் செய்ய கிடைத்த நாடு ஐன்ஸ்டீனின் தாயகம் ஜெர்மனி! கிடைத்த இடம் ஐன்ஸ்டீன் பணிபுரிந்து கொண்டிருந்த ஏங்ப்ம் ஏர்ப்ற்க்ஷ் இங்ய்ற்ழ்ங். அந்த இளைஞனின் பெயர் முரளிதரன். ஐன்ஸ்டீனின் இருக்கைக்கு அருகில் இந்திய இளைஞனின் நம்பிக்கை! இளைஞன் வெற்றி பெற்று சாதிக்க நமது நம்பிக்கையின் வாழ்த்துக்கள்.
ஒரு செயலை எண்ணியவர் தாம் எண்ணிய படியே செயலாற்றுவதிலும் உறுதி உடையவர் களானால் நினைத்ததை நினைத்தவாறே செய்து வெற்றியடைவர்.
No comments:
Post a Comment