Friday, March 6, 2015

முடியும் என்று சொல்லுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்

முடியும் என்று சொல்லுங்கள் நீங்களும் ஜீனியஸ்தான்


மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உலகம் தட்டை என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த போது, இல்லை. உலகம் உருண்டை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நிரூபிக்க முடியாது என்று மற்றவர்கள் கூறியதை நிரூபித்துக்காட்டியதால்தான் கலிலியோ ஜீனியஸ்.

பலரும் இதயம்தான் அனைத்து உடலியக்கங்களையும் செய்கிறது என்று கூறிய போது மூளைதான் அனைத்தையும் செய்கிறது என்று கூறியதுதான் அரிஸ்டாட்டிலை ஜீனியஸ் ஆக்கியது.

இவனால் கல்வி கற்க முடியாது. ஏன் வகுப்பில் என்ன நடக்கிறது என்றுகூட கவனிக்க முடியாது என்று கூறியபோதும் 1000க்கும் மேற்பட்ட விஷயங்களை கண்டறிந்து தன்னால் முடியும் என்று காட்டியதால்தான் எடிசன் ஜீனியஸ்.

மனிதன் பறப்பது என்று சிந்திப்பதுகூட ஆண்டவனுக்கு எதிரான செயல் என்ற பிரசங்கம் செய்து கொண்டிருந்த பாதிரியாரின் மகன்களான ரைட் பிரதர்ஸ், விமானம் கண்டறிந்து காட்டினார்கள் தாங்கள் ஜீனியஸ் என்பதை.

கண் தெரியாது. காது கேட்காது. வாய் பேச முடியாது என்ற நிலையிலும் தன் 25 வயதில் சிறந்த கல்வியாளர் என்ற பட்டம் வாங்கிய ஹெலன் கெல்லர் ஜீனியஸ்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். முடியாது என்பதையே தன் பேச்சாக கொண்டிருந்தவர்களுக்கு முடியும் என்பதை மூச்சாக மாற்றிய உதாரணம்.

எனவே, மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப் படாதீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

முடியாது என்று உலகமே சொன்னாலும் முடியும் என்று தன் செயல்களால் சொல்பவர்கள் தான் ஜீனியஸ். நீங்கள் இந்த உலகத்திற்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

முடியும் என்று நினைத்தால்தான் எந்த வேலையும் முழுமையாக முடியும். நீங்கள் ஜீனியஸ் ஆவது உட்பட…

ஹோம்ஒர்க்

உங்கள் வாழ்க்கையில் எந்த விஷயத்தையெல்லாம் முடியாது என்று நினைத்தீர்களோ, அதில் எதையெல்லாம் மாற்ற முடியும் என்று பட்டியலிடுங்கள். ‘முடியும்’ என்ற எண்ணத்தோடு ஏதாவதொன்றை முயற்சித்துப் பாருங்கள். அது முடியும் என்று தோன்றும்போது நீங்களும் ஜீனியஸ்தான் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

No comments:

Post a Comment