Wednesday, April 8, 2015

ஊக்கம்!!!

ஊக்கம்!!!

ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே:

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

காய்த்த மரம் கல் அடிபடும்.

காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

செய்வன திருந்தச் செய்.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.

நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.

பதறாத காரியம் சிதறாது.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

வாழ்வும் தாழ்வும் சில காலம்.

உதவி

உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! – சுவாமி விவேகானந்தர்.

சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.
– O. Wayne Rollins.

ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.
– Lao Tzu 

உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்! -பெரியார்

உழைப்பு – வெற்றி

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
– சுவாமி விவேகானந்தர்.

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
– வில்லியம் ஷேக்ஸ்பியர்

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் – எமர்சன்

சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் – ஹென்றி போர்டு

திறமைதான் ஏழையின் மூலதனம் – எமர்சன்

வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை – இம்மூன்றும் இருந்தால் போதும் – தாமஸ் ஆல்வா எடிசன்

பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை – விவேகானந்தர்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே – ஹென்றி போர்டு
உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி

நம்பிக்கை

இது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி:

தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், ” ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் ” என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.

புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

No comments:

Post a Comment