வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க!!!
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை.
மனித வாழ்க்கையில் பெரும்வாரியான நிகழ்வு பணத்தை தேடுதல் அல்லது அதை பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலிலே முடிவடைந்துவிடுகிறது. நமது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, (Objectetive). பண்பு வாழ்வா? இல்லை பண வாழ்வா என்றால் பணம்தான் பிரதானம் என்பார்கள். பணத்திற்குக்கூட ஒரு கடவுளை படைத்த பண்பாளர்கள் நாம்.
இந்த உலகில் இரவும் பகலும் மாறி மாறி நிகழ்கின்றன. இரவு என்ற ஒரு தன்மை உண்டா? அல்லது பகல் என்ற ஒரு தன்மை உண்டா?
இரவு என்றால் சூரியன் மறைந்த பின் வரும். சூரியன் எழுந்த பின் வருவதை பகல் என்கிறார்கள். “சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்” என்கிறார்கள். இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு?
உண்மையில் சூரியன் மறைவதும் இல்லை எழுவதும் இல்லை.அது ஒரு நிலையான பிம்பம். இந்த உலகம் இரவு பகல் என்று கூறுவதை விட ஒளியற்ற தன்மை. இருள்ளற்ற தன்மை என்றே கூறவேண்டும்.அதை போன்றுதான் இந்த மனித வாழ்க்கை மாய இருளிலே ஒளி அற்ற தன்மையில் வாழும் போது பிரச்சனை விஸ்வரூபம் தாங்கி வருகிறது.
அறிவு என்பது ஒளியுள்ள நிலைக்கு மாறும் போது ஞானம் என்னும் அல்லது வெற்றி மகுடம் ஒளிவெள்ளமாய் ஓடிவருகிறது. வெற்றி என்பது எங்கும் மறைந்திருக்கவில்லை.
மறைப்பொருளாகவும் இல்லை. அது எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்திதான். நாம் அதை தேடி செல்வதில்லை. வெற்றியை அலைந்து திரிந்து அனைத்துக்கொள்பவர்களை சூரிய ஒளியை போல் பிரகசிக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு தாரக மந்திரம். சொல்லச்சொல்ல தானாகவே உருவேற்றிக்கொள்ளும். உழைப்பவர்களுக்கு மட்டும்.
அன்று நாடோடிகளாக அலைந்து திரிந்தவர்கள் இன்றைய ஐரோப்பியர்கள். சில நூற்றாண்டுக்கு முன் ஏழ்மையில் வாழ்ந்த வெள்ளையர்கள் இன்று செல்வ செழிப்பில் இருப்பதற்கு அவர்களின் அயரா உழைப்பு மட்டும்தான்.
செல்வத்தை தேடி திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்று வார்தையில் மட்டும் நாம் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் கடல் கடந்து சென்று அடைந்த அச்செல்வத்தை கொண்டு இன்று உலகில் மகா பணக்கர்ர்களாக இருப்பதற்கு அவர்களின் செயலின் வெற்றிதான்.
அவர்களின் முன்னோர்கள் எடுத்த முடிவுகள், அவர்கள் பட்ட துயரங்கள் இன்று அவர்களின் சந்ததியினர் செல்வ செழிப்பில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
அன்று அந்த ஐரோப்பியர்களின் துணிகரமான முடிவுகள். அலையை கடந்து புதிய பாதையை கண்டுபிடிக்கவேண்டும் என்ற தன்முனைப்புதான் அவர்களை செல்வம் சேர்க்கும் நிலைக்கு உயர்த்தியது. செல்வத்தை தேடி அலைந்ததானால் சாதனையை படைக்க முடிந்தது.
அன்று அவர்கள் விதைத்த விதை விரிச்சமாய் வளர்ந்திருக்கிறது. முயற்சியும் உழைப்பும் உரமாய் இட்டு எதையும் சாதிக்கவேண்டும் என்ற முணைப்போடு செயலில் இறங்கி இன்றும் வெற்றி நடைப்போடுகின்றனர்.
நம்மைப்போன்று அவர்களின் மூதாதையர்கள் தயங்கி இருந்தால். அல்லது இஸ்லாமியர்களின் ஆளுமையில் மனம் தளர்ந்திருந்தால் அவர்களும் இன்று அடிமைப்பட்ட இனமாகதான் வாழ்ந்திருப்பார்கள்.
சரித்திரம்கூட இன்று மாறியிருக்கும். அன்று அவர்கள் எடுத்த முடிவுகள் இன்று உலக வரைப்படத்தை மாற்றி இருக்கிறது. உலக பண்பாடுகளை மாற்றி இருக்கிறது. ஏன் தனிமனித நிலைப்பாடுகள் கூட மாறி இருக்கிறது. அதுதான் முடிவுகளின் வலிமை.
இன்று நாம் எடுக்கும் முடிவுகள் நாளை நமது தலைமுறைகளின் முதல் அடியா? இல்லை முதல் படியா என்பதை உணர்ந்து பார்த்தால் உழைப்பின் வெற்றியை அவர்களுக்கு சொந்தமாக்கவேண்டும்.
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை. வெற்றி என்பது எங்கும் மறைந்திருக்கவில்லை. அது திடமான நமது நெஞ்சினில்தான் இருக்கிறது
No comments:
Post a Comment