சந்தோஷத்தின் வழி!!!
ஒருவர் எப்போதுமே மனது கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை.
அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார்.
துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று “குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?” என்று கேட்டார்.
அதற்கு குரு அவரிடம், “ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது நீ என்ன நினைப்பாய்?” என்று கேட்டார்.
அதற்கு வந்தவர், “இன்றும் மனம் கஷ்டமாக இருக்குமோ! என்று நினைத்து எழுவேன்” என்றார்.
அப்போது குரு “இது தான் தவறு. நீ உன் மனம் கஷ்டமாக இருப்பதற்கு நீ தான் காரணம்.
காலையில் எழும் போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மனதில் நீயாகவே நினைத்தால், கண்டிப்பாக நீ சந்தோஷத்தை உணர்வாய்.
கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டத்தை தான் உணர்வாய்” என்று கூறினார்.
ஆகவே எதுவுமே, அவரவர் மனநிலையைப் பொறுத்தே உள்ளது என்பதை இந்த கதை நன்கு தெளிவாக கூறுகிறது.
விடியும்பொழுது நல்ல பொழுதாக விடியட்டும் …….
No comments:
Post a Comment