எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு
* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும்.
* ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.
* இந்த உலகில் உள்ள எல்லாம் இறைவனனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் கொடுப்பதை அனுபவியுங்கள். அதைத் தவிர அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆவலில் அலையாதீர்கள்.
* பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை,முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் எல்லாம் வருங்காலத்தில் நம்மைஎதற்கும் தகுதியற்றவர்களாக்கிவிடும்.
* எப்போது பிரச்னை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்ற மனவருத்தம் உண்டாவதில்லை.
* லட்சியம் நிறைவேற வேண்டுமே என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும். அந்த லட்சியத்தை நோக்கி நம் முயற்சிகள் இருக்கும். அப்போது நம்முடைய ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கும்.
தாகூர்
No comments:
Post a Comment