Thursday, February 28, 2013


பொன்மொழி: 1

வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல.

- எட்வின் சி. ப்ளிஸ்

பொன்மொழி: 2

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.


என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான் என்ன செய்ய வேண்டும்?
இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.

- நதானியல் பிராண்டன்

பொன்மொழி: 3

ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான்.
- கென்றி சி. லிங்க்

பொன்மொழி: 4

உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.

- எலனொர் றூஸ்வெல்ற்

பொன்மொழி: 5

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.

- பிலிப் குறொஸ்பி

பொன்மொழி: 6

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.
- அக்னஸ் றெப்லையர்

பொன்மொழி: 7

எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.

- எமர்சன்

பொன்மொழி: 8

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.
- ஸாடி

பொன்மொழி: 9

கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.

- நெப்போலியன் ஹில்

பொன்மொழி: 10

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.
- நெப்போலியன் ஹில்

பொன்மொழி: 11

புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.
- மார்கஸ் அரேலியஸ்

பொன்மொழி: 12

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.


- பேர்ள் எஸ். பக்

பொன்மொழி: 13

பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.

- யாரோ

பொன்மொழி: 14

மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.

 சாள்ஸ் பேட்

பொன்மொழி: 15

நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.
- தலாய் லாமா.

பொன்மொழி: 16

வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
- அல்பேட் ஐன்ஸ்டீன்.

பொன்மொழி: 17

மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.


- இயன்லா வன்சான்ற்.

பொன்மொழி: 18

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.


- எச். ஜி. வெல்ஸ்

பொன்மொழி: 19

மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. 


- பார்பரா ஷெர்

பொன்மொழி: 20

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

டக்ளஸ் ஹட்

No comments:

Post a Comment