- சிரிப்பு
- அடுத்தவரை பாராட்டுவது
- அடுத்தவரின் நலன் காப்பது
- கவணிக்கும் திறனை மேம்படுத்துதல்
- அனைவரையும் ஒருங்கிணைப்பது
- விவாதங்களை தீர்த்து முடிவெடுப்பது
- தெளிவாகப் பேசுவது
- நகைச்சுவை உணர்வோடு இருப்பது
- மற்றவர்களின் சூழலில் இருந்து பார்ப்பது
- குறை கூறக்கூடாது(முறையிடுதல்)
சிரிப்பு
சிலர் எப்பொழு தும் மனச்சோர்வுடன இருப்பாகள். அப்படி இல்லாமல் எல்லோருடனும் நண்பர்களாகப் பழகி அவர்களை சந்தோஷமாக இருக்க வைக்கலாம்.நம் வேலை மற்றும் வாழ்க்கை இரண்டையும் சந்தோஷமாகவும்,நேர்மறையான எண்ணங்களோடும் வாழ வேண்டும்.அடிக்கடி சிரித்துப் பழக வேண்டும்.முடிந்த வரை அடுத்தவருக்கும் நேர்மறையான எண்ணங்களை விதைக்க வேண்டும்.
அடுத்தவரை பாராட்டுவது
வேலை பார்க்கும் சூழல் மற்றும் குடும்பத்திலும் அவர்கள் செய்யும் வேலை சிறப்பாக இருதால் உடனே பாராட்ட வேண்டும்.யாராவது உங்களுக்கு உதவி செய்தால் நன்றி சொல்லுங்கள்.அவர்களை அடுத்தவர் முன்நிலையிலும் பாராட்டும் போது,அவர்கள் மேலும் மேலும் ஆர்வத்தோடு வேலை செய்வார்கள்.
அடுத்தவரின் நலன் காப்பது
அடுத்தவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்,உடம்பு சரியில்லாத சூழல் அல்லது இறப்பு போன்றவை ஏற்படின் அவர்கள் மீது அக்கறையோடும்,இறக்ககுணத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.நேருக்கு நேராக கண்களைப் பார்த்துப் பேச வேண்டும்.அவர்களின் பெயரையும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.அவர்களின் சூழல் அல்லது தேவைகளை அடுத்தவருக்குத் தெரியப்படுத்தி உதவிகளைப் பெற்றுத் தர வேண்டும்.
கவணிக்கும் திறனை மேம்படுத்துதல்
கவணிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளும் போது தான் அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயம் எவ்வாறு கையாளப்படுகிறது என்று உணர முடியும்.மேலும் ஒரே வார்த்தைக்குள்ள பல்வேறு வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.நன்கு கவணிக்கும் போது தான் வேலை பார்க்கும் சூழலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முழுவதுமாக சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
அனைவரையும் ஒருங்கிணைப்பது
நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அனைவரையும் சேர்ந்து வேலை பார்க்க வைக்க முடியும். எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும்.யாரையும் புறனி பேசக்கூடாது.மற்றவர்களின் கருத்துகளையும்,வேண்டுதல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஏதாவது வாக்கியமோ அல்லது ஏதாவது தெரிவிக்கும் போதோ ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்து தெரிவிக்க வேண்டும்.இது நன் மீது ஒரு நல்ல மதிப்பை உருவாக்கும்.
விவாதங்களை தீர்த்து முடிவெடுப்பது
அனைவரையும் ஒன்று சேர்த்து வேலை பார்க்க வைக்கம் போது யாராவது ஒருவர் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தீர்த்து வைக்கமுடியும்.இதன் மூலம் இருவரிடம் எப்படி இணக்கம் செய்வது என்ற முறையை அறியலாம்.ஒருவேளை சொந்த விருப்பு,வெறுப்புகள் அல்லது வேலை நிமித்தமாக மாற்றுக் கருத்துகள் இருப்பின் அவர்களை ஒன்றாக அமர செய்து அவர்களுக்குள் உருவாகும் வேற்றுமைகளை தீர்க்க வேண்டும்.இது போல் தலைமைப் பொறுப்புகளை எடுக்கும் போது அனைவரிடமும் நல்ல மரியாதையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும்.
தெளிவாகப் பேசுவது
என்ன சொல்கிறோம்,எப்படி சொல்கிறோம் என்பதில் முழு கவணம் செலுத்த வேண்டும்.நன்கு பேசும் திறன் கொண்டவர்கள் அவர்களுடன் வேலை பார்ப்பவர்களிடம எந்த ஒரு கருத்து வேறுபாடுகளோ ஏற்படாது.நல்ல அறிவுக்கூர்மையும்,விஷியங்களை நன்றாகக் கையாளும் முதிர்ச்சியும் இருந்தாலே இது போன்ற தலைமைப் பணிகளை மேற்கொள்ளலாம்.வயது இதறகு ஒரு தடையே கிடையாது.
நகைச்சுவை உணர்வோடு இருப்பது
ஏதாவது முட்டாள் தனமாகவோ அல்லது ரொம்ப ஆர்வக்கோளாறாகவோ இருந்தாலும் கோபப்படக்கூடாது.எல்லாவற்றையும் நகைச்சுவை உண்ர்வோடு கையாளும் போது கோபம் குறைவ்தோடு மக்களின் அன்பையும் பெறமுடியும்.
மற்றவர்களின் சூழலில் இருந்து பார்ப்பது
மற்றவர்களின் உள் உணர்வுகளை அவர்கள் பக்கம் இருந்து பார்ப்பது.மற்றவர்களின் சூழலில் இருந்து அவர்களின் பொறுப்புகளை பார்க்கும் போது நாமும் அது போல் சூழ்லில் திறமைமிக்க செயல் பட முடியும்.
குறை கூறக்கூடாது(முறையிடுதல்)
நமக்காக அடுத்தவரை குறை கூறும் போது,அவர்களுக்கு தெரியும் பட்சத்தில் அது பல கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.இப்படி செய்யும் போது நம்முடைய சொந்தம்,நண்பருக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து நடந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment