Friday, February 15, 2013

தியானம் ஏன் செய்ய வேண்டும்?


பதஞ்சலி மகரிஷி மனதிற்கு ஒரு திறமை இருக்கிறது என்று கூறுகிறார். அந்த திறமையை சரியான பாதையில் பயன்படுத்தும் பொழுது நமக்கு எது தெரிகிறதோ அதுவே நிஜம். அந்த திறமையை பயன்படுத்த தெரியாத பொழுது நமக்கு எது தெரிகிறதோ அது தவறு.

ஒரு நூலுக்கு இரண்டு நுனிகள் உள்ளன. ஒன்று 'பிரமாணம்', மற்றொன்று 'விபர்யை'. முதல் நுனி பிரமாணத்தில் இருந்து அறிவு கூர்மையால் செயல்படும்போது வெளிப்படும் வாஸ்தவ ஞானம், நிஜமாகிறது. அப்பொழுது நாம் செய்யும் அனைத்துமே சரியானதாக இருக்கும். எந்தத் துறையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது சரியாக இருக்கும். நாம் எந்த முடிவெடுத்தாலும் அது சரியான முடிவாக இருக்கும்.

'விபர்யை' நுனியில் நாம் வேலை செய்யும் பொழுது, அது தவறாகவே இருக்கும். எந்த துறையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது தவறாகவே அமையும். அப்பொழுது நாம் எந்த முடிவெடுத்தாலும் அது தவறாகவே இருக்கும். ஏனென்றால் அந்த முடிவை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. அங்கு அந்த 'விபர்யை' நுனி அவ்வாறு செய்கிறது.

சிலர் தம்மை 'துரதிஷ்டசாலி' என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் எது செய்தாலும் அது தவறாகவே முடிகிறது. அவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் பலன் கிடைப்பதில்லை. அந்த 'விபர்யை' நுனியில் இருந்து மாறவேண்டும். அவர்களுடைய மனம் சரியான நிலையில் இருக்க வேண்டும். அவர்களுடைய மனமானது நாம் சரியாகத்தான் செய்ல்படுகிறோம் என்று நினைக்கின்றது. ஆனால் அது தவறாகத்தான் போய் முடிகிறது.

பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுவது போல், நாம் செயல்படும் பொழுது நம்
மனம் சரியான திசையில் செயல்படும். வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற இயலும் மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிக்ள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் அவரவர் வாழ்க்கையில், எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அந்த துறையில் அவர்கள் திறமையுடன் உயர்ந்து புகழ் பெறுவார்கள். அவர்கள் குடும்பத்திற்கும், நாட்டிர்கும் நல்ல பெயர் தேடிக் கொடுப்பார்கள். பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் கூறிய ஒன்பது வழிகள்

1. சரியான உணவு:

சாத்வீகமான சைவ உணவை உண்ண வேண்டும். தமோ குணத்தை ஊக்கும்விக்கும் உணவையும் பாவத்தைத் தேடித் தரும் அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சுத்த சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். இதுவே சரியான உணவு.

 2. மிதமான உணவு:

பசி எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் உணவு உட்கொள்ள வேண்டும். ருசியாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்ளக் கூடாது. இதனால் விரும்பத்தகாத பின்விளைவுகள் ஏற்படும்.

3. நிராஹாரம்:

'லங்கனம் பரமஒளஷதம்' என்று கூறுவார்கள். ஆகையால், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை நிராஹாரத்தை மேற்கொள்ள வேண்டும் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

4. சரியான வாக்கு:

நாம் பேசும் வார்த்தை சுத்தமாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தையானது நமக்கும், சமுதாயத்திற்கும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகளை கைவிட வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது. யாருக்கும் தீங்கு விளைவிக்ககூடாது.

5. மிதமான வாக்கு:

அளவோடு பேச வேண்டும். அதிகம் பேசினால் பொய், மற்றும் தவறுகள் வெளிவரும். இதனால் நமக்கு நன்மை கிடையாது.

6. மெளனம்:

மெளனத்தால் நாம் சக்தியை பெறுகிறோம். காந்தியடிகள் மெளனத்தைக் கடைப்பிடித்தார். மெஹர் பாபா, ரமண மகரிஷி தங்கள் வாழ்க்கை முழுவதும் மெளனத்தைக் கடைப் பிடித்தார்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் மெளனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

7. சரியான சிந்தனை:

நம் சிந்தனைகள் சுயநலம் இல்லாமல் பொதுநலமாக இருக்க வேண்டும். நம் சிந்தனைகள் சமுதாயத்திற்காகவோ இல்லை நமக்காகவோ பயன்பட வேண்டும்.

8.மிதமான சிந்தனைகள்:

நாம் தேவையானவற்றை மட்டுமே சிந்திக்க வேண்டும். தேவையற்றவைகளைப் பற்றி சிந்திக்கும் பொழுது சக்தியையும் மன அமைதியையும் இழக்கிறோம். உடல் நலம் குன்றி போகும். ஆகையால் குறைந்த அளவே சிந்திக்க வேண்டும்.

9. சிந்தனையற்றநிலை (தியானம்):

"நிர்விஷயம் மனஹா - தியானம்" என்றார் பதஞ்சலி. மனதை சிந்தனையற்ற நிலையில் வைத்துக் கொள்வதே தியானம். இது பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் கூறிய 'சுவாசத்தின் மேல் கவனம்' தியான முறையால் கைகூடும்.

இந்த தியானம் செய்வதால் மேற்படி சொன்ன எட்டு விஷயங்களையும் கடைபிடிக்க முடியும். ஆகையால் எவ்வளவு அதிகமாக தியானம் செய்கிறோமோ அவ்வளவு லாபங்கள் பெறலாம்.

இயல்பாக உபவாசத்தால் 0.17%ம் மற்றும் மெளனத்தில் 0.9%ம் லாபம் கிடைக்கும். ஆனால் தியானத்தால் 99% லாபம் கிடைக்கிறது. இந்த தியானத்தின் மூலம் மனதிற்கு தெளிவு, (நிம்மதி) கிடைக்கிறது. தியானத்தின் மூலம் மற்றும் பல லாபமும் பெறமுடியும். அதுமட்டுமின்றி நம் மனதை "பிரமாண" நுனியில் வைத்துக் கொள்ளவும் முடியும். நம் வாழ்க்கையில் நிறைய அற்புதங்களைக் காணலாம். நாம் விரும்பியதை அடையலாம். வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக் கொள்ளலாம். நாம் மட்டுமின்றி, குடும்பத்தையும் நாம் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளலாம். ஆகையால், தியானத்தை 'திவ்ய ஒளடதம்' என்று கூறினார்கள்.

தியானத்தால் நம் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம். இதை நாம் கடைபிடிக்கும்போது பயம் நீங்கி விடும். நம் மனமும், உடலும், நிலையாக இருக்கும். அப்பொழுது அந்த 'பிரமாண' நுனி செயல்படத் துவங்கும். அப்பொழுது ("பிரமாண" நுனி மூலம்) எதை நாம் அறிந்து கொள்கிறோமோ அதுவே நிஜம். அதுவே உண்மை. "பிரமாண நுனி" செயல்படும் பொழுது மனதிற்கு ஒரு வடிவம் கிடைத்தால் நாம் ரிஷியாவோம். கடவுள் ஆவோம்.

No comments:

Post a Comment