Sunday, February 24, 2013

சில நல்ல அறிவுரைகள்


மனிதன் வெறுப்பு கொள்வது அதிசயமல்ல. அவன் எதையாவது வெறுத்துதான் தீர வேண்டும்
.
கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்.

விழுவது இயற்கை; எழுவதே வாழ்க்கை.

நடுக்கடலில் கப்பல் மாலுமிக்குத்தான் சொந்தம்.

அடுத்த வீட்டுக்காரனுடன் நட்பாயிரு. அதற்காக இடையில் உள்ள சுவற்றை எடுத்துவிடாதே.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.பள்ளியில் போய் முட்டுவதால் படிப்பு வருவதில்லை.முடியுமானால் பிறரைவிட அறிவாளியாய் இரு. ஆனால் அவர்களிடம் மட்டும் கூறாதே.

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு.எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது.தற்பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.

நான் ஏன் இரண்டும்கெட்டானாய் வாழ்கிறேன்?

சிலநேரம் வாழ விரும்புகிறேன், சிலநேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன்?இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.எது? ஆசைகள்.ஆசைகளா? ஆம்.ஆசைகள் நிறவேறும்போது, வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.அவை நிறவேறாதபோது, வெறுப்புக் கொள்வீர்கள். 

1.ஒருபோதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்ய மாட்டான்.

2.எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்.

3.ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.

4.உண்மையான செல்வம் பணமன்று; குணம்.

5.செல்வமும் சரி, சாமர்த்தியமும் சரி, முறையாக உபயோகித்தால்தான் பெருமை தரும்.

6.வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் எப்படி வாழ்வது என்பதே.

7.கற்பது கடினம், கற்றதை மறப்பது அதைவிட கடினம்.

8 கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், அது குருட்டுத்தனமாய் இருக்கக் கூடாது.

9.பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாகி தங்கி விடாமல் பார்த்துக் கொள்.

10.யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு.

11.உண்மை ஒரு தீவத்தி, அருகில் செல்ல பயந்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதை கடந்து செல்கிறோம்.

12.உண்மை மனிதனுக்குச் சொந்தம், பிழை அவனுடைய காலத்துக்கு சொந்தம்.

13.எதை நாம் அறியவில்லையோ, அது நம்முடைய தவறு.

14.உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்

15.முட்டாள் எல்லா விசயத்திற்கும் சிரிப்பான்.

16.வறுமையினால் பெரிய துன்பமுமில்லை; செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை

17.எதிரியின் கர்வத்தை மாற்ற, நாம் பயன்படுத்தக் கூடிய மருந்து அன்பு ஒன்று தான்.

18.தன்னம்பிக்கை ஒன்று-தான் மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மருந்து.

19.முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு. ஆனால், அதை அவர்களி டம் கூறாதே.

20.ஏளனம் என்பது கீழ்மக்கள் உள்ளத்தில் எழுகிற நச்சுப் புகை.

தந்திரம்.

21.உண்மையை மறுப்பதற்கோ, பொய்மையை நிலைநாட்டுவதற்கோ தந்திரம் செய்வது. இது தடை செய்யப்பட்டதாகும்.

22.உண்மையை நிலைநாட்டுவதற்கோ, பொய்மையை அழிப்பதற்கோ தந்திரம் செய்வது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

23.வெறுக்கப்பட்ட செயலில் இருந்து தப்பிப்பதற்காக தந்திரம் செய்வது. இதுவும் அனுமதிக்கப்பட்டதாகும்.

24.விரும்பத் தகுந்த செயலைக் கைவிடுவதற்காக தந்திரம் செய்வது. இது வெறுக்கப்பட்டதாகும.

நிதானம்

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் பல விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படுவது கோழைத்தனம்.

புத்திசாலிகள் பிரச்சினைகளை எதிர்கால வாய்ப்பாக மாற்றி கொள்கிறார்கள்.பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என மண்டையை போட்டு புரட்டிக் கொண்டிருப்பதைவிட புதிதாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பது புதிய வாய்ப்பை உருவாக்கி கொள்ள வசதியாக இருக்கும்.

ஒவ்வொரு வழியிலும் பிரச்சினைகளை சமாளிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பது இன்றைய உலகில் மிகவும் அவசியம் ஆகிறது.

முதலில் செய்ய வேண்டியது என்ன? அவை முக்கியத்துவம் வாய்ந்ததா? அதே நேரத்தில் அது அவசியமானதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிலர் எப்போதும் எதிலும் அவசரம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் முக்கியமான வேலையை மறந்து விடுவார்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் வரிசையாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். திட்டமிட்டு எந்த ஒரு வேலையையும் செய்தால்தான் அதில் வெற்றி பெற முடியும். எதையும் அவசரப்பட்டு செய்யக் கூடாது. நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்படுகிறவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சிறிய விஷயங்களில்கூட நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்துவது, மரியாதையுடன் நடந்து கொள்வது போன்றவை நமக்கு மற்றவர்களிடம் நல்ல மதிப்பை தரும்

. நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது நிச்சயம் கவனம் தேவை. நல்ல நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் சந்திக்கும் அனைவரையும் நண்பர்களாக தேர்ந்தெடுக்க கூடாது. விரோதி என்று தெரிந்த பின்னர் அவருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள கூடாது.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டோம் எனில் அதை எளிய முறையில் முடித்துவிட முடியும்.நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.வாழ்க்கையை தெரிந்து கொண்டவர்கள் மிக மிகக் குறைவு.பிரச்சினைகள் - சிக்கல்கள் - தடைகள் - தோல்விகள் வரும்போது மனம் தளர்வடைகிறது. தடுமாறுகிறது. அந்த நேரத்தில் ஏன் இப்படி ஆனது? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து செயல்பட்டால் நம் பிரச்சினை சூரிய ஒளிப்பட்ட பனித்துளிபோல் கரைந்து போகும்.

ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்
______

No comments:

Post a Comment