Friday, February 15, 2013

"தியானம் = புத்தி + ஞானம் = இன்பம்"


"என்னடா உனக்கு புத்தி, ஞானம் இல்லையா?" எவ்வாறு சிறு வயதில் பெரியவர்கள் வினவக் கேட்டிருக்கிறோம். ஆனால் அப்பொழுது புரியவில்லை.

'ஏதோ தவறு செய்திருக்கிறோம்... ஆகையால் பெரியவர்கள் திட்டினார்கள்' என நினைத்தோம். 'புத்தி' என்றால் என்ன? "ஞானம்" என்றால் என்ன? - சற்றே சிந்தனை செய்யுங்கள்.

புத்தி

'புத்தி' என்றால், அடிப்படை இங்கித ஞானம்.

'புத்தி' என்றால், இன்றைய சூழ்நிலைகளைப் பற்றி சரியாக அறிந்திருப்பது. புத்தியுடன் இருப்பது என்றால், எப்பொழுதும் சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்வது. எப்பொழுதும் விழிப்புணர்வுடன் பதிலளிப்பது, எப்பொழுதும் விழிப்புணர்வுடன் பணி செய்வது. புத்தியுடன் இருப்பது என்றால், எப்பொழுதும் சரியான அளவு உணவை உட்கொள்வது. புத்தியுடன் இருப்பது என்றால், முறையான உலகாய சிந்தனைகளை மற்றும் அறிவியல் பூர்வமான சொற்களை பிரயோஜனப்படுத்துவது. முழுமையான 'புத்தி' என்றால் "Basic Commonsense" அடிப்படை இங்கித ஞானம்.

ஞானம்

'ஞானம்' என்றால், 'சுய ஆன்மாவைப் பற்றிய சுய அனுபவ ஞானம்'.

'ஞானம்' என்றால், மறுபிறவி சித்தாந்த சத்தியத்தைப் பற்றிய மற்றும் கர்ம சித்தாந்த சத்தியத்தைப் பற்றிய 'அனுபவ ஞானம்'.

'ஞானம்' என்றால், 'பரலோகங்கள் பற்றிய சாஸ்திரியமான அறிவு'

'ஞானம்' பெற்றிருப்பது என்றால் சாஸ்திரியமான, பரலோக ஆன்ம அனுபவங்களைப் பெற்றிருப்பது - என்பதாகும்'

ஒருமுறை பின்னோக்கிப் பார்த்தல்

இந்த ஞானத்தைப் பற்றி பெரியவர்களுக்கு 'ஒன்றும் தெரியாது' என்றே கூற வேண்டும். சில பெரியவர்களுக்கு, வாஸ்தவங்கள் உள்ளது உள்ளபடி தெரியாமல் இருந்தாலும், பொழுதுபோக்காக 'புத்தி' 'ஞானம்' என்ற வார்த்தைகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவார்கள்.

புத்தி + ஞானம் = புத்தத்துவம்

பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்தில், புத்தத்துவத்திற்கும், ஞானத்துக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கத்தில், புத்தி மற்றும் ஞான வளர்ச்சிக்கு விசேஷமான பயிற்சி தரப்படுகிறது. அனைவரும் 'புத்தி', 'ஞானம்' பெற்றிருப்பீராக. 'புத்தி', 'ஞானம்' இவ்விரண்டையும் சமமாக பெற்றிருப்பவர்களே 'புத்தர்கள்'.

சிலருக்கு புத்தி இருக்கலாம், ஆனால் 'ஞானம்' இல்லாமல் இருக்கும்.

சிலருக்கு 'ஞானம்' இருக்கலாம், ஆனால் 'புத்தி' இல்லாமல் இருக்கும். மக்கள் அனைவரும் புத்தி, ஞானம் இவ்விரண்டையும் பெற்றிருப்பவர்களாக மாற வேண்டும்.

எல்லோருமே 'புத்தர்கள்' ஆவீர்களாக.

தியானம் = புத்தி + ஞானம்

முதன்முதலில் 'தியானம்' தியான சாதகம், என்பது மனிதர்களுக்கு 'புத்தியை' உண்டாக்கும்.

'புத்தி இல்லாதவர்கள்', 'புத்தியுடையவர்களாக' உருவாகுவார்கள்.

'தியானம்' மற்றும் 'தியான சாதகம்' என்பவை ஞானத்தை பெறச்செய்யும்.

'தியானிகள்' குறுகிய காலத்தில் 'ஞானிகள்' ஆவார்கள்

பிரமிட் ஆன்மிக மன்ற இயக்கம் "புத்தர்கள்" ஆக வேண்டுமென விரும்புகிறவர்களை அழைக்கிறது. பூலோகத்தில் அனைவரும் விசேஷமான புத்தியும், அபாரமான ஞானமும் பெற்றிருப்பீராக.

புத்தி + ஞானம் = இன்பம்

புத்தி மற்றும் ஞானம் பெற்றிருந்தால் மட்டுமே வாழ்க்கை இன்பமாக இருக்கும், 'லோகா சமஸ்தா சுகினோ பவந்தி' அனைத்து உலகங்களும் இன்பத்துடன் வாழட்டும்.

தியானம் = புத்தி + ஞானம் =  புத்தத்துவம் = இன்பமயமான வாழ்வு

No comments:

Post a Comment