Sunday, February 17, 2013

நிறுவனத்தின் திறன் விருத்தி


நிறுவனத்தின் திறன் விருத்தி என்பது அதன் செயற்பாடுகளை அதிகரிக்கக் கூடிய திறமைகளைக் கொண்டு இயங்குவது என்று எளிமையாக குறிப் பிடலாம். ஓரு நிறுவனமாவது தம்மால் செய்யக்கூடிய அதி உச்ச சேவையை செய்யக்கூடிய அறிவையும் ஏனைய திறன்களையும் கொண்டி ருப்பது என்று பொருள் சொல்லலாம.; அநேகமாக நிறுவனங்கள் ஏதோ செயற்பாடுகளைச் செய்து இதுதான் எமது உச்ச செயற்பாடு என்று எண்ணியவாறு ஒரு எல்லையுடன் நிறுத்திக்கொண்டு விடுகின்றன. 

தம்மால் இதற்குமேலும் சாதிக்க முடியும் சேவையை வளர்க்க முடியும் என்றவாறிலும் இன்னமும் உயர்வடைவதற்கும் அறிவைப் பெறுவதற்கும் எமது திறன்களை வளர்ப்பதற்கும் இடமிருக்கின்றது என்றவகையிலும் சிந்திப்பதில்லை இதன் காரணமாகவே நிறுவனங்கள் திறன் விருத்தி அடைவதில்லை என்பது கருதப்படுகிறது.ஓரு நிறுவனத்தின் திறன் விருத்தி என்பது அதனுடைய முகாமைத்துவ திறன்களிலும் ஏனைய நடவடிக்கை களை செய்யும் திறன்களிலும் அவற்றை வழிடத்தும் திறன்களிலும் தங்கி இருக்கின்றது.

முகாமைத்துவ திறன்கள் என்று குறிப்பிடும் போது நிறுவனத்தை ஒட்டு மொத்தமாக வழிநடாத்தும் திறனுடன் திட்டமிடுதல் திட்டங்களை அமுலாக்கம் செய்தல், கண்காணித்தல் மதிப்பீடுசெய்தல் தவறுகளை திருத்திக் கொள்ளுதல் பிழைகள் வருகின்ற போது கட்டுப்படுத்துதல் நெறிப்படுத்துதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் இத்தகைய சிறந்த முகாமைத்துவத்தின்; ஊடாக நிறுவனத்தில் உரிய வேலைகள் உரிய நேரத்தில் முடிக்கப்படும். செயற்படுகின்ற திட்டங்களுக்கு நடைமுறை களுக்கு ஏற்படுகின்ற செலவீனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் பணம் மீதப்படுத்தப்படும் நேரம் மீதப்படுத்தப் படும். வளங்கள் மீதப்படுத்தப்படும் ஒரு சிறந்த முகாமைத்துவசெயற்பாடுள்ள நிறுவனத்தின் வெளியீடுகள் அல்லது அவற்றின் செயற்பாடுகள் தரரீதியாகவும் எணண்ணிக்கை ரீதியாக வும் அதி உச்ச நிலையில் காணப்படும். தம்மால் அதி உச்ச சேவையை மக்களுக்கு எவ்வாறு வழங்கலாம் என்று தினமும் முகாமைத்துவத்தில் உள்ளவர்கள் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள் அதி உச்ச சேவையை வழங்குகின்றபோது வள விரயங்கள் தவிர்க்கப்படவேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நிறுவனத்தில் உள்ள திறன்கள் விருத்தியாகும் போது வளங்கள் மீதப்படுத்தப்படுகின்ற நிலமையும் தோன்றும்.

சுருக்கமாகவும் விரைவாகவும் காரியங்களை செய்யக்கூடியவாறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உதாரணம் திறன்விருத்தியுள்ள ஒரு நிறுவனத்தின் மூல செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக காணப்படும். உதாரணம் எல்லோரும் செயற்படுவதுபோல அவர்கள் காகிதத்தையும் பேனாவையும் பாவிக்காது கணனியை பாவித்து வேலையை செய்வார்கள். 

கணனி பாவித்தல் என்பது ஒரு கௌரவத்திற்குரிய செயலாக அன்றி இந்த வேலையை இலகுவாகவும் கோவைகளை இலகுவான முறையில் பேணுவதற்கும் ஆய்வுகள்; பகுப்பாய்வுகள் போன்றவற்றை இலகுவாக கணனி மூலம் செய்வதன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் விரை வாக தகவல்களை அனுப்புவதற்கும் கணனி பயன்படுத்தப்படுவது வினைத் திறன் மிக்க செயற்பாட்டுக்கு வழிவகுக்கும.; இத்தகைய செயற்பாடுகளை செய்கின்ற ஒரு நிறுவனம் ஆவது திறன் விருத்தி உள்ள நிறுவனமாக கொள்ளப்படுவதற்கு இது ஒரு உதாரணமாகும்.

இதே போல ஊழியர்கள் அல்லது பணியாளர்கள் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நோக்கத்திற்காக என்ன என்ன செயற்பாடுகளை எவ்வப்போது எவ்வாறு செய்யலாம் என்ற அறிவை கொண்டிருப்பார்கள். இவர்களின் செயற்பாடுகள் ஊடாக நிறுவனத்தினுடைய திறன் மேம்படுத்தப்படுகிறது இவ்வாறு பணியாளர்களின் அறிவு செயற்பாடுகள் வளங்களை பயன் படுத்துகின்ற பாங்கு இருக்கும். வளங்கள் உச்ச நிலைக்கு பயன்படுத்து கின்ற நிலை அதி உச்ச நிலை வழங்குகின்ற நிலை போன்றவை நிறுவனத்தினுடைய வினைத்திறனை அதிகரிக்கும். இவ்வாறான பல்வேறு வழிகளிலே வினைத்திறனை அதிகரிப்பதற்கான நிலை ஒன்றுதான் நிறுவனத்தின் திறன் விருத்தியாகும் இதற்கு என அறிவு நிதி மற்றும் தேவையான உபகரணங்கள் வாகனங்கள் கருவிகள் மற்றும் வழங்கள் தேவைப்படலாம். 

இவை அனைத்தையும் உரியமுறையில் பயன்படுத்திய நிறுவனம் தன்னுடைய நோக்கத்திற்கேற்ப மக்களுக்கு அதி உச்ச சேவையை வழங்குவதற்கு திறன் விருத்தி உள்ளதாக இருத்தல் வேண்டும்.

உங்கள் பணிளார்களை மதிப்பீடு செய்ய வேண்டுமா?

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்

நிறுவன திறன் விருத்தியில் பணியாளர் திறனினை அபிவிருத்தி செய்தல் என்பதுவும் முக்கியமானதாகும். நிறுவனத்தின் அனைத்து செயற் பாடுகளி லும் நேரடியாக தொடர்பு பட்டிருப்பவர்கள் அந் நிறுவன பணியாளர்களே. பணியாளர்களை உள்ளக வாடிக்கையாளர்கள் எனலாம். இவர்களின் நலனே நிறுவன நலனை நிர்ணயிக்கின்றது.

பணியாளர் தொடர்ந்தும் உங்கள் நிறுவனத்தில் நிலைத்திருக்கச் செய்வ தற்கும். அவர்களின் உச்ச சேவையினை நிறுவனம் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமெனில் அவர்களை காலத்திற்கு காலம் மதிப்பீடு செய்வதுடன் உரிய காலத்தில் நடவடிக்கைகளும் ஊக்குவிப்புக்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மதிப்பீட்டின் மூலமே ஒவ்வாருவரினதும் வேலையின் தரம், அவர்களின் சுய வளர்ச்சி, மேம்பாடடைய வேண்டிய அம்சங்கள், தேவைகள் என்பன வெளிப்படுவதற்கும், அதற்கேற்ப நிறுவனம் திட்டங்ளை வடிவமைப்பதற்கும் இலகுவாக அமைகின்றது. பணியாளர்களைப் பல்வேறு முறைகளில் மதிப்பீடு செய்ய முடியும். அவர்களை நாளாந்தம் கண்காணித்தல் மூலமும், வரிசை நிலை முகாமையாளர்களூடாகவும், படிவங்களை பயன்படுத்தி நேரடிக் கலந்துரையாடல் ஊடாகவும் மதிப்பிட முடியும். 

நேரடிக் கலந்துரையாடலை நிறுவனத்திலுள்ள உயர்மட்டப் பணியாளர் குழு ஒன்றினைக் கொண்டு செய்வதே சிறந்தது. அவர்களாலேயே தமது பணியாளர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மதிப்பிட முடியும். 

மதிப்பீட்டினை நடாத்தும்போது மதிப்பீடு செய்யும் சூழல் எல்லோரும் விரும்பக் கூடிய நிலையிலும், மனம் திறந்து பேசக்கூடிய நிலையிலும் இருப்பதே சிறந்ததே.

மேற்கூறப்பட்ட முறைகளில் மதிப்பீட்டினை மேற்கொள்ளும் போது பின்வரும் விடயங்களை அவதானிப்பதன்மூலம் ஒவ்வொரு பணியாளரையும் பற்றிய தெளிவான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.

1. ஆங்கில அறிவு.
2. கணனி அறிவு.
3. வேலை பற்றிய அறிவு.
4. ஆளுமை.
5. வேலையை வெளிப்படுத்தும் திறன்.
6. கொடுக்கப்பட்ட வேலையில் ஏற்படுத்திய மாற்றம்.
7. சக பணியாளர்களுடன் கொண்டுள்ள உறவுமுறைகள்.
8. வேலையில் புகுத்திய புத்தாக்க முயற்சிகள், ஆக்கத்திறன்.
9. அர்ப்பணிப்பு.
10. நிறுவனம் தொடர்பான ஏனைய துறை பற்றிய அறிவு.
11. முகாமைத்துவ திறன், அனுபவம்.
12. அறிவுப்பிரயோகம்.
13. கடந்தகால சாதனை.
14. ஏனைய வேலைகளில் உதவுதல்.
15. பொறுப்பேற்க முன்வருதல்.
16. நிபுணத்துவம்.
17. நிறுவனத்தில் நிலைத்திருக்கும் தன்மை
18. திட்டமிடல் திறன்.
19. பொது.

இவ் அடிப்படை விடயங்களுடன் நிறுவனங்களின் தன்மைக்கேற்றவாறு மேலதிக விடயங்களையும் சேர்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு விடயத் திற்கும் புள்ளிகள் வழங்குவதன் மூலம் ஒருவர் பெற்ற புள்ளிகளின் அடிப் படையிலும், குறைவான புள்ளிகள் பெற்ற நடவடிக்கைகளையும் மதிப்பிட முடியும். 

மதிப்பீட்டினை நடாத்தும்போது மதிப்பீடு செய்யும் சூழல் எல்லோரும் விரும்பக் கூடிய நிலையிலும், மனம் திறந்து பேசக்கூடிய நிலையிலும் இருப்பதே சிறந்தது. மேற்கூறப்பட்ட முறைகளில் மதிப்பீட்டினை மேற் கொள்ளும் போது பின்வரும் விடயங்களை அவதானிப்பதன்மூலம் ஒவ்வொரு பணியாளரையும் பற்றிய தெளிவான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு விடயத்திற்கும் புள்ளிகள் வழங்குவதன் மூலம் ஒருவர் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலும், குறைவான புள்ளிகள் பெற்ற விடயங்களின் அடிப்படையிலும் பணியாளரின் முன்னேற்றம் பற்றியும் அவரிற்குத் தேவையான பயிற்சி மற்றும் ஏனைய ஊக்குவிப்புக்கள் பற்றியதுமான பணியாளர் தங்குதிறன் திட்டங்களை திட்டமிடலாம்.

பணியாளர் ஊக்குவிப்பு முறைகள்

நிறுவனத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கும், அதன் நன்மதிப்பு உயர் வதற்கும், நிறுவனம் தனது நோக்கங்களை இலகுவாக அடைந்து கொள்வ தற்கும் காரணமானவர்கள் பணியாளர்களேயாவர். பணியாளர் களைத் தொடர்ந்தும் நிறுவனத்தில் நிலைத்திருக்கவும் தரமான சேவை களை வழங்குவதற்குமான செயற்பாடுகளை நிறுவனம் மேற்கொள்ளல் வேண்டும்.

பெரும்பாலான நிறுவனத்தலைவர்களினால் கூறப்படும் பிரச்சினைகளில் பணியாளர் சார்ந்ததே பெருமளவானதாகும். உரிய நேரத்தில் வேலைகள் நடைபெறுவதில்லை, தரமான வேலைகள் எதிர்பார்க்கப்படுமளவிற்கு செய்யப்படுவதில்லை, பணியாளர் இடைவிலகல், என்பன பிரச்சினை களாகக் கூறப்படுகி;ன்றது. இதனால் திட்டச் செயற்பாடுகள் தாமத மடையவும், பெருமளவு நிதி விரயத்தினையும் நிறுவனங்கள் எதிர் கொள்கின்கின்றன. இதனை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் 'ளுறுழுவு' பகுப்பாய்வு தெளிவு படுத்துகின்றது. அதிலும் பெரும் பலவீனமாக கூறப் படுவது, பணியாளர் இடைவிலகல் ஆகும். இதற்கு என்ன காரணம்? என ஆய்வுசெய்து பிரச்சினைகளிற்கு சரியானதும் பொருத்தமானதுமான தீர்வினைக் காண வேண்டும் அதன் மூலமே பலவீனத்தைப் பலமாக மாற்றி நிறுவனம் தனது நோக்கை அடைவதற்கு வழியேற்படுவதுடன், பணியாளர் இடைவிலகலினையும் கட்டுப்படுத்த முடியும்.

அனைத்து மட்டப் பணியாளர்களும் பல விதமான எதிர்பார்ப்புக்களையும், நோக்கங்களையும், தேவைகளையும் கொண்டுள்ளனர். அவர்களின் தேவை ஒவ்வொருவரிற்கிடையிலும் மாறுபட்டிருக்கும். அவர்களின் எதிர் பார்ப்பு நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில் விரும்பியோ,விரும் பாமலோ வேலையிலிருந்து விலகும் நிர்ப்பந்தத்திற் குள்ளாகின்றனர். 

சம்பளம் போதியளவாக இல்லை.
பதவியுயர்வில்லை.
அசௌகரியமான வேலைச் சூழல்.
திருப்தியற்ற வேலை.
தகுதிக்கேற்ற வேலையில்லை.

அதிகாரிகளின் அணுகுமுறைகள் சரியாக இல்லை. இதுபோன்றன இவ்வாறாக விலகும் பணியாளர்களின் குற்றச் சாட்டுகளாகும். எனினும் இவை மட்டுமே பணியாளர்கள் விலகுவதற்கான காரணங்கள் என்றில்லை. ஏனைய நிறுவனங்களின் கவர்ச்சிகரமான சம்பளமும் ஒரு காரணமாகும். இருப்பினும் சம்பளத்தினை விடவும், மனத்திருப்திக்காக பணிபுரிபவர்களும் நிறுவனங்களில் இல்லாமல் இல்லை. இவ்வாறான

அர்ப்பணிப்புள்ளவர்கள் விடயத்திலேயே நிறுவனம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். பணியாளர் இடைவிலகல் மூலம் நிறுவனம் பல்வேறு சவால்களிற்கு உட்படுகின்ற நிலை ஏற்படுகின்றது.

புதிய பணியாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் உள்ள சிரமமும் செலவுக ளும், புதியவருக்கு நிறுவனம் பற்றி பயிற்றுவித்தல், அவரின் வேலை பற்றி பயிற்சியளித்தல், இந்த இடைப்பட்ட காலத்தில் தடைப்படும் ஒரு தொகுதி வேலை என்பன நிறுவனத்திற்கு வள விரயத்தினை ஏற்படுத்துவ துடன் நிறுவன நன்மதிப்பும் குறைவடையக் காரணமாகின்றது. இவ்வா றெல்லாம் சிரமப்பட்டுப் பயிற்சியளித்து புதிய பணியாளரிற்கு வேலையினை ஒப்படைத்த பின்னரும் நாம் எதிர்பார்க்கும் தரத்துடன் வேலை செய்யப்பட வில்லையெனில்? எனவே, பணியாளர்கள் இடை விலகலினை தடுப் பதற்காக ஊக்குவிப்பு முறைகளைத் தலைமைத்துவம் மேற்கொள்ள வேண்டும். பணியாளர்களை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?. பணியாளர் ஊக்குவிப்பு எனும்போது பெரும்பாலும் சம்பள உயர்வு, பதவியுயர்வு என்ற குறுகிய வட்டத்துடனேயே நாம் நின்றுவிடுகின்றோம். அவ்வாறில்லா மல், பணியாளர்களை உக்குவிக்கும் பல்வேறு முறைகளும் உள்ளன.

பணியாளர் ஊக்குவிப்பு முறைகளில் சில இங்கு தரப்படுகின்றன. இவற்றுள் உங்கள் நிறுவனத்திற்கு எவை பொருத்தம் என்பதைத் தெரிவு செய்து அமுல்ப்படுத்துவதன் மூலம் வெற்றி காணுங்கள்.

1. பணியாளர்களிடையே சுய தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல்
 உளவள ஆலோசனைகள் மூலம்
 பயிற்சிகளை வழங்குவதன் மூலம்
 அறிவு சார் நூல்களை வாசிக்கத் தூண்டுவதன் மூலம் 
 தனிப்பட்ட உரையாடல்களை நடாத்தல்.

2. தொழில் தொடர்பான அறிவை மேம்படுத்தல்.
 வாசிப்பை ஊக்குவித்தல்;
 வேலை தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்.
 விசேட நிபுணத்துவ பயிற்சிகள் வழங்கல்
 வெளியிடச் சுற்றுலாக்கள்

3. பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நட்பு ரீதியான 
கலந்துரையாடல்.

4. சம்பள உயர்வு வழங்கல்.பதவி உயர்வு வழங்கல்.

6. பாராட்டுக்கள் ஊக்குவிப்புக்கள் வழங்கல்.

7. வட்டியில்லாத அல்லது குறைந்த வட்டடியுடன் கடன் வழங்கல்.

8. சிறந்த பணியாளர்களிற்கு நிறுவன நடைமுறை விதிக்கும் மேலான 
கடனுதவி வழங்கல்.

9. உயர்கல்வி வசதிகளை வழங்கல்.
 பயிற்சிவழங்கல்
 உயர்கல்விக்கான பண வசதி
 வட்டியில்லாக் கடன்
 கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

10. பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் வழங்கல்

11. கடனடிப்படையிலான வாகன வசதிகளை வழங்கல்

12. மேலதிக பொறுப்பு வழங்கல்

13. விழாக்கள் நிகழ்வுகளின்போது பாராட்டு அல்லது பரிசில்கள் வழங்கல்

14. அவசர நிதியுதவியளித்தல் 

திறன் விருத்தியின் கூறுகள்
நிறுவனத்திறனாக்கம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வரைவிலக்கணங் கள் கூறப்படுகின்ற போதிலும் நிறுவனமொன்றின் திறன் மேம்பாடு என்பது நிறுவனமானது தனது அதியுச்ச சேவையை மக்களிற்கு வழங்குவதற்கான திறனினைப் பெறுதலாகும் எனச் சுருக்கமாகக் கூறலாம். 

நாம் கடந்த இதழ்களில் தொடர்ச்சியாகத் தரும் விடயங்கள் அனைத்துமே திறனாக்கத்தின் பகுதிகளேயாகும். அவற்றுடன் சமூக சேவை நிறுவனம் ஒன்று தொடர்பான புதிய கருத்துக்கள் இங்கு தரப்படுகின்றன. இவையும் கூட அமைப்புக்களின் திறனை நிர்ணயிக்கும் காரணிகளாகும். 

1. தன்னலமற்ற போக்கு 

நிறுவனமும், நிறுவனத்திலுள்ள பணியாளர்களும் தத்தமது தனிப்பட்ட இலாபத்தினையும் சுயநலத்தையும் விடுத்து சமூகத்தின் நலனிற்;காகவும் மக்களின் சேவைக்காகவும் தமது செயற்பாடுகளை பொது நோக்கில் செயற்படுவதும் மனித நேயத்தை முன்னிறுத்தி செயற்படுவதுமான ஒரு நிலையாகும் 

அதாவது ஒரு நிறுவனமானது தன்னலமற்ற முறையில் எவ்வளவு முன்னேறுகிறதோ அத்தகைய நிறுவனம் வலு மிக்க நிறுவனமாக மாறும். உள்ளக ரீதியான போட்டி பொறாமைகள், சுயநலம், விட்டுக் கொடுப்பின்மை, பொறுப்புக்கள் கையளிப்பின்மை போன்றன காணப்படும் நிறுவனங்களில் திறனாக்கம், மற்றும் அபிவிருத்தி என்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.

2. சமூக விழுமியங்கள்

நிறுவனத்தின் விழுமியமானது, நிறுவன தொலைநோக்கிற்கும் சமூகம் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். அத்துடன் இவை சமூக விழுமியத்திற்கு சார்பானதாக இருக்க வேண்டும். நிறுவன விழுமியங்கள் உயர்ந்த நோக்குடையதாக இருக்கவேண்டும் நிறுவனத்தின் விழுமியங்கள் நிறுவனத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களாலும் விளங்கிக் கொள்ளப் பட்டவையாகவும் நடைமுறைப்படுத்தப்படுவனவாகவும் இருத்தல் வேண்டும். நிறுவனத்தின் விழுமியங்கள் எந்தளவு உயர்ந்ததாக இருக்கின்றதோ அந்தளவு நிறுவனத்தின் செயற்பாடுகளும் உயர்ந்ததாகக் காணப்படும். விழுமியங்கள் பணியாளர்களிற்கும்,
விளங்கிக் கொள்ளப்படும்போதே சமூகத்திலான உண்மையான அக்கறை யும் ஆர்வமும் அதிகரிக்கும்.

நிறுவனத்திற்கு தேவையான உபகரண வசதிகள் கருவிகள் காகிதாதிகள் மற்றும் ஏனைய வசதிகள் இங்கு இருப்பதுடன் அவை உச்சப்பயன் கருதிப் பயன்படுத்தப்படுமானால் இங்கு பணியாற்றும் பணியாளர்களுடைய திறனும் அதிகரிக்கும். நிறுவனம் ஒன்று இயங்குவதற்கான ஆகக் குறைந்த தேவைகள் மற்றும் பணியாளர்களிற்கான அடிப்படைத் தேவைகளை நிறுவனம் கொண்டிருக்க வேண்டும்.

4. தொடர்பாடல் 

நிறுவனத்திற்குள்ளேயும், வெளியேயும் தொடர்பாடல் மேற்கொள்ளப்படு கின்றது. தொடர்பாடலானது நிறுவனத்திற்குள்ளே நடைபெறும் போது பணியாளர்கள், உயரதிகாரிகள், வேறு நிறுவனப் பிரதிநிதிகள், நிதி நிறு வனப்பிரதிநிதிகள் எனப் பல்வேறு பட்ட மட்டங்களுடன் நடைபெறும். அதே போல், நிறுவன அங்கத்தவர்களுடன், பொது மக்களுடன் தொடர்பாடும் போது வேறு முறையில் நடைபெறுகின்றது.

எது எவ்வாறெனினும் தொடர்பாடல் மேற்கொள்ளப்படும்போது பொருத்தமான முறையிலும் மற்றவர்களினால் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும். நிறுவனப் பணியாளர் இன்னு மொருவருடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் போது நிறுவன நன்மதிப்பை உயர்த்தும் வகையில் மேற்கொள் வேண்டும்.

நிறுவனத்திலுள்ள தொடர்பாடல் சாதனங்களான தொலைபேசி, தொலை நகல், மின்னஞ்சல், இணையத்தளம்; போன்றவற்றை தேவைக்கேற்பவும் பொருத்தமான முறையிலும், சிக்கனத்துடனும் பயன்படுத்தல் வேண்டும். 

5. தன்னம்பிக்கை 

தனி மனிதனின் தன்னம்பிக்கைதான் சமூகத்தின் தன்னம்பிக்கையாக மிளிரும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய செயற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதாவது சாதிக்கக்கூடிய எண்ணங்களைப்பற்றி உயர்வாக எண்ணுதல், போன்ற விடயங்கள் நிறுவனத்தின் வலுவைக் கட்டியெழுப்பக் கூடியனவாக உள்ளன.

6. சுற்றுப்புறச் சூழல்

எம்மைச் சுற்றியிருக்கின்ற சூழலில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை, அரசியல் நிலைமை, மற்றும் சர்வதேச நிலைகள் என்பன நமது நிலைமை யைப் பாதகமாகவோ அல்லது சாதகமாகவோ மாற்றும்;. இதற்கேற்ப நாம் எமது செயற்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் வாதிகள்,

போன்றோர் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்காது விடினும், பாதகமான செயற்பாடுகளை கொண்டு செயற்படின் நிறுவனத்தின் செயற்பாடுகள் பாதிப்படையும். நிறுவனமானது தனக்கெனத் தனியான ஒரு பாணியை வகுத்துக் கொள்ளல் வேண்டும். ளுறுழுவு பகுப்பாய்வினை மேற்கொள்வதன் மூலம் நிறுவனமானது தனது பலம், பலயீனம் எவை என்பதை இனங்காண்பதுடன் நிறுவனத்திற்கு அச் சுறுத்தல் எனக் கருதும் விடயங்களிற்கு வாய்ப்புகளைக் கொண்டு தீர்வு காண்பதற்கு முனைய வேண்டும்.

நிறுவனப் புறச்சூழலின் தாக்கம் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாறு நிறுவன முகாமையானது தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அணிதிரட்டல் உபாயத்தினை கையாள்வதன் மூலம் சுற்றுச் சூழலில் எமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும்

7. தகவல்

ஒரு நிறுவனத்திற்கு தகவல்கள் என்பது முக்கியமானதாகும். நிறுவனத்தில் செயற்பாடுகளிற்கு தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்க வேண்டும். நிறுவனம் ஒன்றில் வைத்திருக்கப்படும் தகவல்களின் தன்மை, அவை பேணப்படும் முறை என்பவற்றின் அடிப்படையிலேயே அந் நிறுவனச் செயற்பாடுகளும் அமைகின்றன.

அத்துடன் தகவல்கள் நிறுவனச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதுடன். நிறுவன நன்மதிப்பினையும் உயர்த்துகின்றது. நிதி நிறுவனங்களிடையே நன்மதிப்பு உயர்வதனால் திட்டங்களை அமுலாக்குவதற்கு இலகுவாக அமைகின்றது. இதன்மூலம் நிறுவனத் திறனாக்கம் அதிகரிக்கிறது.
தகவல்கள் கீழ்மட்டத்திலிருந்து உயரதிகாரிகள் வரை பரிமாறப்படும் ஒன்றாகவும், அவசியமான ஒன்றாகவும் இருப்பதால் திறனாகத் தகவல்கள் பரிமாறப்படுவதுடன், பராமரிக்கப்படவும் வேண்டும்.

8. தலையீடு 

நிறுவன வலுவாக்கத்தில் மக்களிற்கு அல்லது அங்கத்தவர்களிற்குத் தேவையான சமூக அணி திரட்டல், விழிப்புணர்வு வழங்கப்பட்டிருப்பதுடன், நிறுவன பணியாளர்களிற்கு தேவையான முகாமைத்துவ சமூக அணிதிரட்டல் உபாயங்கள், கணக்கு வைப்பு போன்றன எந்தளவிற்கு இருக்கின்றதோ அந்தளவிற்கு நிறுவனமானது வலுவானதாக இருக்கும். 

நிறுவன அங்கத்தவர்கள் நிறுவனத்திடம் ஏதோ ஓர் எதிர்பார்ப்புடனேயே இருப்பர் நிறுவன அங்கத்தவர்கள் நிறுவனத்திடம் ஏதோ ஓர் எதிர்பார்ப்புடனேயே இருப்பர் அந்நிலையினை நிறுவனம் அணிதிரட்டல் செயன் முறையினூ டாக மாற்றல் வேண்டும். மக்கள் நிறுவனத்திடம் ஏதோ ஒன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பார்களானால் அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையாதபோது நிறுவனத்துடனான ஒத்துழைப்பு இல்லாது போகின்றது. இந்நிலையினை மாற்றுவதற்கு சரியான முறையில் அணிதிரட்டப்படல் வேண்டும்.

நிறுவனம் எப்போதும் தங்குதிறன் கொண்ட திட்டங்களை அமுலாக்கல் வேண்டும். நிதி வழங்குவோர் அல்லது புதிய திட்டங்களை வழங்குவோரின் நோக்கம் தேவைகளுக்கேற்ப, நிறுவனமானது தனது சேவைகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளுமேயானால் அந்நிறுவனமானது காலப் போக்கில் பலவீனமடைந்து விடும். மாறாக நிறுவனம் நிதி வழங்குவோரை யும் புதிய திட்டங்கள் வழங்குவோரையும் தம்முடைய நோக்கத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியுமேயானால் அல்லது மாறுவதற்கு அழுத்தம் கொடுக்குமேயானால் அந்நிறுவனம்; திறமையாக இயங்கும்.

உங்களுக்கு தெரிந்தவர் ஊடாக என்ன பயனைச் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதுவே பிரதானம். சமூகத்திற்கு வேண்டிய கல்விமான்;;கள். புத்திஜீவிகள், தனி நபர்கள், அரசாங்க அதிகாரிகள், வளதாரிகள் ஆகியோரை நாம் வலையமைப்பில் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சமூகமானது சிறந்த பயனைப் பெற்று மிகவும் வலுவுள்ள ஒன்றாக மாறும். இதனூடாக நிறுவனத்தின் நன்மதிப்பும் உயரும்.

9. அமைப்பு 

நிறுவனத்திலுள்ள பணியாளர்கள் ஒவ்வொருவரும்; ஒருங்கிணைந்து தமது அமைப்பில் தமது கடமைகள் பொறுப்புக்ககள் என்பவற்;றை தெளிவாக உணர்ந்து செய்வார்களானால், அமைப்பின் தொலைநோக்கினை விரைவாக அடையமுடிவதோடு, சமூக மாற்றத்திற்கும் வழியமைக்கும். 

அமைப்பின் கட்டமைப்பினைப் பணியாளர் ஒவ்வொருவரும் அறிந்தவர் களாக இருக்கும்போது, நடைமுறைத் தீர்மானம் எடு;க்கும் படிமுறைகள், வினைத்திறன் மிக்க செயற்பாடுகள், பொறுப்புக்களை பகிர்ந்தளித்தல் என்பன இலகுவாக அமையும்.

10. வலுவுள்ள அரசியல் அதிகாரம்

ஒரு வலுவுள்ள நிறுவனக் கட்டமைப்பானது சமூகத்தின் கட்டுக் கோப்புக்கு அமைய அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். அதாவது பாராளுமன்ற உறுப்பினரையோ அல்லது உள்ளுராட்;சி மன்ற உறுப்பினரையோ தமது தேவைகளிற்கும், சிறந்த சேவைகளை மக்களிற்கு பெற்றுக் கொடுப்பதற் கான துணிவினையும்; அரசியல்வாதிகளிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய பலத்தினையும கொண்டதாக தம்மை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு பணியாளரும் தனித்திறமைகளைக் கொண்டவர்களாக காணப்படல் நிறுவனத்தின் திறனினை அதிகரிக்கும். தனிப்பட்ட ஒவ்வொருவரும் எத்தகைய திறன்களைக் கொண்டிருக்கிறார் களோ அந்தளவுக்கு நிறுவனமானது பல்வேறு திறன்களை கொண்டதாக இருக்கும். அது அவர்களுடைய தொழிநுட்பத் திறன்கள், முகாமைத்துவ திறன்கள், அமைப்பு ரீதியான திறன்கள் போன்றவற்றை அந்நிறுவனம் கொண்டிருக்கும் இத்திறன்களையெல்லாம் ஒன்று திரட்டி அமைப்பாகக் காணப்படும் போது அது மிகவும் திறன் மிக்க நிறுவனமாகத் திகழும்; 

11. நம்பிக்கை

நிறுவனத்திலுள்ளவர்கள் தங்களிற்கிடையே நம்பிக்கையுடையவர்களாக இருக்கவேண்டும். அத்துடன் நிறுவன அங்கத்தவர்களும் நிறுவன செயற் பாடுகள்மீது நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். சமூகத்தில் உள்ளோர் ஒவ்வொருவரும் எந்தளவிற்கு நம்பிக்கை உடையவராக இருக்கிறார்களோ அந்தளவிற்கு அச் சமூகம் கட்டுக்கோப்புடையதாக இருக்கும் சமூகத்தின் தலைவர்கள், மக்கள் என்போர் ஒருவர் மீது ஒருவர் நம்;பிக்கை வைத்து செயற்பட வேண்டும்.
நேர்மையானதாக, சிறந்ததாக, தெளிவானதாக, பெறுமதி மிக்கதாக, நம்பிக்கை நிறுவனத்தின் மீது சமூகத்திற்கு இருக்க வேண்டும். ஒற்றுமை யின்மை நம்பிக்கையின்மை கொண்ட ஒரு நிறுவனமானது பலம் இழந்து காணப்படும்.

நிறுவன்தின் மீது மக்களும், மக்களின் மீது நிறுவனப் பணியாளர்களும் நம்பிக்கை வைத்து முழு மனதுடன் சேவை நோக்கில் தொழிற்படுவார்க ளேயானால் அந்நிறுவனம் தமது போட்டி நிறுவனங்களிலிருந்தும் பலன் மிக்க நிறுவனமாகத் திகழும் என்பதில் ஐயமில்;லை. 

12. சொத்து

நிறுவனமானது நிறுவனச் செயற்பாடுகளிற்குத் தேவையான சொத்துக் களைக் கொண்டிருப்பதுடன் சொத்துக்கள் சிக்கனமாகவும் உச்ச பாவனை கருதியும் பயன்படுத்தல் வேண்டும். அத்துடன் நிறுவனச் சொத்துக்கள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படவும் வேண்டும். 

சொத்துக்களை இயற்கை வளம், கடின உழைப்பு, கனியவளம், வாகனம், நிதி, நிலம், உபகரணம், அறிவு, திறன், எனப் பாகுபடுத்தலாம் இவை அனைத்தும் சமூகத்தின் சொத்துக்களாகும் இதைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் மிகுந்த திறனுள்ள நிறுவனமாக மாறும். 

மேற்கூறிய திறமைகள் பொறுப்புக்கள் என்பன ஒரு நிறுவனத்தில் காணப்படுமாயின் அந் நிறுவனம் வலுவானதாக காணப்படும்

திறன் வளர்த்தலின் ஒர் புதிய பாதை.

ஒரு நிறுவனத்தினதோ சமூக குழுக்க ளினதோ திறனை வளர்க்கின்றோம் எனும் போது அந்த நிறுவனத்தினுடைய அல்லது குழுக்களுடைய பின்ன ணியை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும.; இந்த பின்னணியில் இவர்களுக்கு அவசியமாக எவை தேவைப்படுகின்றன, எதை முதலில் செய்யலாம் எதை இரண்டாவதாக செய்யலாம் என்பதை அவர்களுடன் இணைந்திருந்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களுக் குள்ளே இருக்கின்ற வளங்களை சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகள் இவற்றையும் திறமையான முறையில் இனங்காண வேண்டும்.

பொதுவாக நிறுவனங்களிடையே வாய்ப்புகளும் வளங்களும் நிறையவே இருக்கின்றன பிரதானமாக எல்லா நிறுவனங்களிலும் சிறப்பாக மனித வளம் இருக்கும். இந்த மனித வளத்திலே ஒவ்வொருவருக்கும்; பின்னால் இருக்கின்ற திறமைகளை இனங்கண்டு தட்டிக் கொடுத்து மெருகூட்டி முன்னுக்குக் கொண்டு வருவதிலே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுவாகவே வளங்கள் என்னும் போது எல்லோருமே நிதியைத்தான் கருத்தில் கொள்வார்கள். நிதியை விடுத்;து பணத்தாலும் செய்ய முடியாத வேலையை மனிதன் செய்யலாம். சில வேளை பணம் இருக்கின்ற போது திறமையான மனிதனைத் தேட முடியாமல் இருக்கும். இது சில நிறு வனங்களுக்குப் பிரச்சினையான ஒரு அம்சமாகும் எனவே நிறுவனங் களிலே இருக்கின்ற மனித வளத்தை முதன்மையாக நாங்கள் பார்க்க வேண்டும் அந்த மனித வளத்தைச் சரியான முறையில் இனங்கண்டு பயன்படுத்துவோமானால் மனித வளம் ஏனைய பௌதீக வளங்களை எமக்கு சேர்த்துத் தரும்.

வாய்ப்புகள் எனும் போது எம்மைச் சுற்றியுள்ள பரோபகார சிந்தையுள்ள மனிதர்கள், உதவும் எண்ணம் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்கள், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றை நாம் குறிப்பிடலாம். இவை அனைத்துமே நமக்கு மிகப் பெரிய வளங்க ளாகும். இந்த வளங்களை நாம் எவ்வாறு, எந்தத் தேவைக்கு, எந்த முறையில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் திறன் விருத்தியாகும்.

ஏனெனில் பொதுவாகவே மாற்றத்தை சில பேர் விரும்புவதில்லை. இந்த மாற்றம் காரணமாக தங்களது அந்தஸ்து பதவிகள் இழக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது இதனை தெளிவாக்கி அப்படி ஏதும் நிலமை இல்லை அது மட்டுமல்லாமல் இந்த மாற்றத்தின் காரணமாக அவர்களுடைய நிலமை முன்னேற்றமடையும் என்பதையும் அவர்களுடைய அந்தஸ்து உயரும் என்பதையும் தெளிவாக்க வேண்டும். இது வெற்றி பெறாமல் எந்த விதமான மாற்றத்தையும்; கொண்டு வர முடியாது.

மக்களாகவே தங்களுக்குள் மறைந்து கிடக்கின்ற திறன்களையும், அறிவையும் பயன்படுத்தி தங்களையும் தமது சமூகத்தையும் நிறுவனத்தை யும், கட்டியெழுப்புகின்ற பொறுப்பை ஏற்குமாறு தூண்டு வதுதான் இதில் சிறப்பான ஒர் அம்சமாகும்.

இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நாங்கள் பாரம்பரிய முறையைப் பயன்படுத்தக் கூடாது. அவற்றில் அதிக பயன் விளையாது. வழமையான பாணியிலான பயிற்சிகள் கருத்தரங்குகளுக்கு அழையாமல் சற்று மாறுபட்ட பாணியிலே முதலில் தனிப்பட்ட முறையிலே அவர்களை அணுகி, அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, மாற்றத்திற்குரிய கருத்துகளை எல்லோரை யும் ஏற்க வைத்து, அதன் பின்னர் பயிற்சிக்கு அழைத்து அவர்களுக்கு அறிவூட்டி அதன் மூலமாக மாற்றத்தைச் செய்யலாம்.

சமூக சேவையின் புதிய வடிவங்கள், செய்துகாட்டல்கள் ஊடாக மக்களிற்கு சமூகத்தின் மீதான அக்கறையினை ஏற்படுத்துவதன் மூலம் நிறுவனம் தமது செயற்பாடுகளை விரிவு படுத்து வதுடன், சமூக மாற்றத்திற்கும் வழியமைக்கலாம்.

No comments:

Post a Comment