* முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.
* முடியும் என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.
* இருட்டை குறை கூறி உட்கார்ந்திருப்பதால், என்ன பயன்? விளக்கு ஒன்றை ஏற்றுவதல்லவா விவேகம்.
* நம் முன்னோர் மரம் நட்டனர்; நாம் அனுபவிக்கிறோம். நாம் யாருக்குமே முன்னோர் இல்லையா? நாம் எதையாவது சாதிக்க வேண்டாமா?
* எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகி விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? பொறுங்கள்… இன்னும் சில வழிகள் இருக்கின்றன; தேடுங்கள்.
* ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இருக்கத்தான் செய்யும்.
* சாதித்தே தீருவேன் என்று சபதம் போடு. குறைகளும், தடைகளும் கூட கொடுக்கும் ஒத்துழைப்பு.
* மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே; மாற்ற முடிந்ததை மாற்றாமல் விடாதே! மாற்றக்கூடியது எது, மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.
* வேலைகளை ஒத்திப் போடுபவன், வெற்றிகளை ஒத்திப் போடுகிறான்; விதைப்பதை ஒத்திப் போடுபவன், விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.
* அறிவும், பணமும்தான் உலகை ஆளும். அறிவை வளர்ப்பதிலும், பணத்தைச் சேர்ப்பதிலும் அக்கறை காட்டு.
* ஆரம்பித்தால் அரை வெற்றி, தொடர்ந்தால் முக்கால் வெற்றி, முடிந்தால் முழு வெற்றி.
* லட்சியம், திட்டம், உழைப்பு, விடா முயற்சி இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்.
* உன்னால் என்ன முடியும் என்பதைக் கொண்டு, உன்னை நீ மதிப்பிடுகிறாய். நீ என்ன சாதித்திருக்கிறாய் என்பதை கொண்டு தான், உலகம் உன்னை மதிப்பிடுகிறது.
* நீ சும்மா இருக்கலாம்; ஆனால், காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை. உன் ஆயுளில் ஒரு நாளைக் குறைத்து விட்டுத்தான் செல்கிறது.
*தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல. உழைத்தது சரியில்லை என்று தான் பொருள்.
* நேரம் நிற்பதில்லை; காலம் காத்திருப்பதில்லை. நீ நிற்கிறாய். காத்திருக்கிறாய். காலத்தை இழக்கிறாய். கண்ணைத் திற.
* ஒவ்வொரு துயரத்திற்கும் உட்கார்ந்து நீ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் நேரங்களில், வெற்றி தேவதை உன்னை விட்டு வெகுதூரம் விலகிப் போகிறாள்.
* காத்திருக்கும் கடமைகளுக்கே காலம் போதவில்லை. நேற்றைய கவலைகளும், நாளைய பயங்களுமா நம் நேரத்தை விழுங்குவது?
* நேற்றைய இழப்புகளை ஈடு செய்யத்தான், இன்று பிறந்திருக்கிறது. இன்றுமா உறக்கம்? இன்னுமா சோம்பல்?
* முடியும் என்பது தன்னம்பிக்கை. முடியுமா என்பது அவநம்பிக்கை. முடியாது என்பது மூட நம்பிக்கை.
No comments:
Post a Comment