Tuesday, February 12, 2013

மனமும் எண்ணமும்


மனமும் எண்ணமும்

மனம் என்கிறோம், எண்ணம் என்கிறோம், இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும் போது நான்கு வகைக் கணிப்பாக இயங்குகின்றது - காலமாக, தூரமாக, பருமனாக, வேகமாக. 

 எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப் பற்றி, நினைத்தாலும் காலம், தூரம், பருமன், வேகம் என்ற நான்கு பரிமாணத்திலே தான் மனம் இயங்குகின்றது. இந்த நான்கு பரிமாணத்தைக் கணக்கிடுவதாலே, *கணக்கிடுதல்* என்ற சொல் எண்ணுதல் என்று வந்து, அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாகவே வந்தது. ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.

 மனமும் மலரும்..

நிஜங்கள் யாவும் நிழலாடிக் கொண்டிருக்கும் அந்த இரவு வேலையில், தனிமையில் நடந்தேன் ஒரு சாலையில்.. எனக்கும் பல கனவுகள், நானும் மானுடப் பிறவி தானே.. அந்த நடையில் இந்த சிந்தனையும் என்னிடம் உதித்தது.... மலரின் மௌனம் அது பிடுங்கப் படும் வரையில், அதற்குப் பின் அதன் கண்ணீரால் தன்னை நனைத்து வாடிக் கொள்கிறதோ என்னவோ.. அது நுகரப் பட வேண்டுமே தவிர்த்து பிடுங்கப் படக் கூடாது, அதன் மணமே அதன் மாண்பு, ஒவ்வொரு மலரும் நமது மனத்தால் கொடுக்கப் படும் அன்பு, நாம் செடியாக இருந்த போழ்து, நிறைய பேர் மலர் பெற்றனர் நம்மிடம் இருந்து... அதற்கு ஈடாகத் தந்தனர் பலரும் எனக்கு வாழக் கூடிய சக்தியான அன்பு என்னும் நீரை... ஏனோ தெரியவில்லை, செடி மரம் ஆனால் நீரை அதுவே தேடிக் கொள்ளும் என்று, நிசப்தமாய் இருந்து விடுகின்றனர்... பெரிதான மரத்திற்கு கிடைக்கப் பெறும் நீர் குறைவு தானே. . . ஆனால் செடியாக இருந்த போது, நீர் கொடுத்தவர்களை இந்த வேர் மறப்பதுமில்லை, நிறைய உள்ளங்களுக்கு  நிழல் கொடுக்காமல் இருப்பதுமில்லை...

No comments:

Post a Comment