பொதுவாக பாடல்களில் இசைதான் முதலிடம் வகிக்கும். பல பாடல்கள் இசையோடு பாடும்போது இருக்கும் சுவை அப்பாடல் வரிகளை படிக்கும்போது இருப்பதில்லை. ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத ஒருசில பாடல்களின் வரிகள் நம் ஆழ்மனதை தொட்டுவிடுகிறது. அதற்கு இசை என்ற முகவரி தேவை இருப்பதில்லை. அப்படி பட்ட வரிசையில் இடம் பெற்றுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.
எனக்கு சொல்ல முடியாத வேதனை ஏதாவது மனதை பிசையும்போது இந்த பாடல் வரிகள்தான் அந்த வேதனையை போக்கும் அரும்மருந்தாகும். குறைகளுடன் வேதனைப்படும் நமக்குள் ஒரு நேர்மறையான எண்ணத்தை தோற்றுவிக்கும் வரிகள். பாடும்போதே நம் மனதில் அமைதியையும், இதற்க்கா இந்த வேதனை என்ற தெளிவும் பிறப்பது உறுதி.
பாடல் : இராஜகோபாலாச்சாரியார்
பாடியவர் :எம்.எஸ்.சுப்புலஷ்மி
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா..
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)
குறை ஒன்றும் இல்லை
யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா (3)
No comments:
Post a Comment