Friday, February 15, 2013

தியானம் என்றால் என்ன ?





உங்களுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் பயனுள்ள, ஆக்கப்பூர்வமான நல்லொழுக்க சக்தியை கண்டறிதல், அனுபவித்தல், பயனடைதலே. ' தியானம் ' உன்னைப் பற்றியே, நீயே ஆழமாக அறிந்து கொள்ளும் உள்ளுணர்வை தூண்டுவதே தியானம்.

அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து - நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம்.

ஒவ்வொருவரும் ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய் புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும்.மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர் பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

மனம் எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். ''எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்''என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம்,
அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு, சுகம், செல்வம் ஆகியவை. இதில் ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற வேண்டும்.

தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள் சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.

உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.
உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.
அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.
சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.
மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.
உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.
குறைவான பிராண வாயுவே செலவாகிறது.
உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.
குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.
இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.
மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.
தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.
ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.
மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.
அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.
சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.
நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.
மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.
இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.

நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்.

அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.

ஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல் என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

இந்த மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம் அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.

இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம். ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம் கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் .

உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.

அந்தச்செயலே இயல்பான தியானமாகும். நாம் ஒரு ஆழமான அனுபவத்தை அடையும்போது மெய்மறந்த நிலையில் இருக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் எந்த அறிவும் நம் நினைவிலிருந்து மறைவதே இல்லை. நம்முடைய சிறந்த ஞானம் முழுக்க முழுக்க அந்த மெய்மறந்த தருணங்களில் நாம் அடைந்தனவாகவே இருக்கும். சொல்லப்போனால் கலையில் இலக்கியத்தில் பயணத்தில் நாம் தேடிக்கொண்டிருப்பதெல்லாம் மெய்மறக்கும் அந்த அனுபவத்தை மட்டுமே.

அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்.

ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.

ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது. அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.

ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது

நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்.

அந்த நிலையை பயிற்சியின்மூலம் அடைய முடியுமா என்பதே தியான மரபின் நோக்கமாகும். இந்திய ஞானமரபில் தொல்பழங்காலம்முதலே அதற்கான பயிற்சிகள் ஆரம்பித்து விட்டன. இதை யோகம் என்றார்கள். யோகம் என்றால் இணைதல் என்று பொருள். அறிபடுபொருளும் அறிபவனும் இணையும் நிலையை அப்படிச் சொன்னார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல்படி.

இந்திய மரபில் உள்ள எல்லா ஞானமுறைகளுக்கும் யோகம் பொதுவானது. என்றாலும் பௌத்தமரபிலேயே அதற்கு முதல்முக்கியத்துவம் . அதற்கடுத்தபடியாக சமணத்தில். பின்புதான் இந்து ஞான மரபுகளில்.

No comments:

Post a Comment