நிறுவனம் என்னும்போது அது சிறப்பாக இயங்க வேண்டியது அத்தியவசிய மான ஒன்றாகும். அது சிறப்பாக இயங்குவதற்கு பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அமைகின்றது. இதனடிப்படையில் நேர முகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்களையும், குறைந்த நேரத்தில் கூடிய செயற்பாடுகளைச் செய்யக்கூடியவர்களையும், இனங்கண்டு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல் நேரத்தை வீணடிப்பவர்களையும் இனங்கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறான இனங்காணல் செயற்பாடானது நிறுவனத்தின் சிறப்பான இயக்கத்திற்கு உந்துசக்தியாக அமையும்.
நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் அனைவரும் தமது கடமைகளைச் செவ்வனே செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஒரு சிலர் தமது நேரத்தை எவ்வாறு போக்கிக் கொள்வது எனத் தெரியாமல் வீணடிப்பவர் களும் இருக்கிறார்கள். இவ்வாறு வேலை நேரத்தை வீணடிக்கும் காரணிகளாக பலவற்றைக் குறிப்பிடலாம்.
1. நிறுவனக் கூட்டங்கள்
நிறுவனங்களில் புதிய திட்டங்களை அமுல்ப்டுத்தும் போது பொறுப்பான அதிகாரிகள் கூட்டங்களை நடாத்துவதுண்டு. இவை பாரிய நேரக் கொல்லிகள் என்றும், ஆடம்பரச் செலவுக்கு வழிவகுப்பதாகவும், கலந்து கொள்வோர் தற்பெருமை கூறி நேரத்தை வீணடிப்பதாகவும் பலர் கூறுகின்றார்கள். இதில் ஓரளவு உண்மை இருப்பினும் முற்றுமுழுதாகப் பயனற்றது எனக் கூறிவிட முடியாது. இவ்வாறான கூட்டங்களைச் சிறப்பான முறையில் வினைத்திறன் மிக்கதாக நடாத்தி நிறுவனத்தின் சிறப்பான இயக்கத்திற்கு வழியமைக்க முடியும். அவ்வாறான நடைமுறைகள் சில.
1) கூட்டத்தில் பங்குபற்றும் அதிகாரிகளது அல்லது பணியாளர்களது வேலையின் அடிப்படையில் அவர்களின் நேர மதிப்பைக் கணக்கிட்டு வீணாக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்குமான பெறுமதியை அவர்களுக்கு விளங்க வைத்தல்.
2) கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து இரு தினங்களுக்கு முன்னரே உரியவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் அதன் அடிப்படையிலேயே கூட்டத்தை நடாத்துதல்.
3) பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு விடயத்தையும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் விவாதித்து முடித்துவிடுவதற்கு கூட்டத்தை ஒழுங்குசெய்பவர் வற்புறுத்த வேண்டும்.
4) கூட்டம் நடாத்தப்பட வேண்டும் என்பதற்காக கூட்டத்தைக் கூட்டாது முக்கியமான விடயங்கள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
5) கூட்டம் நடாத்தப்படும் சூழல் வெளித்தொடர்புகளால் குறுக்கீடாக அமையாத வண்ணம் அமைந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக தொலைபேசி அழைப்பு இதனால் கலந்து கொள்வோரின் கவனமும் விவாதமும் பாதிப்படையும்.
6) கூட்டத்திற்கு முக்கியமான நபர்களை மட்டும் அழைத்தல் வேண்டும். பத்துப் பேருக்குள் இருப்பது கூட்டத் தரத்தை உயர்த்தும்.
7) கூட்டத்தை நடாத்தும் தலைவர் கண்டிப்பானவராக இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட விடயங்களை மட்டும் பேச அனுமதிக்க
வேண்டும். எல்லோருடைய கருத்துப் பரிமாற்றத்துக்கும் வழி செய்து கூட்ட முடிவில் இறுதி முடிவுகளை எடுக்க வேண்டும்.
8) ஒவ்வொரு கூட்டத்திற்குமான நடவடிக்கைக் குறிப்புக்களை எழுதிவைக்க வேண்டும். அதில் கூட்டத்தில் கலந்து கொண்டோர் விபரம், கையெழுத்து, தீர்மானங்கள் என்பன உள்ளடக்கப்பட வேண்டும்
பொதுவாக நிறுவனக் கூட்டங்களை பயனுள்ளதாக மாற்றுவதும், நேர கொல்லிகளாக மாற்றுவதும் நிறுவன நிர்வாகிகளின் திறமையை பொறுத்தது.
2. பொறுப்பைப் பகிர்ந்தளித்தல்
நீங்கள் ஒரு வேலையை செம்மையாக செய்து முடிக்க விரும்பினால் ஷநீங்களே அதைச் செய்து முடிப்பது தான் நல்லது| என பலர் சொல்லிக் கேட்டிருப்போம். நீங்களே செய்தால் அவ்வேலை சிறப்பாக முடியும் என்பது உண்மைதான். ஆனால் அது எவ்வளவு நேரத்தை விழுங்கு கின்றது எனப் பார்ப்பதோடு இன்னொருவருடைய ஆற்றல் மழுங்கடிப் பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவரிடம் கையளிக்க வேண்டிய வேலையை உடனடியாகக் கையளித்து அதனைக் கண்காணிப்பதன் மூலம் நிறுவன மேம்பாட்டிற்கு வழி செய்யலாம். இவ்வாறு நீங்கள் கையளிக்காதவிடத்து
- உங்கள் வாழ்க்கைப் பாதை ஒரே இடத்திலேயே தேங்கி நின்று விடும்.
- பணியாளர்களுக்கு அலுப்பும், அசிரத்தையும் ஏற்படுத்தும்.
-நாளடைவில் நீங்கள் மோசமான தலைவர் என்ற பெயரை பெற்று விடுவீர்கள்.
உ-ம்: பிரபல்யமான உணவக முதலாளி சமையற்காரனாக இருந்து முன்னேறி முதலாளியாக பொறுப்பேற்றவர் தான் செய்தால்தான் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதற்காக அவரே சமையலில் இறங்கினால் முக்கிய நிர்வாக விடயங்களை கவனிப்பது யார்?
சரி, பொறுப்புக்களைப் பகிர்ந்தளிப்பது எனத் தீர்மானித்து விட்டிர்களா? ஆம் எனின் யாரிடம் ஒப்படைப்பது என்பது முக்கியமானதாகும் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு
- இந்த திட்டத்தை என்னைத்தவிர யாரால் செய்ய முடியும்?
- இந்த வேலையைச் செய்யும் நேரத்தில் நான் செய்யப்போகும் வேலை என்ன?
- இந்த வேலையை யாருக்கு, எப்போது பகிர்ந்தளிப்பது.
- இந்த வேலையை விரைவாக செய்வது எப்படி?
மேற்கூறப்பட்டவற்றுக்கு விடை காணும் போது இந்த வேலையை நீங்கள் செய்வதா? அல்லது யாரிடம் ஒப்படைப்பது எனத் தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஒப்படைக்கப்பட்ட வேலையில் பணியாளரை முழுமையாக ஈடுபாடு செய்து கொள்ள கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- பணியாளர் என்ன செய்ய வேண்டு மென்பதைத் தெளிவாக முடிவு செய்து அவருக்கு தெரியப்படுத்தல்.
- ஒப்படைத்த பணிக்கும் நிறுவன தொலை நோக்குக்கும் உள்ள தொடர்பும் முக்கியத்துவத்தையும் உணரவைத்தல்.
- ஒப்படைத்த பணியை நிறைவு செய்ய எவ்வாறான செயற்பாடுகள் எந்தெந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத்
தெளிவு படுத்துதல்.
- மேற்கூறப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அதி காரத்தையும் பொறுப்பையும் ஒப்படைத்தல்.
- ஒப்படைத்த பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதை கண்காணித்து பகுதி பகுதியாக நிறைவேற்றி முடித்ததும் அறிக்கை தருமாறு கோரல்.
- தவறுகள் இடம் பெற்றிருப்பின் உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளல்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் பொறுப்பை சிறந்த முறையில் பகிர்ந்தளித்து நிறுவன செயற்பாட்டை மேம் படுத்தலாம்.
3. முன்கூட்டிய திட்டங்களை வடிவமைத்தல்
சிறந்ததாக நிறுவன செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமானால் குறைந்நது 5 ஆண்டு திட்டத்தை முற்கூட்டியே வகுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வகுத்துக்கொண்ட திட்டத்தை வருடாந்த இலக்குகளையும், மாதாந்த இலக்குகளையும் நிர்ணயித்துக் கொண்டு செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். இலக்குகளை நிர்ணயிக்கும் போது இறுதி விளைவை தெளிவாக வரையறுக்க வேண்டும்.
உதாரணமாக இவ்வாண்டு மரம் வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானிக்காது இவ்வாண்டின் இறுதி மூன்று மாதப் பகுதியில் எத்தனை மரங்களை யார் மூலமாக நாட்டுதல் எனத் தீர்மானிக்க வேண்டும்.
இப்படி இலக்குகளை தீர்மானிக்கும் போது 5று10ர் எனும் சூத்திரத்தையும், விளைவுகள் அடிப்படையிலான முகாமைத்துவம் (சுடீஆ) எனும் கோட்பாட்டையும் பின்பற்றி இலக்குகளை நிர்ணயிக்கும் போது நிறுவன செயற்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்க முடியும்.
4. நிறுவன செயற்பாடும் தொலைபேசியும்
நிறுவனம் ஒன்றின் பாவனையில் தொலைபேசிகள் இருக்க வேண்டி யது அவசியமாகும். நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் தொலைபேசி யால் வேலை நேரம் இழக்கப்படும். தொலைபேசியை உபயோகிப்பதற்கு முன் நீங்கள் யாருடன் பேச விரும்புகிறீர்களோ அவர் இருப்பாரா என சிந்தியுங்கள். இருப்பாராயின் உரிய தகவலை உடனே தரக்கூடியவராக இருப்பாரா என சற்று சிந்தித்துப் பார்த்து விட்டு தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.
மற்றும் வெளியார் அழைப்புக்கள் உங்கள் பணிக்கு குறுக்கீடாக இருக்கும். எனவே உள்வரும் தொலைபேசி அழைப்பைக் கையாள உங்கள் உதவியாளரைப் பயன்படுத்துங்கள். மிக முக்கியமான அழைப் புக்களுக்கு மட்டும் நீங்கள் கையாள ஏற்பாடு செய்யுங்கள்.
மற்றும் நிறுவனத்தில் கடமையிலிருக்கும் போது தனிப்பட்ட விருந்தினர் வருகை வேலை நேரத்தைக் குறைப்பதாக அமைந்துவிடுகின்றது. இதனைப் போக்குவதற்கு சுருக்கமான உரையாடல் அவசியமான தாகும்.
மேற்கூறப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நிறுவன வேலை நேரத்தை அதிகரித்து நிறுவன செயற்பாட்டை சிறப்பாக்க முடியும்.
5. நிறுவன அமைப்பு
நிறுவனம் சிறப்பாக இயங்க நிறுவன அமைப்பும் முக்கிய காரணியாகும். நிறுவன அமைப்பின் போது பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும்.
- ஊழியர் ஒவ்வொருவருக்கும் தனிமை சூழ்நிலையும் சத்தம் கேட்காத (Sound Proof) அறைகளும் சிறந்த இருக்கை வசதியையும் ஏற்படுத்தல்.
- நிறுவன சுவர்களில் அழகான பசுமையான இயற்கைக் காட்சிகளைக் காட்டும் படங்களைப் பொருத்துவது, போதுவான வெளிச்சம் பரவ ஏற்பாடு செய்தல்.
- ஊழியர்களின் கவனம் சிதறாத வகையில் மென்மையான இசையை அல்லது பாடலை ஒலிக்க விடுதல்.
- பணியாளர்களின் இருப்பிடங்களுக்கு காலை மாலை தேனீர் கொண்டு சென்று கொடுக்க ஏற்பாடு செய்தல்.
உதாரணமாக 40 பணியாளர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் ஒவ்வொருவரும் 15 நிமிடம் வெளியே சென்று தேனீர், அருந்தினால் (40 ஒ 15நிமிடம்) 10 மணி நேரம் வீணடிக்கப்படுகின்றது. இதனால் நிறுவனப் பணிகள் குறித்த நேரத்தல் நடைபெறாமல் தாமதமாகின்றது.
மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்தில் கொள்வதன் மூலம் பணியாள ரின் மன அழுத்தம் குறைக்கப்பட்டு உற்சாகமாக வேலையில் ஈடுபடும் நிலை ஏற்படும். ஒரு நிறுவனத்தில் இவற்றை இனங்காண்பதன் ஊடாக வீணடிக்கப்படும் நேரத்தை குறைத்து நிறுவனம் சிறப்பாக இயங்க வழி செய்ய முடியும்.
நிறுவனங்களில் பணியாற்றும் பணிளார்களுக்கான நன் நடத்தைக் கோவை.
1 பணியாளர்களின் கொள்கைகள், நடைமுறைகள் தொடர்பான ஒரு அங்கமாக இதனை நாம் கருதலாம் ஒவ்வொரு பணியாளர்களுடைய தனிப்பட்ட நடத்தையும் எமதமைப்பின் அந்தஸ்த்தையும், கௌரவத்தையும் உயர்த்தி கூறுவதாக இருக்க வேண்டும். எமது அமைப்பின் நடத்தைக் கோவைகள் அல்லது விழுமியங்கள் என்பன சகல பணியாளருக்கும் பொருந்தும். அதனைப் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டு தமது பணிகளை செய்ய வேண்டும்.
2 இதற்கு பதிலாக எமது நிறுவனமானது. பணியாளருக்கு வேண்டிய உற்சாகம் ஊக்கம்,மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக் கும்;. சமூகத்தில் உள்ள நற்பிரஜைகள், பெரு மக்களிடம் இருந்து வந்த சிறந்த கருத்துக்கள் விழுமியங்களிடையே இந் நன்னடத்தை கோவைகள் எமது நடத்தையை அறிய உதவ வேண்டும். இக் கோவைகள் எமது கிராமத்திலும் எமது குடும்பத்திலும் எமது சூழலிலும் எமது நிறுவனத்திலும், எமது நாட்டிலும் அல்லது, வெளி நாட்டிலும் எம்மால் பின்பற்றப்படுபவையாக இருக்க வேண்டும். நாம் பணியாற்றும் நலிவுற்ற மக்களை நோக்கிய தெளிவான சிந்தை, அவர்கள் மீது அனுதாபம் கொள்கின்ற சுபாவம். அவர்களிடம் உள்ள பிரச்சினைகளை கையாழுகின்ற தன்மை என்பன எமக்கு இருக்க வேண்டும்.
02. நாம் சமூகத்தின் பாது காவலர்கள் என்ற எண்ணத்தோடு நாமும் இந்த ஒழுங்குகளை பின்பற்றி எம்மைப்பார்த்து பிறரும் வாழுகின்ற நிலமைக்கு இட்டுச் செல்ல வேண்டும். சமூகத்திலுள்ள தீமையான அம்சங்களை அழிப்பதற்கு பாடுபடுகின்ற அதேவேளையில் எம்மிடம் அத்தகைய அம்சங்கள் ஏதும் இருக்கக்கூடாது.
03. சமூகத்திற்கு நாம் பணியாற்றுகின்ற போது சமூகம் எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ அவைகள் யாவற்றையும் முதலில் நாம் செய்ய வேண்டும். நேர்மையான உழைப்பு, நேர்மையான வாழ்க்கை முறைமை, திறந்த மனதுடன் செயற்படும் தன்மை,நன்னடத்தை, மக்கள் பிரச்சினைகளை பரிவோடு அணுகுகின்றமுறை, ஒத்துழைப்பு போன்றவை எம்மிடையே சிறப்பாக செயல்படுத் தப்படல் வேண்டும். அதேவேளையில் எமது கலாசாரங்கள் விழுமியங்கள் என்பவற்றிற்கு கீழ்ப்படிந்து நாம் அவற்றை முதல் நிறுத்தி எமது நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
04. சமூகத்தவர்கள் எம்மைப்பார்க்கும் போது இவர்கள் என்றும் எங்களிற்கு உதவுவார்கள் என்ற மனப்பான்மையுடன் பார்க்கவோ அல்லது அணுகவோ வேண்டிய உயர்குணங்களை, நடத்தைகளை, செயற்பாடுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.
05. நாம் பால்நிலை சமத்துவம் என்ற எண்ணக்கருவை எமது நடைமுறைகளில் கொண்டவர்களாக இருக்கவேண்டும். சகல விடயங்களிலும் ஆண், பெண்பாலார்களிற்கு சமத்துவமான சந்தர்ப்பத்தை அளிக்கவேண்டும். இல்லாத நிலையில் இச்சமத்துவத்தை உருவாக்குவதற்கான சகல முயற்சிகளிலும் நாம் இறங்க வேண்டும்
06. உலகத்தில் சிறந்தவொரு நிறுவனத்தின் பணியாளர்கள் என்றநினைவோடு அந்த நம்பிக்கையோடும் நாம் எமது செயற்பாடுகளைஅதியுச்ச வினைத்திறன் மிக்கதாக செய்வதற்கு சகல முயற்சிகளையும் செய்ய வேண்டும் எமது அமைப்பி;ன் சகல சொத்துக்களையும் ஆவணங்களையும், பொருட்களையும், மிகவும் நிதானத்துடனும், பொறுப்புடனும், அவதானத்துடனும் கையாளவேண்டும். இதன்மூலம் சிக்கனம் சேமிப்பு என்பன மேம்படுத்தப்படும்.
No comments:
Post a Comment