Saturday, February 9, 2013

ஸ்ரீ ராமரின் 16 நற்பண்புகள்


1. பொய் பேசாதவர்.

2. கெட்ட வார்த்தைகள் பேசாதவர்.

3. பிறர் முதலில் பேசட்டும் என காத்திருக்க மாட்டார். அவரே ஒரு புன்னகையோடு பழக ஆரம்பித்து விடுவார்.

4.சூதாட்டத்தில் ஈடுபடாதவர்.

5.தானம் கொடுத்ததை பற்றி மறந்துவிடுவார்.

6.தன் பெருமையை பற்றி சிந்திக்காதவர்.

7.ஒருவர் தனக்கு பல தீமைகள் செய்திருந்து எப்போதாவது ஒரே ஒரு நன்மை மட்டும் செய்திருந்தாலும் கூட அந்த ஓரே ஒரு நன்மையை பற்றி மட்டும் தான் பேசுவார்.

8. அவரிடம் வருபவர் எவரேனும் அவரை குறை சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து அந்த நபர் தன் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை இனிமையான சொற்களால் நீக்கிவிடுவார்.

9.அவரால் அரை வயிற்று உணவிலோ கால் வயிற்று உணவிலோ ஒரு கைப்பிடி உணவிலோ கூட திருப்தியடைய முடியும்.

10.சிற்றின்பங்களை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுபவிப்பவர்.

11.செல்வம் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர். அச்செல்வத்தை வீணாக்காதவர். செலவு செய்யும் பொழுது எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாக செலவு செய்பவர்.

12.செல்வத்தில் ஈடுபாடு உடையவராயிருப்பினும் பேருண்மையை உணர்ந்து ஆத்ம சாதனைகளை கைவிடாதவர்.

13.தன் மக்களுக்கு மட்டுமல்லாமல் சகல ஜீவராசிகளுக்கும் நன்மையையே விரும்புபவர்.

14.சீதையை தவிர வேறொரு பெண்ணை தன் வாழ்நாள் முழுவதிலும் நினையாதவர்.

15.காட்சிக்கு இனிமையான தோற்றத்தை உடையவர். அதாவது பிறர் தன்னை பார்த்து முகம் சுளிக்காத விதமாக காட்சியளிப்பவர்.

16.தன்னிடம் சரணடைந்தவர் எவராயினும் அவர்கள் குற்றங்களை எல்லாம் மன்னித்து ஆதரவளிக்க கூடியவர்.

No comments:

Post a Comment