* மனதில் எழும் உறுதியற்ற நிலையை மாற்றுங்கள். அதன் வழியாக ஆக்கும் திறனை பெறலாம்.
* உங்களின் மீது கூடுதலான நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு எந்த செயல் முக்கியம் என்று தோன்றுகிறதோ, அதை முடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்.
* சாந்தமாக இருங்கள். உங்களுடைய கோபம், தன்னலம், பயம் மற்றும் சந்தேகங்களை விட்டொழியுங்கள்.
* புதியனவற்றை கற்கும் போது மனதை காலியாக வைக்க வேண்டும். காலியான பாத்திரத்தில் பொருளை நிரப்புவதைப் போல புதிய விஷயங்களை கற்க வேண்டும்.
* உங்களுக்கு தேவையானவை எது? தேவையற்றவை எது? என்பதை அறிவதில், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* அனைத்து தரப்பையும் உற்றுநோக்கி உங்கள் கனவிற்கு உருவம் கொடுங்கள்.
* துணிவு, தெளிவு மற்றும் ஈடுபாட்டுடன் இருங்கள். உங்களுடைய கனவையும் எண்ணங்களையும், விருப்பம் இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
* நேர்மையான வாழ்வை வாழுங்கள்.
* குறிக்கோள், பணி, கற்பனை, வாழ்க்கைத்தொழில் உள்ளிட்டவற்றின் வாயிலாக உங்கள் கனவுகளை மெருகேற்றுங்கள்.
* உங்களையும் உங்கள் கனவையும் முழுமையாக நம்புங்கள்.
* உங்கள் வழியில் வரும் நல்ல சந்தர்ப்பங்களை தவறவிடாதீர்கள்.
மேற்கூறிய சில வழிகளை பயன்படுத்தி, உங்கள் கனவுகளை உணருவதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் வழியையும் அறியலாம்.
No comments:
Post a Comment