நேர்முகத் தேர்வு முறைகள் மூன்று வகைப்படும்.அவை
- நேர்முகத் தேர்வுக்கு முன்பு
- நேர்முகத் தேர்வின் போது
- நேர்முகத் தேர்வுக்கு பின்பு
நேர்முகத் தேர்வுக்கு முன்பு
நேர்முகத் தேர்வுக்கு முன்பு முடிந்த அளவுக்கு நாம் செல்லும் கம்பெனியின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில உதாரணங்கள்
- நேர்முகத் தேர்வு செய்பவரின் பெயர் ?
- நிறுவணத்தின் அமைப்பு முறை ?
- நமக்கு எந்த பிரிவில் ஆர்வம் ?
- அந்த கம்பெனியின் வெளியீடுகள்/வேலை/உதவிகள் ?
- பயிர்ச்சி முகாம்கள் ?
- கம்பெனியின் எதிர்காலத் திட்டங்கள் ?
- எவ்வளவு காலமாக அந்த தொழிலில் உள்ளனர் ?
- வாடிக்கையாளர் விபரங்கள் ?
- நேர்முகத் தேர்விற்கான சில கேள்வி முறைகள்
- உங்களைப் பற்றிய அறிமுகம்
- உங்களின் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் என்ன?அவற்றை அடையும் முறைகள்?
- வேலையில் சேர்ந்த பின் நீங்கள் அடைய நினைக்கும் இடம்?
- அடுத்த 10வருடத்தில் அடைந்து விடுவீர்களா?
- இப்பொழுதிலிருந்து வரும் 5வருடத்தில் உங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
- என்ன பெரிதாக சாதிக்க நினைக்கிறீர்கள்?
- 5வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க நினைக்கிறீர்கள்?
- உங்களின் பெரிய பலம் மற்றும் பலகீன்ம்?
- நாங்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்ததின் காரணம்?
- இதில் சாதிப்பதற்கான தனிச்சிறப்பு?
- உங்களின் வெற்றியை எவ்வாறு வரையறுப்பீர்கள்?
- எங்கள் நிறுவணம் பற்றி தெரிந்த்தது என்ன?
- எங்கள் நிறுவணத்தில் நீங்கள் இந்த இடத்தை,தேர்ந்தெடுத்ததின் நோக்கம்?
- எங்கள் நிறுவணத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்கு எவ்வாறு இருக்கும்?
- மேலாளரிடம் இருக்க வேண்டிய தகுதிகள்?
- மேற்பார்வையாளருக்கும்,அவருக்குக் கீழ் உள்ளவருக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்.?
- வேலையில் ஏதேனும் முன் அனுபவம் உண்டா?அங்கிருந்து வெளியேறியதன் காரணம்?
- பணி மாற்றத்திற்கு சம்மதமா?இல்லையா?பயணம் செய்யும் ஆர்வம் உண்டா?
- குறைந்தது 6மாதம் பயிற்சி பெறுபவராக இருக்க முடியுமா?
- ஏதாவது புதிய முயற்சிகள் எடுத்ததுண்டா?
- ஏதாவது பிரச்சனைகளை சந்தித்ததுண்டா?அதனை எப்படி தீர்த்து வைத்தீர்கள்?அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம்?
கம்பெனி எதிர்பார்ப்புகள்
ஒவ்வொரு கம்பெனியும் வேலைத் தேடி வருபவர்களிடம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும்.வேலை தேடி செல்பவர்கள் அதனை பூர்த்தி செய்வது போல் பதில் சொல்ல வேண்டும்.
ஆடை அணியும் முறை
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எப்பொழுதும் அவரவருகுப் பொருத்தமான ஆடைகளையே அணிய வேண்டும்.ஏனெனில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆகிவிடக்கூடாது.பொதுவாக பெண் எனில் புடவை அல்லது சரியான சுடிதார் மற்றும் குறைவான உயரம் உள்ள காலணிகளை அணிய வேண்டும்.ஆண் எனில் முழுக்கை சட்டையும்,நெக் டை மற்றும் நல்ல காலணிகளை அணியவேண்டும்.மேலும் ஆடை அணியும் போது நாம் செல்லும் கம்பெனியைப் பொருத்தும் அணியவேண்டும்.(உ.ம்) ஒரு விளம்பர நிறுவணத்திற்கு செல்லும் போது அதற்கு ஏற்ப நல்ல புதுமையான உடைகளை அணிய வேண்டும்.ஆடைகளை நன்கு துவைத்து,தேய்த்து உடுத்தவும்.தலையை நன்றாக வாரிச் செல்லவும்.காலணிகளை நன்றாக பூச்சி செய்து அணியவும்.கைக் கடிகாரம் கட்டாயம் அணியவும்.பேனா,பேப்பர்,பேடு போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.
நேர்முகத் தேர்வின் போது நேர்முகத் தேர்வில் பேசத் துவங்கும் முன் கவணிக்க வேண்டிய சில விஷயங்கள்
கைக்கொடுப்பது
நேராக நிற்கவும்,நிமிர்ந்து உட்காரவும் வேண்டும்
பதற்றதில் வேண்டாத அங்க அசைவுகளைக் கொடுக்கக் கூடாது.உ.ம் முடியைக் கோதுவது,பேனா மூடியை திறந்து மூடுவது,கால் தேய்ப்பது போன்றவை
நேருக்கு நேராகப் பார்க்க வேண்டும்
கை அசைத்துப் பேசுவது இயற்கையாக இருக்க வேண்டும்
அமரும் இருக்கையில் தேர்வு செய்பருக்கு எதிரில் செளகர்யமாக அமரவும்.
அவருக்கு நேருக்கு நேராக அமர்ந்து,அவர் கேட்கும் கேள்விகளை நன்கு கவணித்து பதிலலிக்கவும்
பதற்றத்தினால் ஏற்படும் சில சுபாவங்களைத் தவிர்க்க வேண்டும்
தெளிவாகப் பேச வேண்டும்.நல்ல இலக்கண முறையோடும்,தோழமையானக் குரலோடும் பேச வேண்டும்.ஆம்,இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலலிக்காமல்,முடிந்த வரை விளக்கமாக பதில் கூறவும்
ஆர்வத்தோடும்,நேர்மறையான எண்ணங்களோடும் பதிலலிக்கவும்
நாம் ஏதாவது கேள்வி கேட்பதாக இருந்தால்,அந்த இடத்திற்கு ஏற்றதாகக் கேட்க வேண்டும்.கேட்பவரின் நேர்த்தை வீணடிக்கக் கூடாது
பதில் கொடுக்கும் போது,நன்குத் தெளிவாகவும்,கவனமாகவும் கூறவும்.தேவைக்கேற்ப சில உதாரணங்களையும் கொடுக்கலாம்.நேர்மையாக பதிலலிக்கவும்.தெரியவில்லை என்றால், தெரியவில்லை என்று கூறுவதே சிறந்தது
நேர்முகத் தேர்வின் போது எப்பொழுதும் முழு பனித்திறன் உடையவராகவே இருக்க வேண்டும்.நம்முடைய சொந்த விஷியங்களைப் பற்றி எதுவும் பேச்க் கூடாது.பேசும் போது ஓரளவிற்கு வடிகட்டியே பேச வேண்டும
நேர்முகத் தேர்வுக்கு பின்பு
நேர்முகத் தேர்வுக்கு முடிந்த உடன் எப்பொழுதும் நன்றி சொல்லவும் நேர்முகத் தேர்வு முடிந்த அடுத்த நாள் முறையாக ஒரு கடிதம் எழுதலாம்.அதில் நேர்முகத் தேர்வு நடத்தியவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதலாம்.நம்முடைய் ஆர்வத்தையும் தெரியப்படுத்தலாம் ஒரு வேளை நீங்கள் தேர்வாகவில்லை என்றாலும்,உங்களுக்கு அந்த கம்பெனியில் சேரும் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து நேர்முகத் தேர்வாளரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளவும் வேலைக் கிடைக்க வில்லையெனில் வருத்தப்பட்டு ஓரிடத்தில் நின்று விடாமல்,தொடர்ந்து அடுத்த முயர்ச்சியை எடுக்கவும்.தோல்வியே வெற்றிக்கு வழி.
தொலைப் பேசி மூலமாக நேர்முகத் தேர்வு
இந்த முறை நேர்முகத் தேர்வானது தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புதிய சாதனையாகும்.இந்த முறையில் நேர்காணலுக்கு செல்லும் முன் சில திறமைகளை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தகவல்களைப் பறிமாறிக் கொள்ளும் முறை(பேசும் திறன்)
விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட பொருளில்/விஷயத்தில் கூர்மையான அறிவினைக் கொண்டிருத்தல் அந்த நேரத்திற்கான புத்திசாலித்தனம் தொலைப் பேசி மூலமாக நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் முறை பேச ஆரம்பிக்கும் முன்பு கம்பெணி பற்றிய அடிப்படை விஷியங்களையும்,தேர்வு செய்பவரின் பெயர்,பதவி போன்றவற்றை தெளிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும்
உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைக் கொடுக்கவும்
பதில் கொடுக்கும் முன் உங்களின் கவணம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும் பதற்றப் படக் கூடாது.ஏனெனில் பதற்றமானல் குரலில் தடுமாற்றம் ஏற்படும் தெளிவாகவும்,சுருக்கமாகவும் பேச வேண்டும் கேட்கப்படும் கேள்வி சரியாகப் புரியவில்லையெனில் மீண்டும் தெளிவாகக் கேட்டு பதிலலிக்க வேண்டும் உங்களின் பதிலை யோசித்து வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாகக் கூறலாம் இது போன்று நேர்முகத் தேர்விற்கு செல்லும் முன் வீட்டிலேயே அடிக்கடி பேசிப் பார்க்கலாம்
No comments:
Post a Comment