Wednesday, February 20, 2013

செயற்திறன் மிக்க தலைமைத்துவத்தின் பண்புகள்


தலைமைத்துவம் என்பது ஒரு குழுவை நிர்ணயிக்கப்பட்டதோர் இலக்கை நோக்கி வலுக்கட்டாய மற்ற வழி முறைகளைப் பின்பற்றி உற்சாகமூட்டி நகர்த்திச் செல்கின்ற செயற்பாடு ஆகும்.ஓர் இலக்கை அடைந்து கொள்ள விரும்புகின்ற ஒருவருக்கு பின்வரும் விசேட திறன்கள் தேவைப்படுகின்றன.

1. சமயோதிசமான முறையில் தீர்மானங்கள் மேற்கொள்ளும் ஆற்றல்

2. மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துரைக்கும் ஆற்றல்

3. பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல்

4. பகிர்ந்து கொடுக்கின்ற ஆற்றல்

5. முரண்பாடுகளில் உடன்பாடு கண்டு செப்பனிடுகின்ற ஆற்றல்

அடிப்படைப் பண்புகள் தலைமைத்துவ வீச்சுக்கு ஏற்ப இப்பண்புகளின் பயன்படு வீதம் வேறுபடலாம்.

1. இடைத் தொடர்பு தலைமைத்துவம் தான் சரியெனக் கண்டதொரு வேலையைச்செய்து கொள்வதற்காக மற்றவர்களைப் பயன்படுத்துகின்றபோது தலைமைத்துவம் நிகழ்கிறது.

2. அணித் தலைமைத்துவம்

குறிப்பிட்டதோர் இலக்கை அடைந்து கொள்வதற்காக அல்லது பணியை நிறைவேற்றிக் கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இக்குழுக்கள் காலப்போக்கில் சமூகத்தின் போக்கில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய சமூகத் தலைமைத்துவங்களாக மாற்றம் பெறுகின்றன.

3. அமைப்பு ரீதியான தலைமைத்துவம்

இவ்வகைத் தலைமைத்துவத்தின் வீச்சானது ஒவ்வோர் அமைப்பினதும் அளவு, பயனாளிகள், முதலீடு, கட்டமைப்பு என்பவற்றுக்கேற்ப வேறுபடலாம்.

4. சமூக தலைமைத்துவம்

சமூகத்தின் புனர்வாழ்வு, சீர்திருத்தம், மேம்பாடு, கொள்கை, புரட்சி, போராட்டம் போன்றவற்றோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது.

வரலாறு கூறும் தலைவர்களில் அதிகமானோர் சமுதாய மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தியவர்களே தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதை நோக்கலாம்.

இலட்சியம்

இலட்சியம் என்பது ஒரு மனிதன் அல்லது ஓர் அமைப்பு எதிர்காலத்தில் தான் எய்த வேண்டும் என்று ஆசிக்கின்ற அதிகபட்ச எதிர்பார்க்கையாகும்.

இரத்தினக்கல் தேடிப் புறப்பட்ட ஒருவனுக்கு அவனது பார்வையில் படுகின்ற ஒவ்வொரு கல்லும் அவனை எவ்வாறு சிந்திக்க வைக்குமோ அதேபோல ஓர் இலட்சிய வாதிக்கு அவன் சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தனது இலட்சியத்துக்கான வாய்ப்பு களாகவும் வளங்களாகவும் புலப்படும் ஒவ்வொரு சந்திப்பையும் பெரும் பாக்கியமாகவே அவர் கருதுவார்.

ஒரு சிறந்த தலைவரிடம் காணக்கூடிய சிறந்த பண்பு தன்னுடன் இருப்பவர்கள் வித்தி யாசமான அபிப்பிராயங்களுடன் இருந்த போதிலும் அனைவரையும் இலட்சியத்தின் அடிப்படையில் இலகுவில் இணங்கவைக்க முடியுமாக இருப்பதாகும்.

தான் இனங்கண்டு கொண்ட வாய்ப்புகளையும், வளங்களையும் அதற்கமைய ஒழுங்குபடுத்திக் கொள்வார்.

ஒவ்வொரு செயற்திட்டமும் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவுகளைத் தருமா? அல்லது தவறி விடுமா? என்பதில் மிகவும் கண்காணிப்போடு இருப்பார்.

செயற்திட்டங்களின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய அளவீடுகளை அடையாளப்படுத்தி மீள்பரிசீலனை செய்துகொண்டே இருப்பார்.

செயற்பாட்டில் குறைகள், பின்னடைவுகள் ஏற்படுகின்றபோது அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை இனங்காண்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவை மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வார். எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

தலைமைத்துவத்துக்குரிய அடிப்படைப்பண்புகள்

1. இலட்சியம் பற்றிய தெளிவும் உறுதியும்

2. செயலூக்கம் தனது சிந்தனையால் சரி கண்டதொரு கருத்தை அல்லது பணியை கிடைக்கப் பெறுகின்ற வளங்களைப் பொருத்தமான முறையில் உபயோகித்து செயலினால் உண்மைப்படுத்தக்கூடிய தகைமை.

3. சவால்களை எதிர்கொள்ளல் திறன், ஒருவரால் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு பணியினதும் வெற்றி அவர் பெற்றிருக்கிற திறன்களில் பெருமளவு தங்கியிருப்பதை அவதானிக்கலாம்.

திறன்களை மூன்று தலைப்புகளில் வகைப்படுத்தி நோக்கலாம்.

1. பிறப்புரிமைத் திறன்கள் தனது பிறப்புடன் சுமந்து வருகின்ற திறன்கள்

2. தொழில்சார் திறன்கள் தனது தொழிலை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற திறன்கள்.

3. ஆளுமைத் திறன்கள் பிறரைத் தன்பக்கம் ஈர்ப்பதற்கான அல்லது பிறர் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான ஆற்றல் தலைமைத்துவம் என்பதை உறுதிப்படுத்துவோம்.

No comments:

Post a Comment