* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் விதத்தில் வாழுங்கள்.
* அறிவோடு ஒன்றிவிடும்போது தான் பிழைகளைப் போக்க முடியும். இந்த முடிவை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.
* தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.
* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு உண்டு. அதனால் வேண்டியதை ஏற்கவும், வேண்டாதவற்றை தள்ளவும் செய்யுங்கள்.
* கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.
* ஒன்றைப் பெற்றுக் கொள்பவனுக்குப் பெருமைஇல்லை. கொடுப்பவன் தான் பேறு பெற்றவனாகிறான்.
அன்புதான் வாழ்க்கை
* உன் உடலில் விழுந்த ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்திரு, இது போன்ற ஆயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.
* நமக்கு நாமே நன்மை செய்து மோட்சத்தை அடைவதைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்து, ஆயிரம் நரகங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை.
* "சமயம்' என்ற பெரிய கறவை மாடு பல முறை உதைத்திருக்கலாம். ஆனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். காரணம் கறவை மாடு அதிகம் பால் தருகிறது. இதனால் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.
* துணிந்து செயல்படுங்கள். எதையும் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பாட்டில் இறங்குங்கள்.
"முடியாது' என்ற வார்த்தையை அகராதியை விட்டு அகற்றுங்கள்.
- விவேகானந்தர்
சுறுசுறுப்பாகத் திகழுங்கள்
* நம்முடைய உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் விஷம் என ஒதுக்கிவிட வேண்டும்.
* பிறருடைய தவறு எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் அதுபற்றி பேசக்கூடாது. அப்படிச் செய்வதனால் நீங்கள் அவனுக்கு கேடு செய்வதுடன், உங்களுக்கும் கேடு ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான், அவனே உலகில் நன்றாக வாழ தகுதியுள்ளவன்.
* எதிலும் பரபரப்பு தேவையில்லை, ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை.
* கீழ்ப்படிதல், முயற்சியுடைமை, செயலாக்கம் ஆகிய மூன்றும் இருந்தால், ஒருவன் வெற்றி பெற்று முன்னேறுவதை எதனாலும் தடுக்க முடியாது.
* உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும் சாதித்தவர்கள் உங்களையும் என்னையும் போன்று மனிதர்களே. வீரம் மட்டுமிருந்தால் நம்மைப் போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும்,
* இயந்திரங்கள் மனித சமூகத்திற்கு சுகத்தைக்
கொடுத்தவையுமல்ல, கொடுக்கப் போவதுமில்லை.
வலிமை குறித்து சிந்தியுங்கள்
* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.
* அறிவுச்சுரங்கத்தை திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடு மட்டுமே. மன ஒருமையால் இயற்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும்.
* கடவுளின் குழந்தைகளான நீங்கள் வலிமை உடையவர் என்று நினைத்தால் வலிமை படைத்தவர் ஆவீர்கள்.
* பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* மனிதனிடம் மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது கல்வி. முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவியை தானாகப் பெற்று மகிழ்வீர்கள்.
* அனைத்து தேவைகளை நிறைவேற்றவும், அனைத்து துன்பங்களையும் நீக்கும் பேராற்றல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உணருங்கள்.
நல்லகாலம் வருகிறது
* சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.
* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.
* சுயநலத்துடன் வாழாமல், "நான் அல்லேன் நீயே' என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.
* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.
No comments:
Post a Comment