மனிதனின் சக்தி நிலை
மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை. எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன.மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான்.
அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும்.ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
1.மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.
2.சுவாதிஷ்டானம்: உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.
3.மணிப்பூரகம்: உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
4.அநாகதம்: இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.
5.விசுக்தி: என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.
6.ஆக்ஞை: இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.
7.சஹஸ்ரஹாரம்: இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுஇல் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது.ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல. ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும்.
உடலியலில் ஆசனங்கள் ஆசனங்களும் உடற் பயிற்சிகளும் ஏனைய உடற்பயிற்சிகளில் எல்லாம் சிறந்தவையாக உடலாசனங்கள் என்ற யோகாசன உடலாசன முறைகள் இன்று எண்ணிலடங்கா ஆசன வகைகளை கொண்டதாக பெருகி வருவது ஆராயப் பட வேண்டிய விஷயமாகும். இயல்பாக மனித ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆண்களானாலும், பெண்களானாலும் அமர்ந்து , எழுந்து, நடந்து, கிடந்து, ஓடி, ஆடி, எந்த வித விஞ்ஞான கருவிகளையோ, வாகனங்களையோ உபயோகிக்க அவசியம் இன்றி இருக்க முடியுமானால், மனிதன் அல்லாத ஏனைய உயிரிகளைப் போல நாமும் நலமுடன் வாழ்ந்திட முடியும். இந்த நவீன காலத்தில் எவரும் அவ்வாறு வாழ்ந்திட இயலாத போது , உடலாசனம் ஒன்றே ( யோகாசனம்) போன்ற மனித உயிர்களுக்கு நீண்ட வாழ்நாளையும், நோயில்லா உடலையும் தரும் அரும் சஞ்சீவியாகும். தற்காலத்திய பல நூறு ஆசனங்களில் இருந்து தேவையற்ற ஆசனங்களை நீக்கி ஆசன முறைகளை வரிசைப் படுத்தி உடல்வாகுக்கு ஏற்ற ஆசனங்களை தேர்வு செய்தும் எதிராசனம் போன்ற தவறான பழங் கொள்கைகளை தவிர்க்கும் மனித உடல் அமைப்புகளை ஆசன யோக விஞ்ஞானத்தை நம் முன்னோர்கள் (ரிஷிகள்) கூறியபடி வழி வழியாக வந்த குருமார்கள் உபதேச முறைப்படி அனுபவ பாடமாக இருக்கும் என்பதை தெளிவுப் படுத்துகிறோம்.
மனித உடல் உறுப்புகளை 9 மண்டலங்களாக பிரிக்கலாம்.
1.உடல் மண்டலம்
2. மூச்சு மண்டலம் 3. இரத்த மண்டலம்
4. சீரண மண்டலம்
5. எலும்பு மண்டலம்
6. நரம்பு மண்டலம்
7. தசை மண்டலம்
8. கழிவு மண்டலம்
9. நாளமில்லா சுரப்பி மண்டலம் ( Endocrine )
மேற்குறித்த 9 மண்டலங்களும் சரியான தொகுக்கப் பட்ட சீரான ஆசனங்களால் கட்டுப் படுத்தப்படுவதோடு அவைகளுடைய வளர்ச்சியினையும், செயல்பாடுகளையும் மனித ஆயுட்காலம் வரை அவற்றின் சோர்வில்லாத இயக்கத்தையும் உடலாசனங்கள் வழங்கக் கூடும். மனித உடலுக்கு ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும், இருப்பவை எலும்புகளே உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம். உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு துணை புரிபவையும் எலும்புகளே. உடலில் உள்ள 7 தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும், பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே. முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்ட மற்றும் அவ்வப் போது உருவாகும் தீர்மானங்களை செயல்பட வைப்பதற்கும், ஒவ்வொரு அணு செயல்படுகாளையும் தன் கட்டுபாட்டில் வைத்து பராமரித்து வருவதோடு , உயிர் இயக்கம் (தன்னிச்சை செயல்பாடு, அனிச்சை செயல்பாடு) என இருவகை கேந்திர செயல்பாட்டின் செயலக மையமாக விளங்கி வருவதற்கும் யாவற்றிற்கும் மேலாக அறிவு, புத்தி, சித்தம், என்ற மன தளத்தின் அதிபதியாக நுட்ப செயல்பாடுகளின் அதிக பட்ச தலைமையமாக விளங்கிடும் மூளை என்ற மிக நேர்த்தியான உறுப்பினை பாதுகாக்கும் பெட்டகமாக விளங்குவது எழும்பினால் ஆன மண்டை ஓடே ஆகும். (தலைஎலும்புகள் 8 ).
மனிதன் மனிதனாக வாழவும் அதில் சிறந்ததோர் மாமனிதனாக வாழவும், அனுபவம் நிறைந்த ஆற்றல் மிகுந்த பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய மகான்கள் பலர் நிறைய வழி முறைகளை சொல்லியுள்ளனர். அதன்படி வாழ்ந்த மனிதர்கள், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள், வாழப் போகும் மனிதர்கள் என முக்கால மக்களுக்கும் ஏற்ற வகையில் வாழ வழிகண்டுள்ளனர் மகான்கள். இவைதான் வாழ்க்கை நெறிமுறைகள் ஆகும்.இந்த நெறிமுறைகள் மத, இன, மொழிக்கு அப்பாற்பட்டு தத்துவ விளக்காக அமைந்திருக்கின்றன. இவை பெரிய மகான்கள் வாழ்ந்து அனுபவித்து புரிந்துகொண்ட உண்மைகளாக இருக்கின்றன. இந்த வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை தவறவிட்டவர்கள். இவர்களின் வாழ்க்கை மனித வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு மிருக வாழ்க்கையாக மாறியுள்ளது.ஆனால் மேலான தத்தவங்களையும், சாஸ்திரங்களையும் படைத்து அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் ஒரு மனிதன் செம்மையாக வாழ மனம், உடல், ஆன்மா இம்மூன்றும் சீரான நிலையில் இயங்கவேண்டும். அப்படி இயங்கினால்தான் மேற்சொன்ன வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியும், ஆத்மாவை உணர முடியும் என்கின்றனர் சித்தர்கள் (சித்தம் அடைந்தவர்கள்). மனதையும் உடலையும் வலுப்பெறச் செய்ய பிரபஞ்ச சக்தியை ஆட்கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர். பொதுவாக சூரியனை சுற்றி கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கோள்களுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டு கோள்களின் இயக்கத்தினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பல சாஸ்திரங்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர். இந்த வகையில் வந்ததுதான் வான சாஸ்திரம். கோள்கள் அதனதன் நிலையிலிருந்து அனைத்து ஜீவராசிகளையும் இயக்குகிறது. ஆகையால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் மாறுபட்டு காணப்படுகிறான்.மனம், புத்தி, உடல் மாறுபடாமல் சீராக இருக்க பிரபஞ்ச சக்தி அவசியம் தேவையாகும். உடலுக்கு நல்ல எண்ணங்கள் நல்ல புத்தி கிடைக்க பிரபஞ்ச சக்தியை ஆக்க பலனாக மாற்றினால் தான் முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச சக்தியைப் பெற தியானம், சரநிலை சுவாசம் மூலம் தான் முடியும் என்கின்றனர். சரநிலை சுவாசம் பற்றி கடந்த இதழ்களில் விரிவாக அறிந்துள்ளோம்.சரநிலை சுவாசத்தை நல்ல முறையில் கடைப்பிடித்தால் அது உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைக் கொடுத்து இதயத்தைப் பலப்படுத்தும்மேலும் நல்ல மன நிலையைக் கொடுத்து உடலுக்கு சக்தியை பெறச் செய்கிறது. இதனால் தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மனிதன் சிறப்பாக வாழ வழி செய்கிறது. சரநிலை சுவாசத்தை பின்பற்றும் போது உடல் வலுப்பெற்று மனம் அமைதி அடைகிறது. தெளிவுற்ற மனமே நோயற்ற உடலைத் தரமுடியும். இந்நிலை சரசுவாசத்தினால் முடியும்.சரசுவாசத்தின் மூலம் பிரபஞ்ச சக்தி பெற்றவர்களால் தான் கோள்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும். கோள்களின் ஆதிக்கம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. இதைத்தான் விதி என்கிறார்கள். மனிதன் பலமுயற்சி செய்தும் வெற்றிபெற முடியாத நிலைக்கு விதி என்கிறான். மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சக்தியை விதி எனக் கூறுகிறான். ஆனால் சரசுவாசம் மூலம் கோள்களின் ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மாற்றி பல நன்மைகளை பெற முடியும் என்கின்றனர் சித்தர்கள். சரசுவாசம் மூலம் பிரபஞ்ச சக்தியை அடைந்து கோள்களின் ஆற்றலான விதியை மாற்றலாம். இந்த கோள்களின் ஆதிக்கத்தை பற்றி கவலைப்படாமல் அதன் போக்கையே மாற்றிக் காட்டியவர்கள் சித்தர்கள்.
“நாள் என்னசெய்யும் கோள் என்ன செய்யும்
நாதன் உள்ளிருக்கையிலே”
நாதன் என்பது சரநிலை சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிரபஞ்ச சக்திதான் என்கின்றனர் சித்தர்கள். மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈசா யோக மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”. சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள்.தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவற்றை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது. இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான். மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை.சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள். சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு. எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம்.
No comments:
Post a Comment