Tuesday, September 29, 2015

என்ன தொழில் செய்யலாம்!

என்ன தொழில் செய்யலாம்!
உழைக்கத் தயார் என்றால் வெற்றி நிச்சயம். குறைந்த செலவில் தொழில் ஆரம்பித்து பிறகு பெரிய அளவில் செய்தால்

உழைக்கத் தயார் என்றால் வெற்றி நிச்சயம். குறைந்த செலவில் தொழில் ஆரம்பித்து பிறகு பெரிய அளவில் செய்தால் நம்மால் எதையும் சமாளிக்க முடியும். மேலும் மிகப் பெரிய முதலீடும் தேவையில்லை. நமது கை விரல்கள் பத்தும் இயற்கை நமக்களித்த மூலதானம்தானே. இன்றும் ரூ.500 முதலீட்டில் செய்யக்கூடிய சிறு தொழில்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்:

பட்டுப் புடவை குஞ்சம்: பட்டுப்புடவையில் மணி வைத்து குஞ்சம் கட்டுவது தற்போது அனைவராலும் மிகவும் விரும்பக் கூடிய ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டு பெண்களிடையே பட்டுப்புடவை இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். முதலில் உங்கள் பட்டுப் புடவையில் குஞ்சம் இருப்பதைப் பார்த்தாலே அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஆர்டர் தருவார்கள். இது வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் செய்யக் கூடிய தொழிலாகும். இதற்கு பட்டு நூல் மற்றும் விதவிதமான மணிகள் தேவை.
 
கம்பி பொம்மை: கம்பி, பஞ்சு, உல்லன் நூல் ஆகியவற்றைக் கொண்டு செய்யக் கூடிய பொம்மைகள் இவை அலங்காரப் பொருளாகவும், பரிசுப் பொருளாகவும், நவராத்திரி, வரிசை தட்டு, கல்யாண சீர்வரிசை என அனைத்துக்கும் பயன்படுகிறது. ஆகவே இதையும் தொழிலாக செய்யலாம்.
 
பேப்பர் பை தயாரித்தல்: பேப்பர் பேக், தாம்பூல பை, வாட்டர் பாட்டில் பேக், மெடிக்கல் கவர், ஆபீஸ் கவர் என விதவிதமாக செய்யலாம். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இவை உள்ளதால் இவற்றுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
 
பேப்பர் நகை தயாரிப்பு: தற்போது கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் விதவிதமாக, கலர் கலராக லேசாக உள்ள நகைகளை அணியவே விரும்புகிறார்கள். இதனால் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
 
இன்ஸ்ட்ன்ட் பொடி, மசாலா பொடி: திடீர் புட்டு, பாயாசம், பொங்கல் இவற்றுக்கு தேவையான பொருள்களைக் கொண்டு வீட்டிலிருந்தே செய்யலாம். சாம்பார் பொடி, பிரியாணி மசாலா போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்யலாம்.
 
அப்பளம், வற்றல்: இது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இருந்தாலும் இதை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. ஆதலால் அப்பளம், வற்றல் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம், நல்ல லாபம் கிடைக்கும்.
 
ஹெர்பல் சீயக்காய், குளியல் பவுடர், பேஸ் பேக்: பூலாங்கிழங்கு, முல்தானி மட்டி, வேம்பாலம் பட்டை, வெட்டி வேர், ரோஜா இதழ் ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இயற்கை பொருள்களை கொண்டு தயாரித்து விற்பனை செய்யலாம்.
 
பினாயில், சோப் ஆயில்: தினசரி அனைவரும் பயன்படுத்தும் பொருள். இதற்கு தேவை இருந்து கொண்டே இருக்கும். இதனையும் தொழிலாகச் செய்யலாம்.
 
குங்குமம், மஞ்சள் தயாரிப்பு: கோவில்கள் உள்ள இடத்தில் அதிகமாக விற்பனையாகும் பொருளாகும். உடலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை பொருள்களைக் கொண்டு தயாரித்து விற்கலாம்.

பருத்திப் பால்: உடல் ஆரோக்கியத்திற்கும், டீ, காபி ஆகியவற்றிற்கு மாற்றாகவும் உபயோகிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது. மாலை நேரங்களில் பகுதி நேரமாகவே செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்

No comments:

Post a Comment