Wednesday, September 9, 2015

வெற்றி மொழி: கலீல் ஜிப்ரான்

வெற்றி மொழி: கலீல் ஜிப்ரான்
1883-ஆம் ஆண்டு பிறந்த கலீல் ஜிப்ரான் ஒரு லெபனானிய அமெரிக்கர். கவிதை, எழுத்து, ஓவியம், சிற்பம் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளில் புலமை பெற்று, பல்துறை வித்தகராக விளங்கினார். லெபனானின் பஷ்ரி நகரில் பிறந்து பின் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து கல்வியையும் கற்றார்.

அரபு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் தன்னுடைய படைப்புகளை கொடுத்தார். நவீன அரபு இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். இவரது புத்தகங்கள் விற்பனையில் மிகச்சிறந்த இடத்தை பெறுவது குறிப்பிடத்தக்கது. 1931 ஆம் ஆண்டு, உடல்நலக்குறைவால் தன்னுடைய 48 வது வயதில் மரணமடைந்தார்.

நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்களை போகவிடுங்கள்; அவர்கள் திரும்பி வந்தால், எப்போதும் உங்களுக்குரியவர்கள்; திரும்பி வரவில்லையென்றால், ஒருபோதும் உங்களுக்குரியவரல்ல.

நட்பு எப்போதும் ஒரு இனிமையான பொறுப்பே தவிர அது ஒருபோதும் வாய்ப்பு அல்ல.

உண்மைக்கு மட்டுமே பணிந்து செல்லுங்கள், அழகை மட்டுமே பின்பற்றுங்கள், அன்பிற்கு மட்டுமே கீழ்படியுங்கள்.

மனிதனின் கண்கள் மைக்ரோஸ்கோப் போன்றது, இந்த உலகை உண்மையைவிட பெரிதாகவே காட்டும்.

வாழ்க்கையின் இரண்டு தலைமை பரிசுகள், அழகு மற்றும் உண்மை. முதலாவது அன்பான இதயத்திலும், இரண்டாவது தொழிலாளியின் கையிலும் காணப்படுகிறது.

பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது.

அன்பு இல்லாத வாழ்க்கை என்பது, பூக்கள் அல்லது பழங்கள் இல்லாத மரத்தினைப் போன்றது.

நம்முடைய மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கு முன்பாகவே நாம் அவற்றை தேர்வு செய்துவிடுகிறோம்.

உங்கள் இதயம் ஒரு எரிமலையென்றால், அதில் பூக்கள் பூக்கும் என்பதை நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?

நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.

இரண்டு தோட்டங்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள சுவர் போன்றது துன்பம்.

No comments:

Post a Comment