எதையும் கற்றுக்கொள்ளலாம்
எப்போதும் கற்றுக்கொள்ளும் தயார் நிலையில் உங்கள் மனதை வைத்திருந்தால், நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையின் கையிருப்பில் இருப்பதோ ஏராளம். நமக்குத்தான் பெற்றுக்கொள்ள நேரமும் இல்லை.. மனமும் இல்லை.
ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் பார்க்க வேண்டி, லிப்கோ அகராதியை புரட்டினேன். ஒரு பக்கதில் இருந்த வாசகங்கள் என்ன மிகவும் கவர்ந்தன. இவைதான் அந்த வாசகங்கள்:
“ஒரே ஒரு கருத்தைத் தெரிவு செய்யுங்கள்.அதையே உங்கள் வாழ்வாகத் தீர்மானியுங்கள்.
அது பற்றியே சிந்தியுங்கள்; அதையே கனவு காணுங்கள். அதற்காகவே வாழுங்கள். உங்கள் மூளை, தசைகள் நரம்புகள்… ஏன்..உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் அக்கருத்தே நிரம்பியிருக்கட்டும்.மற்ற எல்லாக் கருத்துக்களையும் ஒதுக்கி விடுங்கள்.இதுவே வெற்றிகான் வழி”
இந்த இணையற்ற மந்திர வரிகளைச்சொல்லயிருந்தவர் வீரத்துறவி விவேகானந்தர்.சுவாமிகளின் இச்சத்திய வரிகள் துறவிக்கு மட்டுமின்றி வாழ்வின் எல்லா நிலையில் இருப்போர்க்கும் மிகச்சரியாய் பொருந்தும்.
சிதறிய கவனத்தை, ஒரு நிலையில் குவித்து, வெற்ற காண விழைவோர் ஒவ்வொருவருக்கும் இவ்வரிகள் நிச்சயம் கரை காணாத் தோணிக்கு, கரை காட்டும் கலங்கரை விளக்கு.இவ்வைர வரிகளை பெரிதாய் எழுதி, ஒவ்வொருவரும் தங்களது இல்லங்களில் வைத்து, அனுதினமும் வாசித்து வர, எண்ணம் குவிந்து வலுப்பெறும்! செயல் துவங்கும்.
No comments:
Post a Comment