Friday, September 11, 2015

முடிவெடுக்கும் மனம் - ஓம் - ஓஷோ

முடிவெடுக்கும் மனம் - ஓம் - ஓஷோ

ஒருமுறை நீ முடிவெடுத்து விட்டால் பின் எல்லா சந்தேகங்களையும் விட்டு விடு. அதற்கு முன் அதை உபயோகி. சந்தேகத்தை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய். அனைத்து சாத்தியக்கூறுகளையும் யோசி, பின் தேர்ந்தெடு.

உறுதியில்லாத மனிதன், முடிவெடுக்க முடியாத மனிதன் சந்தேகத்தில் இருப்பான். அதுஇணைப்புணர்வுக்கு எதிரானது. ஏனெனில் இணைப்புணர்வு தன்னிடம் இணைப்புணர்வுகொள்வது. சந்தேகம் தன்மேல் நிச்சயமற்றதனம். நீ உன்னிடமே இணைப்புணர்வோடில்லை..

நீ எதை செய்தாலும் நீ அதை செய்ய விரும்புகிறாயா இல்லையா அதனுள் போவது நல்லதாஇல்லையா என்பதில் உனக்கு உறுதி இல்லை. முடிவெடுப்பது அங்கில்லை. முடிவெடுக்கும் மனம் இல்லாமல் நீ பாதையினுள் நுழைய முடியாது. நீ முடிவெடுக்க வேண்டும். தீர்மானிக்க வேண்டும். உன்னுள் எப்போதும் ஒரு பகுதி வேண்டாம் என்றே சொல்லும் போது  எப்படி முடிவெடுப்பது அது சிரமம்தான்.

உன்னால்முடிந்த அளவு யோசனை செய். எவ்வளவு நேரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு நேரம் கொடு. எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும், எல்லா விதமான மாற்று வழிகளையும்யோசித்துப் பார். பின் முடிவெடு. ஒருமுறை நீ முடிவெடுத்து விட்டால் பின் எல்லாசந்தேகங்களையும் விட்டு விடு. அதற்கு முன் அதை உபயோகி. உன்னால் என்னவெல்லாம்சந்தேகப்பட முடியுமோ அத்தனையும் செய். அனைத்து விதமான சாத்தியங்களையும்
யோசித்துப்பார். பின் தேர்ந்தெடு. ஆரம்பத்தில் அது முழுமையான முடிவாக இருக்காது. அது சாத்தியமில்லை. அது அதிகபட்சமான முடிவாக இருக்கும். உனது பெரும்பான்மை மனது சரி என்று சொன்ன முடிவாக இருக்கும்.

ஒருமுறை நீ தீர்மானித்துவிட்டால் பின் சந்தேகப்படாதே. சந்தேகம் தன் தலையை தூக்கும். ஆனால் நீ நான் முடிவெடுத்து விட்டேன். முடிந்தது. இது முழுமையான முடிவல்ல. எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற வில்லை, ஆயினும் நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு நான் யோசனை செய்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்று நீ அதனிடம் சொல்லி விடலாம்.

ஒரு முறை நீ தேர்ந்தெடுத்து விட்டால் பின் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காதே, ஏனெனில் சந்தேகம் நீ இடம் கொடுப்பதால் மட்டுமே இருக்கும். நீ அதைப் பற்றி திரும்ப திரும்ப நினைப்பதன் மூலம் அதற்கு சக்தி கொடுக்கிறாய். பின் ஒரு நிச்சியமற்ற தன்மை உருவாகிறது. முடிவெடுக்க முடியாத நிலை ஒரு மிக மோசமான விஷயமாகும். நீ மிக மோசமான நிலையில் இருக்கிறாய் என்பதைத்தான் அது காட்டுகிறது. உன்னால் எதையும் தீர்மானிக்க  முடியாத போது நீ என்ன செய்ய முடியும் உன்னால் எப்படி செயல்பட முடியும்.

ஓம். இந்த நாதமும் தியானமும் உதவக் கூடும். அது உதவும். ஏனெனில் நீ அமைதியாகமௌனத்தில் ஆழும்போது முடிவெடுப்பது எளிதாக இருக்கும். அப்போது நீ ஒரு கூட்டமல்ல,குழப்பத்தில் இல்லை. பல குரல்கள் சேர்ந்து கேட்கும்போது எது உன்னுடைய குரல் என்றுஉன்னால் அடையாளம் காண முடியாது. ஓம் என்று உச்சரி, அதன் மேல் தியானி. – குரல்கள் அமைதியாகும். பலகுரல்கள் கேட்கும்…. இருப்பினும் அவை உன்னுடையது அல்ல என்பதைஇப்போது உன்னால் பார்க்க முடியும். உனது அம்மா, அப்பா, ஆசிரியர், சகோதரர்கள் ஆகியோரின் குரல்கள் – இவை எதுவும் உன்னுடையது அல்ல. நீ அவற்றை புறம் தள்ளி விடலாம், ஏனெனில் அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை.

ஓம் என்று உச்சரித்து மௌனமாகும்போது நீ சாந்தமாக, தெளிவாக, அமைதியாக, ஒருமுகப்படுபவனாக, மாறுவாய். அந்த மோனத்தில் எது உண்மையான குரல் என்று உன்னால்பார்க்க முடியும். உன்னுள் இருந்து எழும் உறுதியான குரலை உன்னால் கேட்க முடியும்.

நீ சந்தைக்கடையில் நிற்கும்போது பலர் பேசிக் கொண்டும் பல விஷயங்கள் நடந்து கொண்டும் இருக்கும் போது என்ன நடக்கிறதென்று உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போகும். சந்தைக்கடையில் மக்கள் சத்தமிடுவர் – அவர்களுக்கு அவர்கள் மொழி தெரியும் ஆனால் உனக்கு அது என்ன என்று புரியாது. அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என நீ நினைப்பாய்.
 
அப்போது – நீ ஒரு இமயமலைபகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்குப்  போய் அங்கு ஒரு மலை குகையில் உட்கார்ந்து இருப்பதைப் போல – ஓம் என்று உச்சரிக்க ஆரம்பி. நீ நிதானமடைவதை, எல்லா பதட்டங்களும் குறைவதை, நீ ஒன்றாவதை, நீ ஒருங்கிணைவதை நீ உணர்வாய். அந்த கணத்தில் தீர்மானித்தல் சாத்தியப்படும். அப்போது முடிவெடு. பின் திரும்பி பார்க்காதே. பின் மறந்து விடு.

முடிவெடுத்தாகி விட்டது. இப்போது திரும்பி பார்ப்பது கிடையாது. முன்னோக்கி செல்லுதல் மட்டுமே.

சில சமயங்களில் சந்தேகம் நாய் போல உன்னை தொடர்ந்து வந்து குரைக்கும். அதைகவனிக்காதே, அதில் கவனம் செலுத்தாதே. மெதுமெதுவாக அது நின்று விடும். அதற்கு ஒருவாய்ப்பு கொடு, எல்லா சாத்தியங்களையும் யோசனை செய். ஆனால் ஒரு முறைமுடிவெடுத்துவிட்டால் பின் சந்தேகத்தை விட்டு விடு. ஓம் நாதம் தீர்மானம் செய்ய, ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment