உன்னால் முடியும் !
ஏதோ சிந்தனையில் இருந்த போது தோன்றிய தலைப்புதான் “உன்னால் முடியும்” .வேறுபட்ட கோணத்தில் கிறுக்குவதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அந்த அடிப்படையில்தான் இப்பதிவை எழுதுகின்றேன்.மனிதனாகப் பிறந்தால் ஏதாவதொன்றை சாதிக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை கடைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவன்தான் நான்.“ சாதிக்கப் பிறந்தவன் தான் மனிதன்” மனிதனால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று
கூட சொல்லலாம் ஆனால் கடவுளுடன் ஒப்பிட முடியாதென்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஏராளமான தோல்விகள் , அவமானங்கள் போன்றவற்றை சந்தித்த பெருமைக்குரியவன் என்று கூட என்னைச் சொல்லாம். சில வேளைகளில் தோல்விகள் என்னை முழுமையாக ஆட்கொண்ட சந்தர்ப்பங்களை நினைக்கும் போது என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு வித மாற்றத்தை உணர முடிகின்றது.
“தோமஸ் அல்வா எடிசனைப்” பற்றியதொரு ஆழ்மனப்பதிவானது நான் நம்பிக்கை இழந்து போகும் தருணங்களில் என்னுள் புகுந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம்.எடிசனின் முயற்சியை நினைத்து நான் வியக்காத நாட்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு எடிசனின் முயற்சிகள் மற்றும் தோல்விச்சரித்திரங்கள் என்னுள் மிகவும் ஆழமாக வேறூன்றியிருப்பதை என்னால் கூட சில நேரங்களில் துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்றால் அது மிகையில்லை.
எதையாவத சாதிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வேறூன்ற ஆரம்பித்தது எனது பாடசாலைப் பருவத்தில்தான்.பல்வேறு ஆசைகள் , எண்ணங்ளை சுமந்த காலங்கள் அவை.பசுமை கலந்த காலங்கள் மற்றும் நினைவுகளை சுமந்த பருவம் என்று கூட குறிப்பிடலாம்.பாடசாலைக் காலங்களில் பெருப்பாலான தோல்விகளை சந்தித்த அனுபவங்கள் மிகவும் குறைவென்றுதான் சொல்ல வேண்டும்.
தோல்விகள் என்னை புரட்டி எடுத்த சந்தர்ப்பங்களில் “ஏன்டா பிறந்தோம்?”
என்றதொரு வினாவை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.ஆழ்மனதின் அபார சக்தி என்னுள் இதன் போது வெளிப்படுத்தப்பட்டதும் என்னையறியாமலே நடந்ததொரு நிகழ்வாகக் கூட இருக்கலாம்.
“முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை” தந்தையின் அமுத மொழி அடிக்கடி என்னை விழிப்படைய வைத்த தருணங்கள் ஏராளம்.எனது வெற்றியின் பாதிப்பகுதி தந்தைக்க சமர்ப்பணமாகத்தான் செல்ல வேண்டும் என்றால் அதை மறுப்பதற்கு எனக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“உயிர் உள்ளவரை போராடு” எனக்கு நானே அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒன்று.ஏராளமான சந்தர்ப்பங்களில் என்னுடைய முயற்சிகளுக்க தக்கதொரு விளைவு கிடைத்ததில்லை என்றால் அது மிகைப்படுத்தப்படா உண்மையாகத்தான் இருக்கும்.எத்தனை முறை வெற்றி பெற்றேன் என்பதைப் பற்றி நான் நினைத்ததை விட எத்தனை முறை தோற்றுப் போனேன் என்று நினைத்த தருணங்கள் தான் அதிகம்.
தோல்விகளைக் கண்டு சோர்ந்து போன காலங்ளை நினைத்துப் பார்க்கும் போது என் மீது எனக்குக் கூட ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்படுகின்றது.தோல்விகள்தான் எனக்கு நல்லதொரு நண்பன் என்று கூறுமளவுக்கு ஏராளமான அனுபவப் பாடங்கைளை கற்றுத் தந்திருக்கின்றது.
ஆழ்மனதை ஆட்டிப் படைக்கும் சக்தியை சற்று அதிகரிக்கும் போதுதான் வெற்றியின் வாசணையை நுகர முடியும் என்பது எனது தனிப்பட்ட அனுபவக் கருத்து , இதனுடன் எத்தனை பேர் உடன்படுவார்கள் என்பதுதான் ஐயம்.

No comments:
Post a Comment