நீங்களும் மாறுவீர்கள்
எண்ணமே செயலுக்கு முன்னோடி” என் கிறார் தோமஸ் கார்லைல். ஹார்வட் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் விலியம் ஜேம்ஸ் கூறுகிறார், “என் தலைமுறையில் மிகப்பெரும் கண்டுபிடிப்பு எதுவென் றால், மனிதன் தன் மனப்பான்மையை (எண்ணத்தை) மாற்றி அமைக்க முடியும் என்பதுதான்” எண்ணம் செயல் ஆகிறது. செயல் பழக்கம் ஆகிறது. பழக்கம் வழக்கம் ஆகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
உங்கள் மனப்பான்மையை மாற்றி அமைக்க வேண்டும். மனப்பான்மை மாற மாற நீங்களும் மாறுவீர்கள். உங்கள் சூழ்நிலையும் மாறிவிடும். மாபெரும் வெற்றிபெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும். எது உண்மை என்று கவனமாக ஆராய வேண்டும். உங்கள் குறிக்கோளுக்குச் சாதகமானவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஆழ்மனம், அதன் ஆற்றல்கள், மனச்சித்திரம் போன்றவை உங்களுக்குப் புதிய செய்திகளாக இருக்கலாம்.
ஆழ்மனம் ஒரு வளமான நிலம் போன்றது. வெற்றிக்கான நல்ல எண்ணங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் பதிக்கும் போது எண்ணமாகிய விதை முளைத்துச் செடியாகி மரமாகி உங்கள் எண் ணத்திற்கேற்ற கனிகளைத் தந்தே தீரும்.
வெற்றிக்கான விதைகளை எண் ணத்தின் மூலம் நீங்களாக ஊன்றாமல் விட்டுவிட்டால் நல்ல நிலத்தில் களைகளும் முட்செடிகளும் முளை த்துப் புதராவது போன்று வாழ்க்கை யில் வறுமையும் தோல்வியுமே விளைத்துக் கொண்டிருக்கும் ஆழ்மனமாகிய நிலத்தில் நல்ல விதைகளை விதைப்பதற்குப் பயன் படும் உளவியல் உத்திதான் புத்தி.
தற்போதைய வாழ்க்கை நீங்கள் விரும்பாத நிலையில் இருக்குமா னால் அதை புத்தியால் மட்டுமே மாற்ற முடியும். பழைய பாடல் பதிவாகியுள்ள ஒரு ஒலிநாடாவில் புதிய பாடலைப் பதிவு செய்வது போன்று எதிர்மறை எண்ணங்கள் பதிவாகியுள்ள ஆழ்மனதில் ஆக் கப்பதிவுகளை பதிக்க வேண்டும்.
நல்ல லட்சியத்தை தேர்ந்தெடுங்கள். பிரார்த்தனை மூலம் ஆழ்மனத்திற்கு அனுப்புங்கள். ஆழ் மனத்திற்கு இப்பிரபஞ்சத்துடன் எங்கோ தொடர்பிருக்கிறது. ஆகவே, அது இம்முழுப் பிரபஞ்சத்தையும் துணைக்கழைத்து நம் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது. வெற்றிபெற முடியும். சாதிக்க முடியும். வளமடைய முடியும் என்று பலரால் ஏன் நம்ப முடிய வில்லை? அவர்களுக்கு நம்பிக்கையின் ஆற்றலைப் பற்றி தெரியாததே காரணம்.
மனச்சித்திரம் பார்த்தல் என்னும் உத்தியும் உங்களுக்கு வெற்றி வாழ்க் கையை அமைத்துத் தரும். ஒரு குறிக் கோளை அடைய நினைக்கிaர்கள். அதை அடைய என்ன செய்ய வேண் டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்பொழுது செய்ய வேண்டும்? எங்கே செய்ய வேண்டும்? என்றும் வினாக்களை உங்களுக்கு நீங்களே கேளுங்கள். வினாக்களுக்கு விடையாக உங்கள் எண்ணம் விரிவடையும்.
உங்களுக்கு தேவையான யோச னைகளை பெறுவதற்கு நீங்கள் மற் றவரை நம்பி இருக்கக் கூடாது. யோசனைகள் உருவாக்குவதற்காக நீங்கள் அடிக்கடி கண்களை மூடி கவனத்தை குறித்து சிந்திக்க வேண்டும். கவனத்தை குறிக்கும் போது உங்கள் மனக்கண்ணில் திரைப்படம் போன்ற தொடர் காட்சிகள் ஓடுகின்றன. சிந்தனையில் இருந்தே செயல் பிறக் கிறது. மனதில் இடம்பெறுகிற எண்ணமே செயலுக்கு ஊக்கம் தருகிற தீப்பொறி கற்பனையில் காண்கிற எதுவும் ஏற்கனவே உலகில் இருக்கிறது.
ஆகவே அதை அடையும் முழு வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது. மனச்சித்திரம் மேலும் மேலும் ஆழ்மனதில் பதிவதன் மூலம் தான் மனம் திண்மை பெறும். மனம் திண்மை பெறும்போது விரும்பிய பொருள் நம்மைத் தேடி வரும். எண்ணம் திண்மை பெறும்போது தோல்வி என்பது எதுவும் இல்லை.
காலம் சிறிது நீடிக்கலாமே தவிர நினைத்ததை அடைவது நிச்சயம். ஆழ்மனக் கட்டளை கொடுக்கும் போதே அதற்கேற்ற மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற் புதங்களை நிகழ்த்துபவராக மாறி விடுகிaர்கள். ஆழ்மன சக்தி ஐம்புலன் களால் அறியப்பட முடியாதது. “நம் பிக்கை” என்றும் ஆற்றலையும் ஐம்புலன்களால் அறிய முடியாது. ஆனால், அவற்றைப் பயன்படுத்த நல்ல விளைவுகளைக் கொண்டு அறிய முடியும். திறந்த மனதோடு தெளிந்த சிந்தனையோடு இவற்றை அணுக வேண்டும்.
கடந்த காலத்தில் நாம் பல தோல் விகளைச் சந்தித்திருக்கலாம். சோர்ந்து போயிருக்கலாம். ஆயினும் மீண்டும் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு எண்ணத்தையும் செயல் பாட்டையும் மாற்றி அமைத்துவெற்றி அடைய நம்மால் முடியும்!
No comments:
Post a Comment